மாரியப்பன் தங்கவேலு

  • More
Info
Name:
மாரியப்பன் தங்கவேலு
Category:
Age:
27
Gender:
Nationality:
தடகள விளையாட்டு வீரர்
Famous As:
உயரம் தாண்டுதல்
Birth Details
Date of Birth:

மாரியப்பன் தங்கவேலு இந்திய மாற்றுத்திறனாளர் தடகள விளையாட்டு வீரர் ஆவார். தமிழ்நாட்டு விளையாட்டு வீரரான இவர் உயரம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்று வருகின்றார். இவர் 27 வயதான [ஜூன்  28, 1995] இளமையான, துடிப்பான விளையாட்டு வீரர்.


பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கத்தை வென்றவர்.  மாரியப்பன் தங்கவேலு 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளி வென்று, பாராலிம்பிக்கில் தொடர்ந்து இரண்டாவது பதக்கத்தை தட்டிச் சென்றார். தொடர்ந்து 2ஆவது முறை பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக இரண்டு பாராலிம்பிக்ஸ்களில் பதக்கம் வெல்வது அரிதான விஷயம். 


கடந்த 2016ம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் 1.89 மீட்டர் உயரத்தை தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றவர். 


தமிழ்நாட்டிலுள்ள, சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள பெரிய வடக்கம்பட்டியைச் சேர்ந்தவர். இவருக்கு நான்கு சகோதரர்கள், ஒரு சகோதரி உள்ளனர். தந்தை ஆரம்பத்தில் குடும்பத்தை கைவிட்டார். தாயார் சரோஜா குழந்தைகளை வளர்த்தார். தாயார் செங்கல் தூக்கும் தொழிலாளியாகவும் மரக்கறி விற்றும் ஒரு நாளைக்கு 100 ரூபாய் வருமானத்தில் குடும்பத்தை வளர்த்தெடுத்தார். தனது ஐந்தாவது வயதில் பள்ளி செல்கையில் ஏற்பட்ட விபத்தில் வலது காலில் பேருந்து ஏறியதால், முழங்காலுக்குக் கீழே உள்ள கால் பகுதியை இழந்தார் இந்த சோகமான நிகழ்வுக்கு பிறகும், அவர் இரண்டாம்நிலைப் பள்ளியை நிறைவு செய்தார்.


தனது காலை இழந்தநிலையிலும் மாரியப்பனுக்கு விளையாட்டுக்களில் ஆர்வம் இருந்தது. இவரது பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் ராஜேந்திரன் பரிந்துரைப்படி, இவர் உயரம் தாண்டுவதில் பயிற்சி எடுத்துக் கொண்டார். தனது 14ஆவது வயதில் நற்தேகம் உடையவர்களும் கலந்துகொண்ட போட்டியில் இரண்டாவதாக வந்தார். 2013 தேசிய மாற்றுத்திறனாளர் போட்டிகளில் கலந்து கொண்ட மாரியப்பனை கண்ட பயிற்றுநர் சத்தியநாராயணா தமது பயிற்சிக்கு ஏற்றுக் கொண்டார். 2015இல் பெங்களூருவில் அவரது பயிற்சி மையத்தில் இணைந்தார்.


2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் தூனிசியாவில் நடந்த ஐபிசி கிராண் பிரீ போட்டியில் 1.78 மீ தாண்டி இரியோ மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றார். தங்கம் வென்ற இவருக்கு இந்தியாவில் அனைவரது வாழ்த்துகளையும் பெற்றார். 

Reviews
    Empty