முப்பதுக்கு
மேல் முடி உதிர்கின்றது.
நாற்பதில்
பார்வை குறைகின்றது.
ஐம்பதுக்கு
மேல் பற்கள் ஈடாடுது.
அறுபதுக்கு
மேல் சொற்கள் வலுவிழக்கின்றது.
இப்படியே
உடம்போடு வந்ததெல்லாம்
சொல்லாமலே
மாற்றம் காண்கையில்
கூடிப் பிறந்ததுகளும்
கூடப்பழகியவரும்
வாழ்வோடு
நிலைக்கவா போகின்றனர்..
சூழ்நிலை
உடைந்த கண்ணாடி.
ஒழுங்கான முகத்தையும்
அவலட்சணமாக்கி
பிரதிபலிக்கும்.
குத்திக் காட்டும்
மனிதனுக்கும்
சுட்டிக் காட்டும்
மனிதனுக்கும் நடுவில்
நர்த்தனமாடாது
நாகரீக சிரிப்போடு
நகரந்து விடு..
சண்டைகள்
போட்டு பேசாமல்
இருந்தது அக்காலம்.
சண்டைகள்
வந்திடுமோ என பயந்து
பேசாமல் இருப்பது
இக்காலம்..
வானிலையை விடவும்
மனிதனின்
மனநிலை அதிகம்
மாறுது தற்காலம்..
இன்னும்
சொற்ப காலமே
மனமே அமைதியை
காத்திடு..
கூடிய மனக் குப்பைகளை
குளத்தடியை
கண்டதும் மரத்தடியோரம்
இறக்கிவிட்டேன்..
ஈரமான இதயங்கள்
பாரம் தாங்காதன்றோ
காரமான வார்த்தைகளை
கடுகளவும் ஏற்காதாம்.