Ads
Stay Green
Stay Green
Empty
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த முன்னூர் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீ பிரகன் நாயகி சமேத ஆடவல்லீஸ்வரர் கோவில்.மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட 300-வது சிவன் கோவில் இதுவாகும். அதனால் தான் இந்த ஊரின் பெயரும் 'முன்னூர்' என்று அழைக்கப்படுகிறது. முன்னூருக்கு வந்தால் முன்னேற்றம் உண்டு என்பது பெரியவர்களின் வாக்காக உள்ளது.ஆடவல்லீஸ்வரர், இந்தக் கோவிலில் தெற்கு திசையை நோக்கி சுயம்பு ரூபமாக லிங்க வடிவத்தில் காட்சியளிக்கிறார். இதற்கான காரணம் பசு, புற்றுகளிலே பால் சுரந்து அந்தப் புற்றுகளில் இருந்து சிவபெருமான் தோன்றியதாக புராணத்தில் உள்ளது.இந்த ஆலயம் சுமார் 1300 ஆண்டுகள் பழமையானது என்பதை பறைசாற்றும் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இரண்டாம் குலோத்துங்க சோழனுக்கு, பார்வதி சிவனுடன் நடனமாடிய காட்சி கிடைக்கப்பெற்றதை அடுத்து இங்குள்ள சிவனுக்கு ஆடவல்லீஸ்வரர் என பெயர் வந்தது. இந்த இடம் தென் கயிலாயம் என்றும் பூஜிக்கப்படுகின்றது.இந்தக் கோவிலில் ஆடவல்லீஸ்வரர், அம்பாள் பிரகன்நாயகி தவிர ஆறுமுகங்களுடன் அருளும் சுப்பிரமணிய சுவாமியும் முக்கியமானவர்.நவக்கிரகங்களில் சுப கிரகமாகத் திகழ்பவர் 'பிருகஸ்பதி' என்று வணங்கப்படும் குரு பகவான். இந்திரன் உள்ளிட்ட தேவர்களுக்கெல்லாம் ஆசிரியராக விளங்கும் இவர், நான்கு வேதங்களிலும் புலமை மிக்கவர். ஒழுக்கத்தினாலும், கடும் தவ வேள்விகளாலும் இவரிடம் உள்ள ஆன்ம ஒளியைக் கண்டு ஈரேழு பதினான்கு உலகத்தவரும் இவரைப் பணிந்து போற்றி வணங்கினர். முக்காலத்தையும் முன்கூட்டியே அறியக்கூடிய சக்தியும் ஞானமும் பெற்றதனால் தனக்கு நிகர் எவருமே இல்லை என்ற கர்வம், குரு பகவானுக்கு சில விநாடிகள் ஏற்பட்டது.தேவர்களேயானாலும் கர்வம் கூடாது என்பது தர்மத்தின் நியதி. இதற்கு மாறாக மனம் மாசுபட்டு குரு பகவான் நடந்து கொண்டதால் தன் தவ வலிமையையும், தெய்வீக ஒளியையும் இழக்கும் நிலை அவருக்கு ஏற்பட்டது. சிறிது நேர கர்வத்தினால் தனக்கு இத்தகைய நிலை ஏற்பட்டதே என்று எண்ணி மனம் வருந்திய தேவ குரு, படைப்புக் கடவுளான பிரம்ம தேவரை வணங்கி, தான் இழந்த பலத்தை மீண்டும் பெற வழி கூறியருளுமாறு வேண்டினார்.குரு பகவானின் நிலை கண்டு வருந்திய பிரம்ம தேவரும் மனமிரங்கி, "பூவுலகில் முன்னூற்று மங்கலம் என்று பூஜிக்கப்படும் திருத்தலம் சென்று அங்குள்ள பிரம்மதீர்த்தத்தில் நீராடி, அன்னை பார்வதி தேவியுடன் ஆனந்தத் திருநடனம் புரியும் ஆடவல்லீஸ்வரப் பெருமானைக் குறித்து தவமியற்றினால் இழந்த தவ வலிமைகளை மீண்டும் பெறலாம்" என உபாயம் கூறியருளினார். அதன்படி குருபகவான், ஆடவல்லீஸ்வரப் பெருமானைக் குறித்து நீண்ட நாட்கள் தவமியற்ற, அவரது தவ வலிமையால் மனம் மகிழ்ந்த ஈசன், அன்னை பார்வதி தேவியுடன் தரிசனமளித்து குரு பகவானுக்குத் தவ பலத்தையும் ஆன்ம ஒளியையும் மீண்டும் வழங்கி அருள்புரிந்தார் என்பது ஐதீகம்.
