Support Ads
 ·   ·  999 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

படித்தேன்... பகிர்கிறேன்....

விருதுநகர் இதயம் நல்லெண்ணை அதிபர் விஆர்.முத்து அவர்களின் இதயம் பேசுகிறேன்......
"நமக்கு சிக்கல் உண்டாக்குபவருக்கு மாலையிட்டு மரியாதை செலுத்த வேண்டும்"
முப்பது வருடங்களுக்கு முன்பு எங்களுக்கு Sales Taxஇல் இருந்து ஒரு notice வந்தது. 
"நீங்கள் எண்ணெய்க்கு மட்டும்தான் வரி போடுகிறீர்கள். Canக்கு வரி போடவில்லை. அப்படி இருந்தாலும் நீங்கள்  கடந்த மூன்று வருடங்களுக்கு எண்ணெய்க்கு வரி கட்டியது போல canக்கும் வரி கட்ட வேண்டும். மூன்று வருடங்கள் நீங்கள் அந்த வரியை கொடுக்கவில்லை என்பதால் ஒன்றரை கோடி ரூபாய் நீங்கள் இப்பொழுது கட்ட வேண்டும்" என்று அந்த Sales Tax Officer கூறினார். இந்த billஐ பார்த்த எனது அப்பாவிற்கு அன்று இரவு முழுவதும் தூக்கம் இல்லை. அவர் வருத்தம் என்னவென்றால் 40 வருடங்களாக தொழில் செய்து சம்பாதித்த மொத்த சம்பாத்தியமே ஒன்றரை கோடி தான்; ஒரே ஒரு noticeல் Sales Tax Department முழு சொத்தையும் அபகரிக்க போகிறார்கள் என்று சோகத்தில் ஆழ்ந்தார். முப்பது வருடங்களுக்கு முன்பு இதுதான் எங்கள் நிலைமை.
பின்பு ஏதாவது செய்யவேண்டும் என்று நான் இரண்டு நடவடிக்கைகள் எடுத்தேன்.
ஒன்று இந்த 40 வருடங்களாக சம்பாதித்தும் ஒன்றரை கோடி ரூபாயை கூட நம்மால் கட்ட முடியவில்லையே, என்ன தவறு செய்திருக்கிறோம் என்று ஆராய்ச்சி செய்தேன்.
இதுவரை 1% loss 1% profit என்று தான் வியாபாரம் செய்து கொண்டு இருந்திருக்கிறோம். இதைத் தெரிந்து கொண்ட பிறகு நான் 3% profitஇல் தான் வியாபாரம் செய்வேன் என்று தீர்மானம் செய்து கொண்டேன்.
இரண்டாவது நடவடிக்கை என்னவென்றால் நாங்கள் இந்த நீதிமன்ற வழக்கில் வெற்றியை அடைய வேண்டும்; அதற்கு ஒரு வழக்கறிஞர் எங்களுக்குத் தேவைப்பட்டது. சாதாரணமாக எங்கள் அப்பா ஒரு வழக்கறிஞர் 2000 ரூபாய் கேட்டார் என்றால் 1500 ரூபாய் வாங்கிக் கொள்கிறீர்களா என்று தான் கேட்பார்.  ஆனால் இந்த வழக்கில் வெற்றி அடைந்தே ஆகவேண்டும் என்பதற்காக தமிழ் நாட்டிலேயே சிறந்த வழக்கறிஞரை நாங்கள் இதற்காக நியமித்தோம். வழக்கறிஞர், Mr. ரமணியிடம் இந்த வழக்கை ஒப்படைத்தோம்.
வழக்கு நடைபெற்றது. நீதிமன்றத்தில் stay வாங்கினார்கள். 3 வருடங்கள் கிட்ட கடந்தன. அதற்குள் நாங்கள் அந்த ஒன்றரை கோடி ரூபாயை சம்பாதித்து விட்டோம். அதே நேரத்தில் இந்த மூன்று வருடங்களுக்குப் பிறகு நாங்கள் அந்த வழக்கில் வெற்றி அடைகிறோம். ஏன் வெற்றி அடைகிறோம் என்றால் நாம் வீட்டிற்கு Gas Cylinder வாங்குகிறோம்ல அதில் Gasக்கு மட்டும் தான் வரி கட்டுகிறோம், Cylinderக்கு இல்லை. அதேபோல தான் எண்ணெய்க்கு மட்டும் வரி வசூல் பண்றதுதான் சரி, canக்குத் தேவையில்லை என்று நீதிமன்றம் முடிவு செய்வதற்கு மூன்று வருடங்கள் ஆகின.
இந்த மூன்று வருடங்களில் எங்களுக்கு அந்த ஒன்றரை கோடி ரூபாய் கட்டுவது மிச்சம். பின்பு நாங்கள் இன்னொரு ஒன்றரை கோடி ரூபாயும் சம்பாதித்து விட்டோம். 
மக்களே!! எங்களுக்கு இந்த 3 கோடி லாபம், வியாபாரத்தில் வளர்ச்சி இரண்டையுமே கொடுத்தது அந்த Sales Tax Officer உருவாக்கின அந்த சிக்கல்தான்.
அதனால் எப்பொழுதெல்லாம் உங்களுக்கு வியாபாரத்தில் சிக்கல் வருகிறதோ, சிந்தியுங்கள்!! சிந்தித்தால் புதிய யோசனைகள் உங்களுக்கு வரும்.
அதனால் நான் இப்போ என்ன செய்ய வேண்டும் என்றால் எனக்கு சிக்கல் கொடுத்த அந்த Sales Tax Officerக்கு மாலையிட்டு மரியாதை செய்யவேண்டும். அவரால் தான் இவ்வளவு சிந்தித்து  இந்த வளர்ச்சியை அடைந்து இருக்கிறேன்.
  • 100
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்