Category:
Author:
தயாநிதி தம்பையா
Created:
Updated:
ஓடித்திரிந்த சீருடைக் காலம்.
பாடித்திருந்த பள்ளிக் கூடக் காலம்.
பருவம் கலைந்து உருவம் மாறிய காலம்.
சர்வத்தில் நிமிர்ந்திட கற்கை நெறிக் காலம்..
சுமைகள் அறியாத சுதந்திரக் காலம்.
சம தர்மம் நிலைத்த இனிமைக் காலங்கள்.
வித்தகராகிட புத்தகப் பைகள்
முதுகினில் சுமந்த சுகமான காலங்கள்..
நட்பின் பிடியில் சிரிச்ச காலம்
நீ, நான் எனும் பேதமை அறியாத காலம்..
எல்லாமே இன்று கனாக்காலம்...
காண்பவர் யாவர்க்கும் கஸ்ட காலங்களாம்..
கடந்த காலங்கள் திரும்பிடாக் காலங்கள்.
வரும் காலங்கள் ஏனோ விரும்பிடாக் காலமானது.