- 354
திருமேனிநாதர் கோவிலுக்கு போய் இருக்கிறீர்களா திருமேனிநாதர் என்னும் சிவபெருமான்!சிவஸ்தலம் அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோவில், திருச்சுழியல்.இறைவன் பெயர் திருமேனிநாதர், பூமிநாதசுவாமி, சுழிகேசர், பிரளயவிடங்கர், தனுநாதர், மணக்கோலநாதர், கல்யாணசுந்தரர், புவனேஸ்வரர்அம்மன் பெயர் துணைமாலையம்மை, சகாயவல்லி, சொர்ணமாலை, முத்துமாலையுமையாள், மாணிக்கமாலைதல விருட்சம் அரசு, புன்னைதீர்த்தம் பாகவரிநதி (குண்டாறு), கவ்வைக்கடல் (சந்நிதிக்கு எதிரில் உள்ளது.)புராண பெயர் திருச்சுழியல்ஊர் திருச்சுழிமாவட்டம் விருதுநகர் (இந்தியா - தமிழ்நாடு)தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றிதிருச்சுழியல்: சிவபெருமான் இத்தலத்தில் பிரளய வெள்ளத்தை ஓர் அம்பினால் சுழித்துப் பாதாளத்தில் செலுத்தியதால் இவ்வூர் திருச்சுழியல் என்று அழைக்கப்பட்டது. ஒவ்வொரு யுகத்திலும் இவ்வூரில் பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவு உண்டாவதுண்டு. துவாபர யுகத்தில் பேரழிவு ஏற்பட்ட போது இப்பகுதியை ஆண்டுவந்த மன்னன் இந்த இயற்கை அழிவிலிருந்து இவ்வூரைக் காப்பாற்ற வேண்டிச் சிவபெருமானை வேண்டினான். அவனது வேண்டுதலை ஏற்றுக் கொண்ட சிவனும் தனது சூலத்தால் தரையில் குத்தி நிலத்தில் ஒரு பெரிய ஓட்டையிட்டு; வெள்ளத்தைப் பூமியில் புகுமாறு செய்தார். சிவபெருமானின் சூலத்தைச் சுற்றி வெள்ளம் சுழித்துச் சென்றதால் “சுழி” என்று பெயர் பெற்றுப் பின்னர் “திரு” எனும் அடைமொழி சேர்ந்து “திருச்சுழியல்” ஆயிற்று என் தலபுராணம் விவரிக்கிறது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது பாண்டிநாட்டு தலங்களில் 12வது தலம்.கோவில் அமைப்பு: முகப்பு வாயில் வழியே உள்ளே துழைந்தால் விசாலமான வெளி முற்றம் காணப்படுகிறது. நேரே அம்பாள் சந்நிதி கோபுரமும், அதன் வலது பக்கம் இறைவன் சந்நிதி கோபுரமும் காணலாம். சுவாமி சந்நிதி கோபுத்திற்கு முன்னால ஒரு கற்தூண்களாலான மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்திற்கு முன் இவ்வாலயத்தின் ஒரு தீர்த்தமான கவ்வைக்கடல் (ஒலிப்புணரி) உள்ளது. முதல் மண்டப வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நாம் காண்பது கம்பத்தடி மண்டபம். இதில் பலிபீடம், கொடிமரம் ஆகியவற்றைக் காணலாம். நவக்கிரக சந்நிதி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், விநாயகர் ஆகியோரின் சந்நிதிகளும் இங்குள்ளன. இம்மணடபம் சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதி இரண்டிற்கும் முன்னால் இணைந்து காணப்படுகிறது. இந்த கம்பத்தடி மண்டபத்திலுள்ள தூண்களில் அநேக சிற்பங்கள் காணப்படுகின்றன. ஒரு தூணில் ஆஞ்சனேயரின் சிற்பத்தையும் காணலாம்.இம்மண்டபத்தை அடுத்துள்ளது ஏழுநிலை கோபுரம். கோபுர வாயில் வழியே உள் நுழைந்து நந்தியை வணங்கிவிட்டு சபா மண்டபம், அந்தராள மண்டபம், அர்த்த மண்டபம் ஆகியவற்றைக் கடந்து இறைவன் கருவறையை அடையலாம். இறைவன் திருமேனிநாதர் சுயம்புலிங்க வடிவில் சதுர ஆவுடையார் மீது கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். கருவறை அகழி அமைப்புடையது. கருவறை சுற்றுப் பிரகாரத்தில் உஷா, பிரத்யுஷா சமேத சூரியன், அறுபத்துமூவர், சந்தானாசாரியர், சப்தமாதர்கள் சந்நிதிகள் உள்ளன. மேலும் தென்மேற்கில் விநாயகர், மேற்கில் சோமாஸ்கந்தர், காசி விசுவநாதர், விசாலாட்சி, சுழிகைக் கோவிந்தர், வடமேற்கில் முருகன் ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். கருவறை சுற்றுச் சுவரில் கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், துர்க்கை, பிரம்மா ஆகியோர் உள்ளனர். சபா மண்டபத்தில் நடராசர் சந்நிதி உள்ளது. இங்கு நடராசர் மூலவராகச் சிலாரூபத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார். அருகே நடராசர், சிவகாமி, பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகியோரின் உற்சவ மூர்த்திகள் தரிசனம்.