sivam

  •  ·  Premium
  • 1 friends
  • 1 followers
  • 223 views
  • 1 votes
  • More
·
Added a post

அறிமுகமான முதல் நாளிலேயே 10,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகளுடன், டாடா ஹாரியர் EV ஒரு அற்புதமான சந்தை வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த பிரிவில் இது இரண்டாவது சிறந்த முன்பதிவு. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிப்ரவரியில், ஹாரியர் EV இன் முதன்மை போட்டியாளரான மஹிந்திரா XEV 9e, அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் 16,900 யூனிட் முன்பதிவுகளைப் பெற்றிருந்தது.

ஹாரியர் EV-க்கான மாதாந்திர உற்பத்தி இலக்குகள் வெளியிடப்படவில்லை. ஆனால், அதிகரித்த தேவையை ஈடுசெய்யும் நம்பிக்கையுடன் பிராண்ட் இருப்பதாகத் தெரிகிறது. அரிய மண் உலோகங்களின் பற்றாக்குறை தொடர்ந்து நிலவினாலும், தற்போது எந்த உடனடி நெருக்கடியையும் எதிர்கொள்ளவில்லை என்று டாடா கூறியுள்ளது. ஹாரியர் EV-யின் உற்பத்தி தடையின்றி தொடரும் என்பதை இது குறிக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் டெலிவரிகளை சரியான நேரத்தில் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

விநியோகச் சங்கிலிகள் முன்கூட்டியே வலுப்படுத்தப்பட்டிருக்கலாம் அல்லது மூலப்பொருட்களின் அதிக இருப்பு பராமரிக்கப்பட்டிருக்கலாம். டாடா சீனாவிலிருந்து நிறுவப்பட்ட சப்ளையர்களிடமிருந்து பேட்டரி செல்களை இறக்குமதி செய்வதாகக் கூறப்படுகிறது. இந்த செல்கள் பின்னர் டாடா ஆட்டோகாம்ப் மூலம் பேட்டரி பேக்குகளில் இணைக்கப்படுகின்றன.

வளர்ந்து வரும் மின்சார வாகனங்களின் பேட்டரி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, டாடா இந்தியாவில் ஒரு பேட்டரி ஜிகாஃபாக்டரியை உருவாக்கி வருகிறது. தொடர்புடைய நிறுவனமான அக்ராடாஸ், 2026 ஆம் ஆண்டில் லித்தியம்-அயன் பேட்டரி செல்களை உற்பத்தி செய்யத் தொடங்கும். பேட்டரி பேக்குகளின் உள்ளூர் உற்பத்தி, பிராண்ட் உற்பத்தி செலவுகளில் அதிக கட்டுப்பாட்டைப் பயன்படுத்த அனுமதிக்கும்.

ஹாரியர் EV இரண்டு பேட்டரி பேக் விருப்பங்களைக் கொண்டுள்ளது - 65-kWh மற்றும் 75-kWh யூனிட். சான்றளிக்கப்பட்ட வரம்பு சிறிய பேட்டரி பேக் மூலம் 538 கிமீ மற்றும் பெரிய பேட்டரி மூலம் 627 கிமீ (MIDC தரநிலைகள்) ஆகும். இருப்பினும், டாடா அதன் C75 சோதனை தரநிலைகளுடன் மிகவும் யதார்த்தமான வரம்பு மதிப்பீட்டை வழங்குகிறது. C75 எண்கள் 65-kWh பேட்டரி பேக் மூலம் 420 கிமீ முதல் 445 கிமீ வரையிலும், 75-kWh பேட்டரி மாறுபாட்டுடன் 480 கிமீ முதல் 505 கிமீ வரையிலும் உள்ளன.

ஹாரியர் EV டாப் வேரியண்ட் QWD வடிவத்தில் (இரட்டை மோட்டார்கள் கொண்ட குவாட் வீல் டிரைவ்) கிடைக்கிறது, இது பெரிய 75 kWh பேட்டரி பேக்கைப் பயன்படுத்துகிறது. இது 622 கிமீ சான்றளிக்கப்பட்ட வரம்பைக் கொண்டுள்ளது. QWDக்கான C75 வரம்பு 460 கிமீ முதல் 490 கிமீ வரை. செயல்திறனைப் பற்றிப் பேசுகையில், RWD வகைகள் 238 PS மற்றும் 315 Nm டார்க்கை உருவாக்குகின்றன.

