சிரித்துக் கொண்டே
இருக்கிறேன் என்பதற்காக
நான்
மகிழ்ச்சியோடு இருக்கிறேன்
என்று
நினைத்துக்கொள்கிறார்கள்
ஆனால்
உள்ளுக்குள்
எரிந்துக்கொண்டிருக்கும்
காயத்தீயின் வலி
எனக்கு மட்டும்தான்
தெரியும்
அறிவுடன்
முடிவெடுப்பேனென்று
பலர் என்னிடம்
ஆலோசனை கேட்பார்கள்
ஆனால்
அன்புக்கு அடிமையாகி
ஏமாந்து போகும்
அடிமுட்டாள் நானென்று
அவர்களுக்கு தெரியாது
மற்றவர்கள்
புன்னகைக்க
வேண்டுமென்பதற்காக
எல்லாவற்றையும்
இழந்து விட்டு
அவர்கள் தந்த
காயங்களோடு
தனிமையில் இருக்கும்
போதுதான்
தவறுகளை உணர்ந்து
கொள்கிறேன்
அவ்வாறு
உணர்ந்து கொள்வதோடு சரி
திருந்தி கொள்வதேயில்லை