சுவாமி சந்நிதிக்கு தென்புறம் சகாயவல்லி என்றும், துணைமாலை நாயகி என்றும் அழைக்கப்படும் இறைவியின் கோவில் தனி சந்நிதியாக இருக்கிறது. இங்கும் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவை உள்ளன. இவற்றைக் கடந்து கருவறை உள்ளே சென்றால் இறைவி கிழக்கு நோக்கி காட்சி தருகிறாள். இறைவியின் எதிரில் உள்ள மண்டபத்தின் மேற்புறத்தில் ஸ்ரீ சக்கரம் கல்லில் வடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.சுவாமி, அம்பாள் இரு சந்நிதிகளையும் சேர்த்து வெளிப் பிரகாரம் சுற்றி வரும்போது தென்மேற்கு மூலையில் அண்டபகிரண்ட விநாயகர் சந்நிதி உள்ளது. அதையடுத்து மேற்குப் பிரகாரத்தில் தலமரமான புன்னை மரக்கன்று வைத்து வளர்க்கப்படுகிறது. அதையடுத்து வடமேற்கு மூலையில் பிரளயவிடங்கர் சந்நிதி அமைதுள்ளது. இத்தலத்தில் ஏற்பட்ட பிரளய வெள்ளத்தை அடக்கியவர் இவர். மேலும் வெளிப் பிரகாரம் சுற்றி வரும்போது வடகிழக்கு மூலையில் தண்டபாணி சுவாமி சந்நிதி இருக்கிறது. சந்நிதி முன் கொடிமரம், பலிபீடம், மயில் உள்ளன.இத்திருத்தலத்தில் திருமால், இந்திரன், பிரம்மன், சூரியன், கௌதமர், அகலிகை, கண்ணுவமுனிவர், அருச்சுனன், சேரமான் பெருமாள் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றனர் என்பது சிறப்பு. இத்தலத்தில் பூமிதேவி இறைவனை வழிபட்டிருப்பதால் இறைவனுக்கு பூமிநாதசுவாமி என்ற பெயரும் உண்டு. ஆண்டுக்கு இருமுறை சூரியஒளி மூலவரின் திருமேனி மீது விழுமாறு கருவறை அமைக்கப்பட்டிருக்கிறது.பிரார்த்தனை: திருமணத்தில் தடை உள்ளவர்கள் திருமணக்கோலத்தில் உள்ள இறைவனை வணங்கி பலனடைகின்றனர்.நேர்த்திக்கடன்: தங்களது கோரிக்கை நிறைவேறியவுடன் சிவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம், ஆராதனை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.திருவிழா: நவராத்திரி, ஆவணி மூலம், சித்திரை விஷு, கார்த்திகை சோமவாரம், ஆடித்தபசு, தைப்பூசம், பங்குனி பிரமோற்சவ திருவிழாவில் திருக்கல்யாணம், தேரோட்டம்.திருச்சுழி திருமேனிநாதர் கோவிலுக்கு எப்படிப் போவது?மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை சென்று அங்கிருந்து 15 கி.மி. தொலைவில் உள்ளது. மதுரை, அருப்புக்கோட்டையில் இருந்து நேரடி பேருந்து வசதிகள் இருக்கின்றன. மதுரையில் இருந்து காரியாபட்டி வரை நகரப் பேருந்தில் சென்று, அங்கிருந்து மீண்டும் நகரப் பேருந்தில் திருச்சுழி வரை செல்லலாம். மதுரை – காரியாபட்டி – திருச்சுழி தான் நேர் வழி. மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை சென்று பின் திருச்சுழி செல்வது சுற்று வழியாகும்.Tiruchuli Temple Timingsதிருச்சுழி திருமேனிநாதர் கோவில் காலை 05:00 மணி முதல் 12:00 மணி வரையிலும், மாலை 04:00 மணி முதல் இரவு 08:00 மணி வரையிலும் திறந்திருக்கும்.Tiruchuli Thirumeninathar Temple Contact Number: +91-4566282644அருள்மிகு திருமேனிநாதர் கோவில்,திருச்சுழி அஞ்சல், விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா. பின்கோடு – 626129.
- 363
*விளக்கேற்றும் திரியை விளக்கு எரிந்து முடிந்ததும் தூக்கி மட்டும் போட்டு விடாதீர்கள்! பின்னர் அதை என்னதான் செய்வது?*தினமும் விளக்கேற்றுபவர்களுக்கு அந்தத் திரியை என்ன செய்ய வேண்டும்? என்கிற சந்தேகம் நிச்சயம் இருக்கும். இதையே வாரம் ஒருமுறை ஏற்றுபவர்கள் ஒரு சிலர் அப்படியே விட்டு விடுவதும் உண்டு. விளக்கு ஏற்றிய திரியை அப்படியே விட்டு விட்டால் அதன் நிறம் பச்சை நிறமாக மாறிவிடும். இது போல் திரி பச்சை நிறமாக மாறினால் வீட்டிற்கு அவ்வளவு நல்லதல்ல. வாரம் ஒருமுறை விளக்கேற்றும் போது கட்டாயம் விளக்கினை தேய்த்து விட்டு ஏற்றுவது நல்லது. இல்லை என்றால் மறுவாரம் நீங்கள் பார்க்கும் பொழுது அந்த எண்ணெய் திரியுடன் சேர்ந்து பச்சை நிறமாக மாறி இருக்கும்.