- · 5 friends
-
I
வீட்டில் பிரதான கதவு சிறப்பானதாக அமைய வழிமுறைகள்
வீட்டு நிலை கதவு என்பது வீட்டுக்குள் நுழைவதற்கான முதல் கதவு மட்டுமல்ல வீட்டிற்குள் சந்தோசம் நேர்மறை எண்ணங்கள் நேர்மறை ஆற்றல் நிம்மதி செல்வம் அதிர்ஷ்டம் அனைத்தையும் உள்ளே எடுத்துச் செல்லும் தலைவாசல். ஆதலால் தலைவாசல் வாஸ்து பிரகாரம் எவ்வாறு அமைக்கலாம் என்பதை கட்டிட அமைப்பாளர்களைக் கொண்டு தீர்மானித்து முன் ஆலோசனையோடு வாஸ்து சாஸ்திரங்களை கடைபிடித்து பிரதான கதவை அமைப்பது சால சிறந்தது.
பிரதான வாசல் சிறப்பானதாகவும் வாஸ்துகளை கடைபிடித்து உருவாக்கப்பட்டதாகவும் இருந்தால் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் அதிர்ஷ்டத்தையும் மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் தருகிறது. வெளியில் இருந்து உள்ளே வரும் முதல் நுழைவாயில் என்பதாலும் மற்றும் வெளியில் இருந்து வரும் வெளி ஆட்கள் அனைவருக்கும் ஒரு அழகான தோற்றத்தை தருவதும் நிலைக்கதவு தான்.
பிரதான வாயிலின் கதவுகள் கிழக்கு, வடக்கு, வட கிழக்கு, மேற்கு நோக்கி அமைந்திருப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. தெற்கு, தென்மேற்கு, வட மேற்கு மற்றும் தென்கிழக்கு திசையை நோக்கி உள்ள பிரதான வாயில் அமைந்திருப்பதை தவிர்த்தல் நல்லது.
தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தெற்கு, தென்மேற்கு, தென்கிழக்கு பகுதிகளில் நிலை கதவுகள் உள்ள வீடுகள் அமைந்திருந்தால் அவற்றை ஈயம் பித்தளை போன்றவற்றால் ஆன பிரமிடுகள் மற்றும் கெலிக்ஸ் பயன்படுத்தி சரி செய்து கொள்ளலாம்.
பிரதான கதவு வீட்டின் மற்ற கதவுகளை விட பெரிதாக இருக்க வேண்டும். நிலைக்கதவு கடிகார திசையில் திறக்கப்பட வேண்டும். நிலை கதவுக்கு இணையாக ஒரே சுவற்றில் மூன்று கதவுகளை வைப்பதை தவிர்த்தல் நல்லது. தெற்கு வாயிலாக இருப்பின் உலோகம் மற்றும் மர பலகைகளை பயன்படுத்தி சரி செய்து கொள்ளலாம்.
மேற்கு வாயில் எனில் உலோக வேலைப்பாடு இருந்தால் சிறப்பு. வடக்கு வாயில் எனில் அதில் வெள்ளி நிறத்தில் வண்ணம் மற்றும் ஏதாவது இருப்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும். கிழக்கு வாசல் மரத்தால் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும். பிரதான கதவில் அலங்காரங்களை செய்வதை விட பெயர் பலகையோ வீட்டு எண் பலகையோ பொருத்துவது சிறந்ததாகும்.
பிரதான வாயிலை சுத்தமாக வைத்திருத்தல் மிகவும் அவசியம். நுழைவாயில் அருகே குப்பைத்தொட்டிகள் காலணிகள் கழட்டி வைப்பதை தவிர்த்தல் நல்லது. பிரதான வாயிலில் உடைந்த நாற்காலிகள் செப்டிக் டேங்க் வைப்பதை தவிர்க்க வேண்டும். வாயில் கதவருகே போதுமான வெளிச்சம் இருப்பது அவசியமாகும்.
பிரதான கதவுக்கு முன்னால் கண்ணாடி வைப்பதை தவிர்க்க வேண்டும். இடவசதி இருப்பின் நுழைவாயிலில் பசுமையான செடிகள் வளர்க்கலாம். வாசலில் குதிரை காலணிகள் வைப்பதும் அதிர்ஷ்டத்தை தரும். நுழைவாயில் கதவுகள் உயர்ந்த தரமானவையாக இருப்பது தோஷங்களை நீக்கும்.
தலைவாயில் கதவுக்கு கறுப்பு நிற வண்ணம் பூசுவதை தவிர்க்க வேண்டும். பிரதான வாயிலில் ஒரே வாசல் இருப்பது செல்வத்தை வழங்கும். தரைமட்டத்தை விட நுழைவாயில் கதவு உயரமானதாக இருக்க வேண்டும். பிரதான கதவில் சுவஸ்டிக் மற்றும் சிலுவை படங்களை பதிக்கலாம்.
வாசலில் சிகப்பு நிற விளக்குகளை தவிர்க்க வேண்டும். அழகுக்காக வட்ட வடிவ அமைப்பு கதவுகளை பிரதான வாயிலில் நிறுவவதை தவிர்க்க வேண்டும். தலை வாயில் கதவு இன்னொரு வீட்டின் நுழைவாயில் கதவை பார்க்கும் வகையில் அமைத்தல் கூடாது. பிரதான கதவில் பளிங்கு மற்றும் மரத்தாலான வாசல் இருப்பது நேர்மறை ஆற்றலை தருகிறது.
நிலை கதவில் விரிசல்கள் கீறல்கள் இல்லாமல் தாழ்ப்பாள் உட்பட சரியாக அமைத்து பாதுகாக்க வேண்டும் . பிரதான கதவுக்கு அருகில் குழிப்பறைகள் கட்டக்கூடாது. வீடு வாங்குவது எவ்வளவு பெரிய விஷயமோ அதே போல் நிலைக்கதவு வாஸ்து சாஸ்திரம் பிரகாரம் அமைந்திருக்கிறதா என்பதை சரிபார்த்து வாங்குவதும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·