  • 3
·
Added article

சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்டாக சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின்னர், சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. கடின உழைப்பால் சினிமாவில் அடுத்தடுத்த உயரங்களை தொட்ட விஜய் சேதுபதி, இன்று பான் இந்தியா அளவில் செம பிசியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். இவருக்கு சூர்யா சேதுபதி என்கிற மகன் இருக்கிறார். இவரும் விஜய் சேதுபதி உடன் நானும் ரெளடி தான், சிந்துபாத் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

பீனிக்ஸ் என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார் சூர்யா சேதுபதி. அவரது முதல் படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு தான் இயக்கி உள்ளார். இப்படத்தில் தேவதர்ஷினி, வரலட்சுமி சரத்குமார் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர், நடிகைகளும் நடித்துள்ளனர். பீனிக்ஸ் திரைப்படம் அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி இருந்தது. இப்படத்திற்காக பிரத்யேகமாக சண்டைப் பயிற்சி எடுத்து நடித்துள்ளார் சூர்யா. பீனிக்ஸ் திரைப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்து உள்ளார். இப்படம் ஜூலை 4ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

பீனிக்ஸ் திரைப்படத்தை தன் மகன் உடன் சேர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் புரமோட் செய்தார். இருந்தாலும் இப்படத்திற்கு பெரியளவில் ஹைப் கிடைக்கவில்லை. புரமோஷன் நிகழ்ச்சிகளில் சூர்யா நடந்து கொண்ட விதம் சிலருக்கு பிடிக்காததால் அவரை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வந்தனர். விஜய் சேதுபதி போல் கஷ்டப்பட்டு சினிமாவிற்குள் வராமல், தன் தந்தை தயவோடு ஈஸியாக வந்துவிட்டதாக விமர்சித்து வந்தனர். இந்த விமர்சனங்களுக்கு மத்தியில் பீனிக்ஸ் படம் ரிலீஸ் ஆனதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இருப்பினும் சூர்யா ரிஸ்க் எடுத்து ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளதாக பாராட்டி வருகின்றனர்.

பீனிக்ஸ் படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் சுமாரான வசூல் மட்டுமே கிடைத்துள்ளது. பீனிக்ஸ் படம் முதல் நாளில் வெறும் 10 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளதாம். இது மற்ற இரண்டு படங்களோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வசூல்.

  • 15
·
Added a news
·

கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில், வியாழக்கிழமை வரையிலான நிலவரப்படி, 1,179 பேருக்கு தட்டம்மைத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அல்பர்ட்டாவில் Calgary Stampede என்னும் விழா துவங்கியுள்ள நிலையில், தட்டம்மை பரவல் தொடர்பில் மருத்துவர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள்.

விழாவில் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 1.3 மில்லியன் மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தட்டம்மை எளிதில் பரவக்கூடிய தொற்றுநோய் என்பதால், Calgary Stampede போன்ற விழாக்களில் பங்கேற்கும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையிலுள்ளோருக்கு நோய் தொற்றும் அபாயம் உள்ளது. ஆகவே, சிறுபிள்ளைகள், கர்ப்பிணிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உடையவர்கள், தடுப்பூசி பெறாதவர்கள் ஆகியோர் கூட்டமான இடங்களை தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். மேலும், தடுப்பூசி பெறாதவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளுமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

  • 24
·
Added a news
·

 மலேசியாவில் கம்பிவண்டிப் பயணம் செய்ய விரும்பிய தம்பதி ஏமாந்துபோன சம்பவம் இணையத்தில் பேசுபொலிருளாகியுள்ளது. தம்பதி 300 கிலோமீட்டர் பயணம் செய்து கம்பி வண்டிச் சேவை எடுக்கும் தலத்தைச் சென்றடைந்தவர்களுக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஏனெனில் ஆனால் அங்கே அப்படி ஒரு சேவையே இல்லையாம். பேராக், கெடா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையில் கம்பிவண்டிச் சேவை இருப்பதாக ஒரு காணொளியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த பொய்யான காணொளி TikTok, Facebook ஆகிய சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பரவி வந்ததாக கூறப்படுகின்றது.

