Ads
 ·   · 19 poems
 •  · 6 friends
 •  · 6 followers

அப்பா..

அப்பா மகள்
உறவைப் பாட
அகராதியில்
வார்த்தைகளில்லை.


ஆசைப்பட்டு
கேட்டதெல்லாம்
அந்தக் கணமே
அடுக்கி வைப்பாரு.


ஊரை
சுற்றி காட்டிடவே
ஈருளியில்
ஏத்தி செல்வாரு.


கோவப்பட்டு
பார்த்ததில்லை
கோர முகம்
அவருக்கில்லை.


பார்கத் தான்
நம்பியாரு
பாசத்திலே
எம்ஜியாரு..


சொந்தக் காலில்
நின்றிடவே
தோட்டம் கொத்தி
வாழ்ந்தாரு.


சத்தியத்தின்
எல்லைக்குள்ளே
சந்தோஷமாக
வாழ வைச்சாரு.


கை முழுக்க
காய்ச்சிருக்கும்
காலில் பித்த
வெடிப்பிருக்கும்.


பள்ளிப் படிப்பு
முடியும் வரை
பகலிரவாக
பாடுபட்டாரு.


படுத்ததை
நான் பார்த்ததில்லை
மருந்து வாங்கி
குடிச்சதுமில்லை.


மதுவுக்கு
அவர் அடிமையில்லை
சாது என்றால்
மிகையுமில்லை.


பந்தக்காலு
போடும் வரை
பக்கமிருந்தே
பாதுகாத்தாரு.


கை பிடித்து
நான் கால் மாற
கட்டிப் பிடித்து
கதறினாரு.


சாமியை
நான் பார்த்ததில்லை.
என் குல சாமி
அப்பாவோடே
வாழ்ந்துமுள்ளேன்.


இருக்கும்
வரை புரியவில்லை
புரியும் போது
அவரும் இல்லை.


நெஞ்சில்
வாழும் தெய்வமவர்
என்றுமென்னை
காத்து நிற்பார்.
0 0 0 0 0 0
 • 450
Comments (0)
Ads
Latest Poems (Gallery View)
1-12
Ads
Ads
Info
Author:
தயாநிதி தம்பையா
Created:
Updated:
Featured Poems
அவள்
வார்த்தைகளின்ஒலி வடிவத்தைவற்ற செய்தவள்பட படப்பாய் என்றும் என்படர்ந்த மார்பினில் ஓர்இறுக்கத்தை தருபவள்சிந்திக்க சிந்திக்கஇதழினில் ஈரப்பதம் குறைந்திடஇரவெல்லாம் விழிக்க செய்பவள்
அப்பா...!
 •  · 
 •  · beesiva
காட்டிக் கொள்ளாத பூட்டிய அன்பினைஈட்டிய வெற்றிகள் கண்டு புழுகாமல்பூரிக்கும் பெரு மகன்..!பழுதாகாமல் இருந்திட விழுதான உந்தனைவிரட்டி விரட்டி படி படி என தினம்பாசப் பந்தாடியவன்.!பார்வையும் உறுமலும் உன் பார்வைக்கு விரும்பாத வில்லனாய் வெறுமனே நடிப்பால்புடம் போட்டவன்..தடம் மாறிய வேளைகளில் வேதனையால்நொந்தழுதவன்தனக்கு எட்டாத தூரங்களை எட்ட வைத்து வளர்த்தவன்.!உயர் நிலை தொட்டதும் ஓரமாய் ஒதுங்கிஈரமான வார்த்தைகளுக்குதவமிருப்பவன்.!நேசி!  பூசி!  யோசி ! வாசி அவர் வாழ்க்கை உனக்குபெரும் பாடம்..!
 •  · 
 •  · beesiva
உன்னை நான்மதிக்கிறேன்அதனால் நான்பேசாமல்இருக்கிறேன்பெண் என்றால்பெருமைக்குரியவளே!நானும் பெருமையாகபேசுவேன்நீயும் யாரையும்இகழ்ந்து பேசாதே!உன்னிடம்திறமையுண்டோ?செய்து காட்டுமற்றவர்களைபுகழ்ந்து காட்டுபுண்பட பேசாதே!நீயும் ஒரு பெண்ணே!பெண்ணின் பெருமைதாய்மையே!தாய்மையுனக்குமுண்டுதப்பாய் பேசாதே!தனித்திறமைகளைவெளிக்கொண்டு வரகளம்பலவுண்டுஆடு,விளையாடுஉன்னைப்போற்றபலர் வருவார்நீ பொறாமைகொள்ளாதே பெண்ணே!பொறாமையென்பதுவெற்றுத்தாள்இதில் ஏதாவதுஎழுதுபொறாமை நீங்கநீயும் முயற்சி செய்யாரையும் பிரிக்கநினைப்பதும்உன்னைப்பிரிவதும்இதில் மகிழ்ச்சியும்இகழ்ச்சியும்உனக்கே சொந்தம்...பத்தினியாள் செய்வினைக்குபழிவாங்க எண்ணாமல் புத்தகம்தனை எழுதிபுத்திதனைப்புகட்டுகிறேன்இப்படியும்பெண்கள் இப்புவியில்இருக்கிறார்கள்தப்பிடுங்கோ காளையரேதப்பிவி
 •  · 
 •  · beesiva
அன்பு வைப்பதாக இருந்தால் அதை உண்மையாக வையுங்கள் நடிக்காதீர்கள் பழகிவிட்டோம் என்பதற்காகவும் உதவி விட்டார்கள் என்பதற்காகவும் பாசமாய் பழகி பாசாங்கு செய்யாதீர்கள் காயத்தை விட வலி கூடியது மரணத்தை விட கொடியது பொய் நேசம் பொழிந்துவிட்டு மார்தட்டி சிரிப்பது மோசடிகள் ஆயிரம் செய்துவிட்டு போயிவிடுங்கள் பரவாயில்லை இதயத்தில் மட்டும் துரோகம் செய்து விடாதீர்கள் 
 •  · 
 •  · beesiva
வறுமைஉன்னிடம் தோழமை கொண்டால் பலபேர் உன்னை விட்டு தூரமாய் போய் விடுவார்கள்பாசம் வைத்தவர்கள் கூடபயந்து விடுவார்கள் மடியில் தூங்கியவர்கள்மறந்து போவார்கள் இதயத்தில் இருந்தவர்கள்இறங்கி விடுவார்கள்தலை குனிந்துதவம் கிடந்தவர்கள்தலை நிமிர்த்திதள்ளி விடுவார்கள்நலம் விசாரிக்கநடுங்குவார்கள்நீ உறவுகளைஉணர்ந்து கொள்வாய்உலகத்தைபுரிந்து கொள்வாய்அன்பைஅறிந்து கொள்வாய்மனிதர்கள் இப்படித்தான்என்பதைநீ பாடமாய் படித்துக் கொள்வாய்
Ads