இது வீட்டில் பண தடையை உண்டாக்கும் ஒரு செயலாகும். நிறைய பேருக்கு இது தெரிவதில்லை. அதே போல விளக்கு ஏற்றிய திரியை எந்த காரணம் கொண்டும் எரிந்து கருகி விடுமாறு செய்துவிடக் கூடாது. திரி கருகினால் வீட்டில் நிச்சயம் பிரச்சனைகள் வரும் என்பார்கள். பின்னர் அந்த திரியை என்னதான் செய்வது? என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.திரி கருகும் முன், எண்ணெய் காலியாகும் முன் மலர்களால் நெருப்பினை அணைத்து விடுவது தான் நல்லது. வாயால் ஊத கூடாது. ஒற்றை திரியாக போடக் கூடாது. எப்போதும் இரண்டு திரிகளை இணைத்து தான் போட வேண்டும். மீண்டும் மறுநாள் விளக்கேற்றும் பொழுது அதே திரியில் ஏற்றலாம் தவறில்லை. திரி கருகி விட்டால் அல்லது நிறம் மாறி விட்டால் மட்டும் அதை மாற்றினால் போதுமானது. தினமும் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இந்த திரிகளை குப்பையில் கட்டாயம் வீசக்கூடாது. திரியை குப்பையில் போட்டால் வீட்டில் இருக்கும் மகாலட்சுமி வெளியே சென்று விடுவாள். இந்த தவறையும் ஒருபோதும் செய்யாதீர்கள்.தினமும் திரியை மாற்றுபவர்களாக இருந்தாலும், அல்லது வாரம் ஒரு முறை மாற்றினாலும் திரிகளை சேர்த்து வைக்க வேண்டும். தேவையில்லாத ஏதாவது ஒரு பிளாஸ்டிக் பவுலில் சேர்த்து வைத்து வாருங்கள். கொஞ்சம் திரிகள் சேர்ந்ததும் வீட்டில் இருக்கும் அனைவரையும் கிழக்கு முகமாக பார்த்து உட்கார வையுங்கள். இதனை இரவு சாப்பிட்டு முடித்த பின்னர் தூங்க செல்லும் முன் செய்வது நல்லது. அந்த திரிகளை தூப காலில் போட்டு கொள்ளுங்கள். பின்னர் அப்படியே அனைவரையும் சேர்த்து வலமிருந்து இடமாக மும்முறை மற்றும் இடமிருந்து வலமாக மும்முறை திருஷ்டி கழித்து விடுங்கள்.திருஷ்டி கழித்து முடிந்ததும் வீட்டு வாசலில் வைத்து அதனை கொளுத்தி விடுங்கள். முழுக்க எரிந்து முடிந்ததும், வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் இந்த நெருப்பில் பஸ்பமாகிவிடும். உங்களை சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல்கள் எல்லாம் இந்த தீயில் வெந்துவிடும். திரிகள் கருகி கரியாகி முடிந்ததும் அதனை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். அல்லது தண்ணீர் ஊற்றி சமையலறை சிங்கிள் ஓட விட்டு விடுங்கள். இதனால் உங்களுக்கு இருக்கும் அத்தனை கஷ்டங்களும் தீரும். வீட்டில் நேர்மறை ஆற்றல் ஊடுருவும். நல்ல எண்ணங்களும், சிந்தனைகளும் மலரும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். இனி ஒருபோதும் திரியை தூக்கி எறியாதீர்கள் இது போல் செய்து பயனடையுங்கள்.
- 379
ஓர் ஊரில் வசித்த விவசாயி முருகன், இறைவன் மீது பெரிதும் பக்தி கொண்டவன். நல்லவன், எல்லாரிடமும் மரியாதையாக நடப்பவன், பெரியோர்களை மதிப்பவன். அவன் ஏழைதான். ஆனால்"போதும்' என்ற மனதுடன் வாழ்ந்துவந்தான்."செய்யும் தொழிலே தெய்வம்' என்று கருதி நேர்மையாகத் தொழில் செய்து வாழ்ந்து வந்தான்.அவனுக்கு மனைவியும் ஐந்து வயதில் மகனும் இருந்தார்கள்.ஒரு சமயம் அவனுக்கு, இறைவனை நேரில் தரிசிக்க வேண்டும் என்றஎண்ணம் ஏற்பட்டது. ""இறைவா! நீங்கள் உங்கள் தரிசனத்தை எனக்குத் தந்து அருள் புரியுங்கள்!'' என்று பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தான். ஒரு நாள் முருகனின் பிரார்த்தனை பலித்தது.இறைவன் முருகனின் கனவில் தோன்றி, ""அன்பனே! வரும் புதன்கிழமை நான் உன் வீட்டிற்கு வருகிறேன்!'' என்று கூறினார்.கனவு கலைந்து எழுந்த முருகன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். தன் மகிழ்ச்சியை மனைவியிடமும்,மகனிடமும் பகிர்ந்துகொண்டான். அவர்களும், தங்களுக்கு இப்படி ஒரு பாக்கியம் கிடைத்ததே என்ற மகிழ்ச்சியில் மூழ்கினர். இறைவன் தங்கள் வீட்டிற்கு வரும்போது அவரை எப்படி உபசரிக்கலாம் என்று கலந்து பேசினார்கள். முடிவில், இறைவனுக்கு வழங்குவதற்கு இனிப்பு தயார் செய்ய வேண்டும், ஒரு ஜோடி புதிய செருப்பு கொடுக்க வேண்டும், ஒரு சால்வை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.