முட்டை விலை குறைந்தாலும், முட்டையை பிரதான உள்ளீட்டு பொருளாக இணைத்து செய்யப்படும் “ஆம்லெட்”, முட்டை அப்பம், முட்டை ரொட்டி, கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலை இன்னமும் குறையாது அதிகரித்த விலையிலேயே காணப்படுவதால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஒரு முட்டையின் விலை 58 முதல் 60 ரூபாய் வரை இருந்தபோது, முட்டை அப்பம் 120 -140 ரூபா வரையாகவும் முட்டை ரொட்டி 130 முதல் 150 ரூபாய் வரையாகவும், ஆம்லெட் 120 - 150 ருபாவாகவும் முட்டைக் கொத்து ரொட்டி 350 ரூபாவாகவும் சடுதியாக உயர்ந்தது.இதேநேரம் தற்போது முட்டை ஒன்றின் விலை 22 முதல் 26 வரை விற்பனை செய்யப்படுகின்றது. ஆனால் முட்டை அதிகரித்த விலை நாள்களில் காணப்பட்ட உச்ச விலைகளிலேயே “ஆம்லெட்”, முட்டை அப்பம், முட்டை ரொட்டி, கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலை இன்னமும் அனைத்து உணவகங்களிலும் காணப்படுகின்றது.இதேநேரம் முட்டை விலை குறைவாக விற்பனை செய்யப்படும் போது எதற்காக இன்னமும் குறித்த உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படவில்லை என்று வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்புவதுடன் அது தொடர்பில் துறைாசார் அதிகாரிகள் அக்கறையீனமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டிகின்றனர்.அத்துடன் ஒரு பொருளின் விலை அதிகரிக்கும் நாளன்றே அது சார் உணவு பொருட்களின் விலையையும் அதிகரிக்கும் உணவகங்கள் இவ்வாறு மிக குறைவாக முட்டை விற்பனை செய்யப்படும் போது அந்த உணவு பொருட்களின் விலையை குறைக்க முன்வராது மக்களை சுரண்டுகின்றனர் என்றும் குற்றம் சுமத்தும் வாடிக்கையாளர்கள் விலைகள் குறைக்கப்படும் என்று கூறி ஆட்சியைப் பிடித்து அரியணை ஏறிய அனுர அரசும், அதன் துறைசார் அதிகாரிகளும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு சாமரம் வீசுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.எனவே முட்டை விலை அதிகரிக்கும் போது உணவுப் பொருட்களின் விலை உடனடியாக உயர்த்தியதை போன்று முட்டை விலை குறைக்கப்பட்டுள் இச்சந்தர்ப்பத்தில் விலையை குறைக்க உணவக உரிமையாளர்கள் முன்வர வேண்டும் என்பதுடன் இன்றைய அரசும் அதன் துறைசார் அதிகாரிகளும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மின்சார சபை 18.3 சதவீத மின்சார கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிந்துள்ள போதிலும், மின்சார கட்டணத்தைக் குறைந்தபட்சம் 20 சதவீதம் குறைப்பதற்கான வழி இருப்பதாக மின்சார நுகர்வோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சீவ தம்மிக, தெரிவித்துள்ளார். மின்சார சபை கடந்த 2023 ஆம் ஆண்டு 57 பில்லியன் ரூபாவையும், 2024ஆம் ஆண்டு 144 பில்லியன் ரூபாவையும் இலாபமாக ஈட்டியது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 22 சதவீத கட்டணக் குறைப்பைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார சபையின் 200 பில்லியன் ரூபாவில் இருந்து 51 பில்லியன் ரூபாவை ஆறு மாத காலத்திற்குப் பயன்படுத்த அனுமதித்தது.எனினும் 18 பில்லியன் ரூபாவை மாத்திரமே மின்சாரசபை பயன்படுத்திய போதிலும் சுமார் 183 பில்லியன் ரூபாய் மீதமுள்ளது.இந்நிலையில் எதற்காக மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்? என மின்சார நுகர்வோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சீவ தம்மிக கேள்வி எழுப்பியுள்ளார்.000
அதிக குற்றங்கள் நிகழும் 52 பொலிஸ் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். இன்றுவரை சுமார் 3000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று முகாம்களில் இருந்து பல துப்பாக்கிகள் பாதாள உலக குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நாங்கள் 1200 க்கும் அதிகமான துப்பாக்கிகளை கைப்பற்றியிருக்கின்றோம். இது தொடர்பில் பலரை கைது செய்துள்ளோம். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,குற்றவாளிகளைக் கைது செய்ய விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது, நாடு முழுவதும் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இரவு ரோந்துகள் மற்றும் நடமாடும் ரோந்துகள் நடத்தப்படுகின்றன.