Ads
 ·   ·  19 poems
  •  ·  6 friends
  • S

    N

    R

    7 followers

போலியான ஆதாரங்கள்


உண்மையாய் நேசித்த உறவுகள்தான் 
முதலில் உதைத்து 
காயப்படுத்துகிறார்கள் 



வலிகளின் இறக்கைகள் 
பூட்டி 
வேதனை வானத்தில் 
அலைய விடுகிறார்கள் 



மண்ணை துளைத்க்கும் 
மழை துளியாய் 
மனதை துளைத்து 
புண்ணாக்கி விடுகிறார்கள் 



அவர்களால் எப்படி 
முடிகிறது 
கடுகளவும் கருணையில்லாமல் 
கழுத்தருக்காமலே 
கொலை செய்வதற்கு 



உரிமை என்று பேசியவர்கள்
எல்லாம் சரியாகி விட்டதும் 
எல்லை கோடுகள் போட்டு 
நம்மை தூரமாய் தூக்கி 
வீசி விடுகிறார்கள் 



தூசி படிந்த 
அவர்கள் இதயத்தில் 
பாசி படிந்து கிடைக்கும் 
நம் நினைவுகள் 
சில வசதிகளுக்காக 
சிதைக்கப்பட்டு 
சவக்குழிக்குள் 
சங்கமித்து விடுகிறது 



ஆனாலும் 
நம் மீது 
குற்றம் சொல்வதற்காக 
போலியான ஆதாரங்களை 
தேடிக் கொண்டிருக்கிறார்கள் 


  • 1057
  • More
Comments (0)
Login or Join to comment.
Ads
Ads