இறைவன் குறிப்பிட்ட புதன்கிழமை வந்தது. முருகன் குடும்பத்தினர் வீட்டை அலங்கரித்து வைத்திருந்தார்கள். ஆவலோடு வாசல் கதவருகில் காத்திருந்தார்கள்.காலை மணி பத்தாயிற்று. அப்போது முருகன் வீட்டருகில் 35 வயது மதிக்கத்தக்க ஏழைப்பெண், தன் எட்டு வயது மகளுடன் வந்து கொண்டிருந்தாள்.அவளது நடையில் ஒரு தளர்ச்சி காணப்பட்டது. முருகன் வீட்டுக்கு அருகில் வந்தபோது மயங்கி விழுந்து விட்டாள்.முருகன் அந்தப் பெண் அருகில் சென்று, அவளுக்கு முதலுதவி அளித்தான். சிறிது நேரத்தில், அவள் மயக்கம் தெளிந்து கண் விழித்தாள்.முருகன் அவளுடன் பேசியபோது, அவளும், அவள் மகளும் வறுமை காரணமாக இரண்டு நாட்களாகச் சாப்பிடாமல் பட்டினியாகக் கிடப்பதும், பசியில் மயங்கி விழுந்தததும் தெரிய வந்தது.காரணம் தெரிந்ததும், அவன் அவர்களை தன் வீட்டிற்குள் அழைத்துச் சென்றான். முருகன் குடும்பத்தினர், அவர்களுக்கு இறைவனுக்குத் தருவதற்காக வைத்திருந்த இனிப்புகளை கொடுத்தார்கள். மீதமிருந்த இனிப்பையும் அவர்களிடமே கொடுத்து, "இவற்றை எடுத்துச் செல்லுங்கள்' என்றனர்.அந்தப் பெண் முருகன் குடும்பத்தினருக்கு நன்றி சொல்லிவிட்டு, புறப்பட்டுச் சென்றாள். பின்பு, முருகனின் உள்ளம் இறைவன் பக்கம் திரும்பியது.அவர் எப்போது வரப் போகிறார் என்று பரபரத்துக் கொண்டிருந்தான். நேரம் கடந்தது.இந்த நிலையில் கடுமையான வெயிலில், ஒரு பிச்சைக்காரன் முருகன் வீட்டுக்கு அருகில் வந்தான். அவன் முருகனிடம், "உங்களிடம் ஏதாவது பழைய செருப்பு இருந்தால், அதை எனக்குக் கொடுத்து உதவுங்கள்...'' என்று வேண்டினான்.முருகன் வீட்டிற்குள் சென்று, தான் இறைவனுக்குக் கொடுப்பதற்காக வைத்திருந்த ஒரு ஜோடி புதிய செருப்பை எடுத்து வந்து, அவனிடம் கொடுத்தான். அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டபிச்சைக்காரன் நன்றி தெரிவித்து விட்டு கிளம்பினான்.மாலையில் குளிர் கடுமையாக இருந்தது. குளிரில் நடுங்கியபடியே முதியவர் ஒருவர் தெருவில் நடந்து வந்தார். அவரைப் பார்த்த முருகன், "இவர் இப்படி குளிரில் கஷ்டப்படுகிறாரே!' என்று, வீட்டிற்குள் சென்று கடவுளுக்காக வைத்திருந்த சால்வையை எடுத்தான். அவன் மனைவி, ""இறைவனுக்காக இதை மட்டுமாவது வைத்திருங்கள்!'' என்று கூறி தடுத்தாள்.ஆனால் முருகன் தன் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவில்லை. சால்வையை முதியவருக்குப் போர்த்தினான். அவர் முருகனுக்கு நன்றி கூறிவிட்டுச் சென்றார்.அன்று பகல் முடிந்து இரவும் வந்து விட்டது. இறைவன் வரவில்லை. முருகன் மிகவும் மனம் வருந்தினான். அந்த ஏமாற்றம் அவனைப் பெரிதும் பாதித்தது.அவன் இறைவனிடம், ""இறைவா! நீங்கள் ஏன் இன்று என் வீட்டிற்கு வரவில்லை?'' என்று கேட்டுப் பிரார்த்தனை செய்தான்.அப்போது இறைவனின் குரல் அசரீரீயாக ஒலித்தது:""இன்று நான் மூன்று முறை உன் வீட்டிற்கு வந்து, நீ கொடுத்தவற்றைப் பெற்றுக் கொண்டேன்.முதலில் ஒரு ஏழைப்பெண், அவள் மகள் வடிவத்தில் உன்னிடம் வந்து, நீ கொடுத்த இனிப்புகளைப் பெற்றுக்கொண்டேன்;இரண்டாவதாக ஒரு பிச்சைக்காரன் வடிவத்தில் வந்து செருப்பையும்,அடுத்து முதியவர் வடிவத்தில் வந்து சால்வையைப் பெற்றுக்கொண்டேன்''என்றார்.டால்ஸ்டாய் எழுதிய கதையின் தழுவல் இது. சுவாமி விவேகானந்தரின் கருத்து இங்கே குறிப்பிடத்தக்கது.இறைவனுக்கு உதவுகிறேன் என்று இல்லாமல், அவருக்காக பணியாற்றும் பேறு பெற்ற நாம் பாக்கியசாலிகள் ஆவோம்.உதவி என்ற சொல்லை உன் உள்ளத்திலிருந்தே விலக்கிவிடு. நீ உதவி செய்ய முடியாது. அப்படி நீ நினைப்பதே தெய்வ நிந்தனையாகும். இறைவனுடைய விருப்பத்தினால் தான் நீ இங்கு இருக்கிறாய்.நீ அவருக்கு உதவி செய்வதாகவா சொல்கிறாய்? இல்லை... உன்னால் அவரை வழிபடத்தான் முடியும். நீ ஒரு நாய்க்கு ஒரு பிடி சோறு கொடுக்கும்போது, அந்த நாயை இறைவனாகவே நினைத்து வழிபடு. அந்த நாய்க்குள் இறைவன் இருக்கிறார். அவரே எல்லாமுமாய்இருக்கிறார். எல்லாவற்றிலும் இருக்கிறார்.
