
மீண்டும் நடிக்க வருகிறார் மைக் மோகன்
தமிழ் சினிமாவில் ‘மைக்’ என்றாலே சட்டென்று நினைவுக்கு வருபவர் மோகன். 1977-ம் ஆண்டு கமல் நடித்துள்ள கோகிலா படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின்னர் கதாநாயகனாக உயர்ந்தார்.
1980- 90-களில் தமிழ் சினிமாவில் இவருக்கென ஒரு இடம் இருந்தது. அதன்பின் நீண்ட காலமாக படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது அவர் ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
தாதா 87 மற்றும் பவுடர் போன்ற படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீஜி இயக்கும் புதிய படத்தில் மோகன் நாயகனாக நடிக்க உள்ளார். படத்திற்கு சில்வர் ஜுப்ளி ஸ்டார் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. பொங்கல் முடிந்ததும் ஷூட்டிங் தொடங்க இருக்கிறார்கள்.
👍0
💓0
😆0
😲0
😥0
😠0
0
சினிமா செய்திகள்












சிறப்பு செய்திகள்












Latest News