மேலும், முன்னாள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் மற்றும் தற்போதைய பிராந்திய அரசியல் பிரமுகர்கள், 10 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் நேரடி தொடர்புகளைக் கொண்டுள்ளனர் என்ற புலனாய்வுத் தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.அதன்படி, ஒழுங்கமைக்கப்படாத குற்றச் செயல்களைத் தடுக்கவும், அவற்றில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் விசேட நடவடிக்கைப் பிரிவு ஒன்று நிறுவப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.மேலும் பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு மின்னஞ்சல் மூலம் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.ஜேர்மனி நெதர்லாந்து ஐபி முகவரிகளை வைத்திருப்பவர்களே இந்த மின்னஞ்சல் மிரட்டலை விடுத்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.தேசபந்து தென்னக்கோனை கொலை செய்வதற்கான சதிதிட்டம் குறித்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன, சிறைத்தண்டனை அனுபவிக்கும் சமன் குமார என்பவரிடம் இதற்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்கட்சி தலைவர் சஜித்பி ரேமதாசவை சினைப்பர் தாக்குதல் மூலம் கொலை செய்யதிட்டமிட்டுள்ளனர் என்ற பொய்யான தகவல் கிடைத்துள்ளது இது பொய்யான தகவல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்000
யாழ்ப்பாணம் - வரணிப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது கொடிகாமம் பொலிஸார் இன்றையதினம் (20) துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளனர்.பளை பகுதியிலிருந்து சட்டவிரோத மணலுடன் சென்ற டிப்பர் வாகனத்தை எழுதுமட்டுவாள் பகுதியில் கடமையிலிருந்த கொடிகாமம் பொலிஸார் நிறுத்த முயற்சித்த போது குறித்த டிப்பர் வாகனம் நிறுத்தாது கொடிகாமம் பகுதியை நோக்கி தப்பியோடியது.இதையடுத்து பொலிஸார் குறித்த டிப்பர்வாகனத்தை, தமது வாகனத்தில் துரத்திச் சென்ற நிலையில் டிப்பர் வாகனத்தின் ரயர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தனர்.இதையடுத்து குறித்த டிப்பர் வாகனத்தை நிறுத்திவிட்டு சாரதி உட்பட இரண்டு சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் சட்டவிரோத மணலுடன் சென்ற டிப்பர் வாகனத்தை கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் தப்பியோடிய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.00
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வட்டார மட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 40 சதவீதத்தினரின் பெயர்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், உறுப்பினர்களின் எண்ணிக்கையை வர்த்தமானி மூலம் வெளியிட வேண்டியிருப்பதால், தொடர்புடைய வேட்பாளர்களின் பெயர்களை உடனடியாக அனுப்புமாறு அந்தப் பிரிவினரிடம் கோரிக்கை விடுப்பதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் மன்றங்களின் பதவிக்காலம் ஆரம்பமாகிறது எனவும்அதற்கு முன்னர் உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானி மூலம் வெளியிடும் பொறுப்பு என்னிடம் உள்ளது எனவும் அதற்கு உங்களின் பெயர்கள் கிடைப்பது மிகவும் முக்கியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, பெயர்களைப் பெற்று வர்த்தமானி செய்த பின்னரே, 50% குறைவாக வெற்றி பெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கு தலைவர் அல்லது பிரதி தலைவர் நியமனம் செய்ய மாகாண ஆணையாளர்களுக்கு ஆரம்பகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானி செய்யப்பட்டு ஒரு வாரத்திற்குள் மாகாண ஆணையாளர்கள் இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.000