- 384
பெருமாள் பக்தன் ஒருவன், தன் பூலோக வாழ்வை முடித்து வைகுண்டம் சென்றான். பெருமாள் சயனத்தில் இருந்தார்.அருகில், லட்சுமி அமர்ந்து அவரது கமலமுகத்தை மகிழ்வுடன் நோக்கிய படியே, திருவடிகளை பிடித்து விட்டுக் கொண்டிருந்தாள்.பக்தன் பெருமாள் முன் நின்று சேவித்தான். பூலோகத்தில், அவன் செய்த நன்மைகளைப் பாராட்டிய பெருமாள், “பூலோகத்தில் எல்லா இன்பங்களையும் அனுபவித்தவன் நீ. வைகுண்டத்திலும் இன்ப வாழ்வு நடத்து,” என்றார்.பக்தன் அவரிடம், “பெருமாளே! எனக்கு பூலோகத்தில் இன்பமான வாழ்வு கிடைத்தது உண்மை. ஆனால், ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் கிடைக்கவில்லை என்ற குறையுடன் இங்கு வந்து விட்டேன்,” என்றான்.அப்படியா! வைகுண்ட பதவியே பெறுமளவு தகுதி பெற்ற உனக்கு குறையேதும் இருக்கக் கூடாதே,சொல்…சொல்..உடனே தீர்த்து விடுகிறேன்,” என்றார்.“ஐயனே! நான் உலகில் வாழ்ந்த காலத்தில் “நீ பெரியவனா? நான் பெரியவனா?’ என்ற சர்ச்சையையே மக்கள் மத்தியில் அதிகம் பார்த்தேன். பூலோகத்தில் கடல், மலை என்றெல்லாம் பெரிது பெரிதாக இருக்க, இந்த மக்கள் தாங்களே பெரியவர்கள் என்று புகழ்ந்து கொள்கிறார்களே! உண்மையைச் சொல்லுங்கள்.பூலோகத்தில் உயர்ந்தவர் யார்?” என்றான்.பெருமாள் சிரித்தார். “பக்தனே! மக்கள் சொல்வது போல கடலும், மலையும் பெரிது தானே!” என்றார்.“சுவாமி! உங்கள் கருத்துக்கு என்னிடம் விடை இருக்கிறது. கடலையே வாரிக் குடித்து விட்டார் குள்ள முனிவரான அகத்தியர். புராணங்களில் இதைப் படித்திருக்கிறேன். கிரவுஞ்ச மலையையே தகர்த்திருக்கிறார்தங்கள் மருமகன் முருகப்பெருமான். நிலைமை இப்படியிருக்க, இவற்றை எப்படி பெரிதென ஒத்துக் கொள்ள முடியும்!பூலோகத்தில் தானே இவையெல்லாம் நடந்தன. எனவே, பூலோகத்தில் பெரியவர் என்று யாருமில்லை. பகவனாகிய தாங்களே பெரியவர்,” என்றான்.“இல்லை…இல்லை… நீ சொல்வது சரியல்ல. உலகில் பெரியவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் உன்னைப் போன்ற பக்தர்கள் தான்! அவர்களில் யார் மிக மிக உயர்ந்த பக்தி செலுத்துகிறார்களோ, என்ன நடந்தாலும் கடவுளே கதியென இருக்கிறார்களோ, எவ்வளவு சோகம் வந்தாலும், எல்லாம் என்னால் வந்தது என நினைக்கிறார்களோ அவரே உயர்ந்தவர்” என்று பதிலளித்தார் பெருமாள்.“எப்படி?” என்று தன் சந்தேகத்தை வெளியிட்ட பக்தன், “தாங்கள் சர்வ வியாபி. வாமன அவதாரம் எடுத்த போது, பூலோகத்தை தங்கள் சிறுபாதம் கொண்டு ஒரே அடியால் அளந்து விட்டீர்கள். விண்ணை ஓரடியால் அளந்து உலைகையே வசமாக்கிக் கொண்டீர்கள். அப்படியிருக்க நீங்கள் தானே உயர்ந்தவராக இருக்க முடியும்?” என திருப்பிக் கேட்டான்.உடனே பெருமாள் ஒரு தட்டொளியை (தேவலோகக் கண்ணாடி) எடுத்து வரச்சொன்னார். அதன் முன்னால், அந்த பக்தனை நிறுத்தச் சொன்னார்.பக்தனே! அந்தக் கண்ணாடியில் உன் மார்பைப் பார்,” என்றார்.பக்தன் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். ஏனெனில், பகவான் அவனது மார்புக்குள் சிறுஅளவில் குறுகி நின்றார்.“பார்த்தாயா! உலகையே அளந்த என்னை, உன் பக்தியால் உன் கையளவு இதயத்துக்குள் கட்டை விரலளவாக மாற்றி வைத்துக் கொண்டாயே!எனவே நீ தான் பெரியவன்,” என்றார்.பக்தன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.நாமும் இறைவனை நம் இதயத்துக்குள் நிறுத்துவோம். அவனருள் பெற்று பிறப்பற்ற நிலையை அடைவோம்.
- 389
ஒரு பெரிய தொழிற்சாலை, கிட்டத்தட்ட 1000 பேருக்கு மேல் வேலை பார்க்கும் தொழிற்சாலை, எல்லாம் நல்லபடியாகத்தான் போய்கொண்டிருந்தது.ஒரு நாள் அந்த முதலாளி தொழிற்சாலைக்குள் வலம் வந்தாராம், அப்போது ஒருத்தன் 'மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது என்ன சுகம்' அப்படின்னு படுத்து கிடந்தான்.அவருக்கு வந்தது பாரு கோபம்… இருந்தாலும் அடக்கிகிட்டு, அவனை எழுப்பினார், “தம்பி நீ மாதம் எவ்வளவு சம்பளம் வாங்குற”? அப்படின்னு கேட்டாரு… அதுக்கு அவன் ஒன்னும் புரியாம முழிச்சிக்கிட்டு “மூவாயிரம் ரூபாய் சார் “ அப்படின்னான். உடனே அவர் பாக்கெட்டில் இருந்து பண முடிப்பினை எடுத்து ஒரு பத்தாயிரம் ரூபாயை எடுத்து தூக்கி எரிஞ்சாரு... “இதுல உன்னோட மூணு மாச சம்பளத்துக்கு மேலே ஒரு ஆயிரம் ருபாய் அதிகமா இருக்கு, நான் இங்க சும்மா படுத்துகிட்டு இருக்கிறவனுக்கு சம்பளம் கொடுக்கறதுக்கு இந்த தொழிற்சாலையை நடத்தல..” அப்படின்னு சொன்னாரு.அவன் ஒரு நிமிஷம் அவரை குறுகுறுன்னு பார்த்தான். அப்புறம் அந்த பணத்த வாங்கிகிட்டு வேகமா வெளிய போய்ட்டான். எல்லாரும் வாயடைச்சி போய் நின்னாங்க.அப்புறம் முதலாளி எல்லாரையும் கர்வமா பார்த்து… “இனிமே எல்லாம் அப்படி தான் ” (தமிழ் பட டயலாக்) அப்படின்னாரு. அப்புறமா கணக்குபிள்ளயை கூப்பிட்டு “யார்யா அவன் ?” அப்படின்னு கேட்டாரு…அதுக்கு அந்த கணக்கு பிள்ளை சொன்னான் ” டீ கொண்டு வந்த பையன் மொதலாளி .. “இது எப்படி இருக்கு…டீ கொடுக்க வந்தவனுக்கு பத்தாயிரம் குடுத்த முதலாளிய நெனைச்சா எப்படி தெரியுமா இருக்கு?
