எதிர்பார்ப்பு
ஏதுமில்லை
உதிர்காலம்
தொடருதுங்கே...
எவை எவை
தானாக வந்தனவோ
அவை அவை
தானாகவே.....
முடியில்
இருந்து பற்கள்
பிடியில்
இருந்து விழுகை...
இளமை
முதுமையை அணைத்து
பெருமை
கலைந்த நகர்வு...
ஆண்டுகள்
துவண்ட படி
வேகமுடன்
எல்லையை தொட..
ஏதுமில்லை
எதிர்பார்ப்பு
எப்படி வந்தேன்
அப்படியே ...
பகையில்லை
என்னிடம் புகையில்லை
வகை வகையான
வாழ்க்கை.....
வசந்தம்
சொந்தமாகவில்லை
வருத்தம்
அதற்காக வந்ததில்லை..
சிரிக்க
முயன்றாலும்
சிரிக்க
வைத்தேன்...
எரிச்சல்
படவில்லை
எரித்தவரை
ஏறெடுக்கவுமில்லை...
போட்டிகள்
கண்டவன்
பொறாமையால்
வெந்ததில்லை....
வெற்றிகளை
கடந்து தோல்விகளை
ரசித்தவன். புயலி்ல்
மிதந்தவன்..
அங்கீகாரம்
கண்டு ஆணவம்
கொண்டதில்லை
ஆனாலும் பறக்கின்றேன்..
ஏகாந்த
வெளிகளில்
சாகசம் எனக்கு
பரிச்சியம்..
புத்தாண்டே
புன்னகைக்கின்றேன்.
வா வருடுவாய்
எனும் எண்ணம் ஏதுமில்லை...
ஆனாலும்
வரவேற்கின்றேன்
யாவும் கடந்து
நேயமுடன் வாழ்கின்றேன்..
கலை என்
மூச்சாகி நித்தம்
வீச்சாகி
விரிவது ஒன்றே
பிடிப்பானது...
இளமை
எனை விரட்டுகின்றது
முதுமை
எனை அணைக்கின்றது..
ஆனாலும்
கலங்கவில்லை...
ஏதோ.....
நினைப்பின்
வரிகளிவை...