ஒதுக்கி கொள்வதற்காகவும்
ஒதுங்கி கொள்வதற்காகவும்
காரணம் தேடுகிறார்கள்
சிலர்
பாசங்கள் அவர்களுக்கு
பாதம்
அப்பி வைத்த
சுவடுகள் மட்டுமே
தள்ளி போவதற்காய்
தடயம் தேடுபவர்கள்
கோபம் படுவதாயும்
பழி சொல்லி போவார்கள்
உலகம்
மனிதர்களை
மிருகங்களாய்
மாற்றிக் கொண்டிருக்கிறது
மனிதத்தை களவாடி
சவக்குழிக்குள்
புதைத்து விடுகிறது
பிழை பிடிப்பதில்
பிழைப்பு நடத்துப்பவர்கள்
மனதை
கொலை செய்து விடுகிறார்கள்
பாவப்பட்ட சிலர்
கோவப்பட்டு
அவர்களுக்கு
ஆதாரம்
கொடுத்து கொண்டிருக்கிறார்கள்