Ads
 ·   ·  19 poems
  •  ·  6 friends
  • S

    N

    R

    7 followers

துடிப்பு

கருவறையினுள்ளே

மடக்கி நீ இருந்த போதும் 

கை வைத்துப் பார்த்த வேளை 

உன் அசைவு காணாத போது 

துடித்து தான் போனாள்

தன் துடிப்பால் 

உனக்கு உயிர் தந்து விட்டாள். 


மரணவலி சுமந்து 

மழலை உன்னைப் பெற்ற பின்னர் 

மயங்கி அவள் கிடந்த போதும்

மனம் துடிக்கும் பாரு 

உன் குரல் கேட்க தானே. 


வயிற்றை கிழித்த போது

வலி அவளை தாக்கும்

அவள் மடியும் உன்னை தாங்கும் 

அவள் மார்பும் உணவை ஊட்டும் .


கத்தி கொண்ட காயங்களை உன்

பிஞ்சு கால்கள் உதையும் போது 

பட்டு போன்ற பாதங்களுக்கு 

முத்தமொன்று தந்து

சுகமென தாங்கிடுவாள் .


சிறுநீர் கழித்து விட்டால்

சிறிதும் நீ தூங்க மாட்டாய் 

அர்த்த ராத்திரியில் 

அழுது ஆர்ப்பரிப்பாய் 

துடித்துப்போய் எழுந்திடுவாள் 

துயரத்தை போக்கிடுவாள். 


வாய் திறந்து பேசாத 

வயதினில் 

உன் அசைவுகளை மொழி பெயர்த்து 

வேண்டிய அனைத்தையும் செய்திடுவாள். 


மெதுவாக அடியெடுத்து 

அசைந்து நீ சென்று 

தடக்கி நீ விழ முன்னே

துடிப்புடன் ஓடி வந்து 

பிடித்திடுவாள் உன் அன்னை. 


மூன்று வயதினில் 

முன்பள்ளி சென்று விட்டாய் 

முந்நூறு தடவை உன்

முன்பள்ளி சுற்றி வருவாள். 


பாலர் வகுப்பைத் தொடர்ந்து 

பள்ளி சென்று விட்டாய்

பருவ வயது வந்து 

படிப்படியே வளர்ந்து விட்டாய். 


வயசுக்கு வந்து விட்டாய் 

வாலிபனாய் ஆகிவிட்டாய் 

கல்யாணம் பண்ணி விட்டு 

கடமைக்காய் அன்னையைப் பார்த்து வந்தாய்

பின்னர்

காலம் தாமதிக்காது ஆச்சிரமத்திற்கு 

அனுப்பி வைத்தாய் 

அனுதினமும் வேண்டுகிறாள் அன்னை

ஆண்டவனே என் பிள்ளை 

நலமாக இருக்க வேண்டுமென்ற துடிப்புடன் !


  • 964
  • More
Comments (0)
Login or Join to comment.
Ads
Ads