புலிகளின் பெயர், அவர்களது சின்னங்கள் போன்றவற்றை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நினைவுகூரல் நிகழ்வுகளில் பங்கேற்பவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.அத்துடன் நினைவுகூரல் நிகழ்வுகளில் பங்கேற்பவர்களுக்கு கனடா அல்ல உலகில் எந்தவொரு நாடும் இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றதாக கூறினால் அதனை எதிர்ப்பதாகவும் அதனை நிராகரிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்வதற்கு எவ்வித தடையும் கிடையாது என்ற போதிலும் பயங்கரவாத இயக்கமொன்றை பிரசாரம் செய்யும் வகையிலான நிகழ்வுகளை அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை நாட்டில் இனவழிப்பு இடம்பெறவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.தமிழ் மக்களை இலங்கை இராணுவம் அழித்திருந்தால் அதனையே இனவழிப்பு என குறிப்பிடலாம் என தெரிவித்துள்ளார். எனினும் அவ்வாறு இடம்பெறவில்லை எனவும் அவ்வாறான சம்பவமொன்று எப்போதும் இடம்பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.போரின் போது சிவிலியன்களை பாதுகாத்துக் கொண்டே முன்நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.இறுதிக் கட்ட போரின் போது புலிகள் பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்திய போதிலும் படையினர் அவர்களை மீட்டிருந்தனர் எனவம் கடந்தகால அரசுகள் போன்றே இன்றைய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும் தெரிவித்துள்ளதுடன் இலங்கையில் இனவழிப்பு மேற்கொள்ளப்பட்டதாக எந்தவொரு நாட்டிலும் சாட்சியங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். புதிய நபர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மதிப்பு உண்டாகும். கமிஷன் வகைகளால் லாபம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் ரிஷபம்வரவுகளின் மூலம் கையிருப்புகள் மேம்படும். சமூகம் சார்ந்த பணிகளில் மதிப்பு உயரும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாகன வசதிகள் அதிகரிக்கும். தேடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். இழுபறியான சில பணிகளை முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் வாய்ப்புகள் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மிதுனம்நண்பர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த சோர்வுகள் குறையும். தன வரவுகளில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். உயர் பொறுப்புக்களின் மூலம் மதிப்பு உயரும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். சில அனுபவங்களின் மூலம் புதிய பாதைகள் புலப்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். சாந்தம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் கடகம்உடன் இருப்பவர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வரவுகளில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் நிதானத்துடன் செயல்படவும். பணி சார்ந்த அவசர முடிவுகளை தவிர்க்கவும். மனதளவில் சிறு சிறு சஞ்சலங்கள் உண்டாகும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : நீலம் சிம்மம்குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நவீன கருவிகள் மீது ஆர்வம் ஏற்படும். பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். தொழில் ரீதியான பயணங்களால் நன்மைகள் ஏற்படும். மறைமுகமான போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். பலவித மக்களின் தொடர்புகள் ஏற்படும். ஆதாயம் கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு கன்னிஎதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். சமூகம் சார்ந்த பணிகளில் செல்வாக்கு உயரும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். ஒப்பந்தம் சார்ந்த பணிகளில் லாபம் மேம்படும். முயற்சிக்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் துலாம்புதிய முயற்சிகளில் எண்ணியவை ஈடேறும். குழந்தைகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வேலையாட்களின் இடத்தில் பொறுமையுடன் செயல்படவும். சக ஊழியர்களிடத்தில் அமைதி வேண்டும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் பிறக்கும். கல்வியில் இருந்துவந்த மந்தநிலை விலகும். சோர்வு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு விருச்சிகம்பெரியார்களின் ஆலோசனைகள் கிடைக்கும். முயற்சிக்கு உண்டான பலன்கள் சாதகமாகும். தள்ளிப்போன சில காரியங்கள் கைகூடும். அரசு பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். சேமிப்பு விஷயங்களில் கவனம் வேண்டும். இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : சந்தனம் தனுசு விமர்சன பேச்சுக்களால் செயல்களில் சில மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சகோதர வழியில் ஆதாயம் உண்டாகும். சிறிய