Ads
 ·   ·  19 poems
  •  ·  6 friends
  • S

    N

    R

    7 followers

அபயம்..!


மரத்துக்கும்
மனசுண்டு
பகுத்து அறியும்
பண்புண்டு...



முறிந்தது
கிளை எனினும்
ஒட்டு விலகாத
உணர்வுண்டு..



துஸ்டர்கள்
துண்டாடினாலும்
திண்டாடாத
மனமுண்டு..



பண்பாட்டை
மரங்களிடம்
கற்போர் வாழ்வை
வென்றவராவார்.



தமக்காக
வாழும் செயல்படும்
உயிரிழந்தால்
மண்ணுக்கு உரமாகும்.,
உயர் செயலும்..



நாமோ
இதயம் பற்றி
கவி படைப்போம்
இரக்கம் பற்றி..?
கதையளப்போம்.



மனிதன் மூச்சு
போனால்
பேச்சில் 
சவம் என்போம்.
மரமோ என்றும்
மரம் தான்.



மாற வேண்டியது
எங்கள் மனமே
மனிதனை
மரமென்று
வையாதீர்
வையத்தில்
ஜயம் வேண்டாம்
மரமே எமக்கு
அபயம்...,!


  • 1073
  • More
Comments (0)
Login or Join to comment.
Ads
Ads