- 426
ஏப்ரல் 21 தாக்குதல்கள் மற்றும் சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி ஏலம் உட்பட ஏழு முக்கிய வழக்குகள் தொடர்பான காவல்துறை விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பதில் காவல்துறைமா அதிபருக்குப் பணிப்புரை விடுத்துள்ளது.நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் ஏனைய தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல விசேட விசாரணைகள் போதுமானதல்ல என அவதானிக்கப்பட்டுள்ளன.விசேடமாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் அண்மையில் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டன.பிணைமுறி ஊழல் மற்றும் ஏப்ரல் 21 தாக்குதல்கள் உட்பட அடையாளம் காணப்பட்ட பல வழக்குகள் தொடர்பில் மேலதிக அதிகாரிகளை நியமித்து விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.2022 ஆம் ஆண்டில் வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சந்தேகத்திற்கிடமான மரணம் மற்றும் 2006 ஆம் ஆண்டில் முன்னாள் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ். ரவீந்திரநாத் காணாமல் போனமை தொடர்பிலும் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்குப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.அத்துடன், 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வெலிகமவில் உள்ள 'டபிள்யூ 15' விருந்தகத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளையும் துரிதப்படுத்துமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.அதேநேரம், 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி தமிழ் ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் என அழைக்கப்படும் தராகி சிவராம் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறும் அறிவித்தப்பட்டுள்ளது.அத்துடன், யாழ்ப்பாணத்தில் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி சமூக செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகநாதன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பிலான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.000
- 796
இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 133 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஹைதராபாத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 297 ஓட்டங்களைக் குவித்தது.இந்தநிலையில் சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் பெறப்பட்ட 2 ஆவது அதிகபட்ச ஓட்டமாக இது பதிவாகியுள்ளது. குறித்த வரிசையில் 314 ஓட்டங்களைக் குவித்து நேபாளம் அணி முதலிடத்தில் உள்ளது. துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் சார்பில் சஞ்சு சம்சன் சதம் கடந்து 111 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இதற்கமைய 298 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது. பந்துவீச்சில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்படி 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரை இந்திய அணி 3 - 0 எனும் அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.000
- 801
97,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 15ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 37,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 20,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.000
- 806
சிறுவர்களின் உடல், உள நடத்தைகளில் மாற்றங்கள் ஏற்பட்டால் அவர்களை உடனடியாக வைத்தியர்களிடம் அழைத்துச் செல்லுமாறு அச்சங்கத்தின் மனநல வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.உலகில் அதிகளவான உயிர் மாய்ப்பு சம்பவங்கள் பதிவாகும் நாடுகளில் இலங்கை 21 ஆம் இடத்தில் இருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் வைத்தியர் சஜீவன அமரசிங்க தெரிவித்துள்ளார்.எனவே, நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்தால் 1926 அல்லது 1333 என்ற மனநல உதவி சேவைகள் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு அச்சங்கம் தெரிவித்துள்ளது.000
- 809
பாடசாலை, பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்களை வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களிலும் பருவகால பயணசீட்டுகளில் பயணிக்க அனுமதிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் விஜித ஹேரத் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருக்கு அறிவுறுத்தியுள்ளார்.வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களில் பருவகால பயணசீட்டுகளில் பயணிக்கும் மாணவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் குறித்த புகார்களை பரிசீலித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.மேலும் பருவகால பயணசீட்டுகளை வைத்திருக்கும் மாணவர்கள் விடுமுறை நாட்களில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.000
- 808
பாடசாலை, பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்களை வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களிலும் பருவகால பயணசீட்டுகளில் பயணிக்க அனுமதிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் விஜித ஹேரத் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருக்கு அறிவுறுத்தியுள்ளார்.வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களில் பருவகால பயணசீட்டுகளில் பயணிக்கும் மாணவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் குறித்த புகார்களை பரிசீலித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.மேலும் பருவகால பயணசீட்டுகளை வைத்திருக்கும் மாணவர்கள் விடுமுறை நாட்களில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.000
- 807
சிறுவர்களின் உடல், உள நடத்தைகளில் மாற்றங்கள் ஏற்பட்டால் அவர்களை உடனடியாக வைத்தியர்களிடம் அழைத்துச் செல்லுமாறு அச்சங்கத்தின் மனநல வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.உலகில் அதிகளவான உயிர் மாய்ப்பு சம்பவங்கள் பதிவாகும் நாடுகளில் இலங்கை 21 ஆம் இடத்தில் இருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் வைத்தியர் சஜீவன அமரசிங்க தெரிவித்துள்ளார்.எனவே, நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்தால் 1926 அல்லது 1333 என்ற மனநல உதவி சேவைகள் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு அச்சங்கம் தெரிவித்துள்ளது.000
