Category:
Author:
ஸாலிஹ் அஸீம்
Created:
Updated:
S
N
R
கணவன் மறைந்து விட
கண்ணீர் அவளை
மணந்துக் கொண்டது
எத்தனை துன்பங்கள்
அவளுக்கு
மாலையாய் விழுந்தது
சமூகத்தின் புறக்கணிப்பு
சத்தம் இல்லாமல்
அவளது குறவளையை
நசித்துக் கொண்டிருந்தது
சோகங்கள் சொந்தமாய்
உறவாட
வறுமை
கோரத் தாண்டவம் ஆடியது
சகுனம் பார்ப்பவர்கள்
மனதை
காயப்படுத்திக் கொண்டே
இருந்தார்கள்
எத்தனை பழி சொற்கள்
அவளுக்கு
வலி கொடுக்கிறது
அதை போக்க
வழி கூட இல்லாமல்
தவித்துக் கொண்டிருக்கிறாள்
இந்த போராட்ட வாழ்க்கை
போதும் என்றாகி விட்டது
உடைந்து விழுந்த
ஒரு பூவைப் போல
தினமும்
நசுக்கப் பட்டு
விழி ஓரமாய்
கண்ணீர் கோடுகளுடன்
கழிகிறது காலம்