அதை நம்பி அந்த இடத்திற்குச் சென்ற தம்பதியிடம் அது செயற்கை நுண்ணறிவைக்கொண்டு தயாரிக்கப்பட்ட காணொளி என்று ஹோட்டலில் பணியாற்றிய பெண் ஒருவர் தெரிவித்தார். அதைக் கேட்ட இருவரும் அதிர்ச்சியடைந்தனர். இணையத்தில் காண்பதை நம்பி ஏமாற வேண்டாம் என அங்குள்ள அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

  • 27
·
Added a news
·

“Big Beautiful Bill" என பெயரிடப்பட்டுள்ள புதிய வரி சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டுள்ளார்.

“Big Beautiful Bill" என பெயரிடப்பட்டுள்ள புதிய வரி செலவு மற்றும் வரி தொடர்பான ஒரு வரிச் சட்டமாகும். இந்த புதிய வரிச் சட்டம் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு உதவும் என்று கூறப்படுவதுடன் இதற்கு எதிராக விமர்சனங்களும் எழுந்து உள்ளன.

  • 31
·
Added a news
·

2025 ஆண்டிற்கான உலகின் அமைதியான நாடுகள் பட்டியல் வெளியாகியுள்ளதுடன், கனடா 14 ஆவது இடத்தை பெற்றுள்ளது. கடந்தாண்டு 1.449 புள்ளிகளுடன் 11ஆவது இடத்தில் இருந்த நிலையில், இந்தாண்டு 1.491புள்ளிகளை பெற்று 14 ஆவது இடத்தை பெற்றுள்ளது.

பொருளாதார மற்றும் அமைதிக்கான நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலகின் அமைதியான நாடுகள் பட்டியலை வெளியிடும். இந்தாண்டிற்கான அமைதி பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகையில் 99.7% உள்ளடக்கிய 163 நாடுகளை ஆய்வு செய்து இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தாண்டும் இந்த பட்டியலில் வழக்கம் போல ஐரோப்பிய நாடுகளே முன்னிலையில் உள்ளன.

முதல் ஐந்து இடங்களை ஐஸ்லாந்து (1.095), அயர்லாந்து (1.260), நியூசிலாந்து (1.282), ஆஸ்திரியா (1.294) சுவிட்சர்லாந்து (1.294) போன்ற நாடுகள் முறையே பெற்றுக் கொண்டுள்ளன.

  • 33
  • 219
  • 219
  • 222
·
Added a post
·
  • 228
·
Added a post
·

சீனாவின் மிகப் பெரிய பணக்காரரான ஜாக் மா, சொல்வது என்னவென்றால் "வாழைப்பழத்தையும் பணத்தையும் குரங்கின் முன் வைத்தால், குரங்கு வாழைப்பழத்தைத் தேர்ந்தெடுக்கும், ஏனென்றால் பணத்தால் நிறைய வாழைப்பழங்களை வாங்க முடியும் என்று குரங்குக்குத் தெரியாது."

உண்மையில் மக்களுக்கு, நீங்கள் வேலை மற்றும் வணிகத்தை வழங்கினால், அவர்கள் வேலையைத் தேர்ந்தெடுப்பார்கள், ஏனெனில் ஒரு வணிகம் சம்பளத்தை விட அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்பது பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது.

ஏழைகள் ஏழைகளாக இருப்பதற்கு ஒரே காரணம், ஏழைகள் தொழில் முனைவோர் வாய்ப்பின் முக்கியத்திற்கான பயிற்சி பெறாததுதான்.

மக்கள் பள்ளியில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள், பள்ளியில் அவர்கள் தங்களுக்காக வேலை செய்வதற்கு பதிலாக சம்பளத்திற்கு வேலை செய்யத்தான் கற்று கொள்கிறார்கள் !

ஊதியத்தை விட லாபம் சிறந்தது, ஏனென்றால் ஊதியம் உங்களை வாழவைக்கும் , ஆனால் லாபம் உங்களுக்கு சிறப்பான வாழ்க்கையை உண்டாக்கும்.

