- · 6 friends
-
S
N
R
இட்லி
அன்னை ஊட்டிய
அமிர்தம் நீ
காலையில் வரும்
பௌர்ணமி நிலவு நீ!
வெண் பஞ்சு மேகம்
போல வந்த அமுதம் நீ!
தாய் பால் நின்ற பிறகு
தாயாய் நின்ற உணவு நீ
மனைவியின் கை பட்டதால்
மல்லிகை பூ நீ!
தேங்காய் சட்னி உடன்
வந்தால் தேவாமிர்தம் நீ!
தக்காளி சட்னி உடன்
வந்தால் தங்கம் நீ!
புதினா சட்னி உடன்
வந்தால் பசுமை பூ நீ!
சாம்பார் உடன்
சேர்ந்ததால் சாகாவரம் பெற்றாய் நீ!
யாருடன் கூட்டணி சேர்ந்தாலும்
வெற்றி பெறும் சிறந்த நட்பு நீ!
மருத்துவர் பரிந்துரைக்கும் மகத்தான மருந்து உணவு நீ!
எப்போதும் தென் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நீ!
முடிவுரையாக.....
மந்தாரை இலையில் உன்னை மணக்கும் நல்லெண்ணையில்
குழைத்த மிளகாய்ப்பொடியாலே முழுவதும் போர்த்தி விட்டு
எட்டு மணிநேரம் உறங்கவைத்து எழுப்பினால்
ஓடும் ரயிலில் அனைவரின் கவனமும் உன்மேல் தான்.
இரண்டுநாள் பிரயாணம் என்றாலும்
நீதானே எங்கள் வ(யிற்க்கு)ழித்துணை 😀 !
Ads
Latest Poems (Gallery View)
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
Ads