- 810
சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களில் 18,795 குடும்பங்களைச் சேர்ந்த 76,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.வெள்ளம், பலத்த காற்று மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.கம்பஹா மாவட்டத்தில் 16,707 குடும்பங்களைச் சேர்ந்த 68,672 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த நிலைமை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை பகுதியளவில் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 233 ஆக பதிவாகியுள்ளது.இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் கணிசமான மழைவீழ்ச்சி இன்மையால் அத்தனகலுஓயா மற்றும் களனி, கிங், நில்வலா மற்றும் களு ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை, பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன்படி, 09 மாவட்டங்களின் 47 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்பு இன்று மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.00
- 811
இந்த வருடத்தில் இதுவரை 40,494 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்ச தெரிவித்துள்ளது.இதனடிப்படையில், அதிகளவான நோயாளிகள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அதன் எண்ணிக்கை 17,159 எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.மேலும், கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 10,150 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.000
- 814
முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு சொத்துக்கள் எவ்வாறு கிடைத்தன என்பது தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி, முன்னாள் அமைச்சர்களான அனுபா பாஸ்குவல் மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தொடர்பில் ஏற்கனவே நீதிமன்ற உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.இதுதவிர மஹிந்தானந்த அளுத்கமகே, பிரசன்ன ரணதுங்க, ரோஹித அபேகுணவர்தன மற்றும் முன்னாள் அமைச்சர் மார்வின் சில்வா தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இவர்களின் விசாரணைகள் தொடர்பான விபரங்கள் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.000
- 815
இலங்கை தேர்தல் ஆணையகத்திடம் 61 வாகனங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் கடந்த ஆண்டில் (2023) அந்த வாகனங்களின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகளுக்காக 19,999,556.17 செலவிடப்பட்டுள்ளது.2023 ஆம் ஆண்டு தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட செயல்திறன் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.வாகன உதிரி பாகங்களின் விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாடு காரணமாக வாகன பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு செலவு கணிசமாக அதிகரித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் தேர்தல் ஆணையத்திற்கு சொந்தமான 61 வாகனங்களில் 33 வாகனங்கள் தலைமை அலுவலகத்தில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.தேர்தல் ஆணையத்துக்குச் சொந்தமான வாகனங்களைப் பயன்படுத்துதல் மற்றும் பராமரித்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் கணினித் துறையுடன் இணைந்து உருவாக்கப்பட்ட வாகன மேலாண்மை அமைப்பு இந்த ஆண்டின் முதல் காலாண்டு முதல் அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும் இயங்கி வருவதாக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 000
- 817
லெபனானில் ஐ.நா அமைதிப்படையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டு இஸ்ரேலுக்கு எதிராக 40 நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.லெபனானுக்கு எதிரான தாக்குதலின்போது ஐ.நா அமைதிப்படையினரின் இரு வீரர்கள் படுகாயமடைந்ததை தொடர்ந்து குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.மத்திய கிழக்கில் போர் நெருக்கடி அதிகரித்துவரும் நிலையில், அமைதிப்படையினரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக தாங்கள் கருதுவதாக அந்த 40 நாடுகளும் தங்களின் கூட்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.இதில் இலங்கையும் தமது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.மேலும், ஐ.நா அமைதிப்படையினர் மீதான தாக்குதல் என்பது ஒருபோதும் ஏற்க முடியாது என்பதுடன், உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் உரிய முறைப்படி விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.முன்னதாக பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகள் இணைந்து இந்த விவகாரம் தொடர்பில் வெள்ளிக்கிழமை கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டது.அதில், இதுபோன்ற தாக்குதல்கள் ஏற்புடையது அல்ல எனறும், உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.கடந்த வெள்ளிக்கிழமை தெற்கு லெபனானில் உள்ள அமைதிப்படையினரின் இலக்குகளுக்கு அருகில் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்த தாக்குதலில் இரண்டு அமைதி காக்கும் படையினர் காயமடைந்தனர்.அமைதிப்படையினரின் முதன்மையான முகாம் அருகே இஸ்ரேல் இராணுவம் குண்டு வீச்சையும் மேற்கொண்டுள்ளது.இந்த நிலையிலேயே ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை வீரர்களின் எண்ணிக்கையில் அதிக பங்களிப்பை அளித்துவரும் பிரன்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன000
- 819
வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் கொள்கைகளின் அடிப்படையில் பாகுபாடுகள் அற்ற தேசமாக பங்களாதேஷ் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று பங்களாதேஷ் ட்ரான்ஸ்ரேன்சி இன்டர்நெஷனல் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.பன்மைத்துவத்திற்கு எதிராக வெறுப்பு மற்றும் விரோதத்தைப் பரப்புவதற்கான முயற்சிகளுக்கு இடமளிக்கக்கூடாது என அந்நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இப்தேகாருஸ்ஸமான் கேட்டுள்ளார். பங்களாதேஷில் பல்கலைக்கழக மாணவர்கள் பல வாரங்களாக முன்னெடுத்த போராட்டத்தின் ஊடாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதோடு நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
- 821