  • 234
·
Added a post
·

ஒரு கிராமத்தில் சிறிய பலசரக்குக் கடை இருந்தது. கடைக்காரர் மிகவும் நல் லவர்.கிராமத்தையே தன் குடும்பமாக எண்ணி அன்பு காட்டுவார்

கடனுக்கு பொருள் கேட்டாலும் கொடுத்து விடுவார். தேவையான பொருட்களை எல்லோரும் அவரிடமே வாங்கினர். மதிய நேரத்தில் சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் புறப்படுவார்.அந்த நேரம் யாராவது பொருள் கேட்டு வந்தால் காத்திருக்க நேரிடுமே என்பதால் கடையை அடைக்க மாட்டார்.

அறிமுகமே இல்லாத நபராக இருந்தால் கூட, கடையைச் சற்று நேரம் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு வீட்டிற்குப் போய் விடுவார். ஒரு நாள் மதியம் திருடன் ஒருவன் கடை முன் வந்தான். அவனிடம் கடைக்காரர், "ஒரு உதவி செய்ய வேண்டும். சிறிது நேரம் கடையைப் பார்த்துக் கொண்டால், வீட்டிற்குப் போய் சாப்பிட்டு வந்து விடுவேன்," என்று கேட்டார்.

மகிழ்ச்சியுடன் சம்மதித்தான் திருடன்.கடைக்காரரும் கிளம்பி விட்டார். அந்த நேரத்தில் வந்த சிலரிடம் காசை வாங்கிக் கொண்டு சரக்கைக் கொடுத்தான் திருடன்.

பணப்பெட்டியும் திறந்தே இருந்தது. அந்த நேரத்தில், திருடனை நன்றாக அறிந்த அவனின் நண்பன் ஒருவன் அங்கே வந்தான். "அடேய்! திருடுவதற்கு இதை விட சரியான சமயம் நமக்கு கிடைக்காது. பணம், சாமான்களை கட்டிக் கொண்டு ஓடி விடலாம்," என்று யோசனை கூறினான்.

திருடனுக்கோ திருடுவதா வேண்டாமா? என்ற தயக்கம் தனக்குள் ஏன் இந்த மாற்றம் என்றே அவனுக்குப் புரியவில்லை. சிறிது நேரம் சிந்தித்தவன், ""தன்னை நம்பிய கடைக்காரருக்குத் துரோகம் செய்ய மனமில்லை." என்று சொல்லி நண்பனிடம் மறுத்து விட்டான்.

சிறிது நேரத்தில் கடைக்காரர் வந்து விட்டார். அவரிடம், ""எல்லாப் பொருளும் சரியாக இருக்கிறதா? என்று பார்த்துக் கொள்ளுங்கள்," என்றான். கடைக்காரரோ,"" ஏன் இப்படி கேட்கிறாய். உன் மீது கொண்ட நம்பிக்கையால்தான் கடையை ஒப்படைத்து சென்றேன். அதனால் பணத்தையோ, பொருளையோ சரி பார்க்கத் தேவை இல்லை," என்றார்.

கடைக்காரரின் நம்பிக்கை மிக்க பேச்சை கேட்டதும் திருடனின் வருத்தம் அதிகரித்தது." உங்களைப் போன்ற நல்லவர்களுடன் ஒருநாள் பழகியதற்கே மனம் இவ்வளவு தூய்மையாகி விட்டதே.. வாழ்நாளெல்லாம் உங்களை மாதிரி நல்ல உள்ளம் படைத்தவர்களின் நட்பு கிடைத்தால் அதைவிட எனக்கு வேறு எதுவும் தேவை இல்லை என்றான். கடைக்காரர்.. “

நீ சொல்வது புரிய வில்லையே!", என்றார். "ஐயா! என்னை மன்னியுங்கள். நான் ஒரு திருடன். என் நண்பனும், நானும் கடையில் திருடி விட்டு ஓட எண்ணினோம்.. ஆனால், நல்ல வேளையாக என் இயல்பான திருட்டுக் குணம் இன்று மறைந்து விட்டது. இனி ஒருநாளும் திருட மாட்டேன்," என்று அழுதான். கடைக்காரரின் காலில் விழுந்து வணங்கினான்.

  • 243