- · 6 friends
-
S
N
R
வெறுமை
மெய் சொல்லும்
வாயில்
பொய் அடிக்கடி
வந்தால்,
வாய்மை
வெறுமையே!..
உழைப்போன்
உறங்கினால்
ஊர் கோவில்
உண்டியலும்
உண்டிடும்
வாயும் வயிறும்
வெறுமையே!..
பத்திரிகைத்தாளில்
செய்தியின்றி
தணிக்கை
செய்தால்
சுதந்திரமில்லா
வார்த்தைகளும்
எழுத்துக்களும்
வெறுமையே!...
வைக்கோல்
பட்டடைக்குள்
வைத்த
விதை நெல்லை
திருடன்
திருடினால்
வயல் வெளியும்
பசுமைகாணா
வெறுமையே!....
பந்திக்கு
முந்தாமல்
கடைசிவரை
இருந்துவிட்டால்
பானையில்
சோறில்லை..அங்கும்
வெறுமையே!...
மழைநீரை
குளம் கட்டி
சேமிக்காமல்
கைகட்டி நின்றால்
மாரிகாலத்தில்
கொட்டிய மழைநீரும்
காய்ந்து
வெறுமையே!....
பஞ்சணையில்
நெஞ்சணையின்றி
பத்தினிப்பெண்
படுத்துறங்கினால்
அவள்
உள்ளமும் உயிரும்
வெறுமையே!
கையேந்தி
பிச்சை
கேட்கும்
தாயில்லா
குழந்தைக்கு
தானம் தர்மம்
கொடுக்காவிட்டால்
அவர்கள்
வயிறும் வெறுமையே!
Ads
Latest Poems (Gallery View)
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
Ads