முதலீட்டில் லாபம் அடைவீர்கள். நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசு காரியங்களில் அலைச்சல் ஏற்படும். பாராட்டு கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெண்மை மகரம்குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். கடன் உதவிகள் கிடைக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். நண்பர்களின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். அலுவலகம் சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். இறை வழிபாடு புரிதலை உண்டாக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் கும்பம்தொழில் முதலீடுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். பழைய நினைவுகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். அலுவலகத்தில் பொறுமையுடன் செயல்படவும். தொலைதூர உறவினர்களின் சந்திப்பு உண்டாகும். சிந்தனை மேம்படும் நாள். அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மீனம்ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். இனம்புரியாத சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். குடும்ப பெரியவர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் திடீர் விரயங்கள் உண்டாகும். பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். சுகம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சை
விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 6 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 20.5.2025.இன்று அதிகாலை 02.07 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.இன்று மாலை 03.48 வரை அவிட்டம். பின்னர் சதயம்.இன்று அதிகாலை 01.21 வரை பிராம்மியம். பின்னர் இரவு 11.17 வரை ஐந்திரம். பிறகு வைதிருதி.கரணம் : இன்று அதிகாலை 02.07 வரை பவம். பின்னர் பிற்பகல் 01.25 வரை பாலவம். பிறகு கௌலவம்.அமிர்தாதியோகம்: இன்று மாலை 03.48 வரை சித்த யோகம். பின்னர் மரண யோகம்.நல்ல நேரம்:காலை : 07.30 முதல் 08.30 மணி வரை காலை : 10..30 முதல் 11.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
இதற்கான விடையை சீன தத்துவ ஞானியான லா வோ த் ஸவின் ஒரு கதை மூலம் பார்க்கலாம்.'என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை' என்றான் ஒரு அரசன் ஞானியிடம்.'உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா' என்று ஞானி கேட்டார்.'என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. கள்வர் பயம் இல்லை. அதிக வரிகள் விதிப்பதில்லை. முறையாக நீதி செலுத்தப்படுகிறது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை. இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை' என்றான்.'அப்படியானால் ஒன்று செய். உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு' என்றார் ஞானி.'எடுத்துக் கொள்ளுங்கள்'என்றான் மன்னன்.'நீ என்ன செய்வாய்' என்றார் ஞானி.'நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன்' என்றான் அரசன்.'எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதை விட என்னிடமே வேலை செய். உனக்கு தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது. அதையே செய். என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா. நான் பிறகு வந்து கணக்கு, வழக்குகளை பார்க்கிறேன்.' என்றார். சரி என்றான் மன்னன்.ஒரு ஆண்டு கழிந்த பின் ஞானி அரசனை காண வந்தார். அரசன் இப்போது மகிழ்ச்சியாக காணப்பட்டான். அவரை வரவேற்று உபசரித்தவன் நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து நீட்டினான்.'அது கிடக்கட்டும்' என்ற ஞானி 'நீ இப்போது எப்படி இருக்கிறாய்' என்று கேட்டார்.'நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன்''முன்பு நீ செய்த பணிகளுக்கும், இப்போது செய்த பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா?''இல்லை''அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய்? இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்?' விழித்தான் அரசன். ஞானி சொன்னார்.'அப்போது நீ இது என்னுடையது என்று எண்ணினாய். இப்போது இது எனதில்லை. நான் இங்கு வெறும் பிரதிநிதி தான் என்று எண்ணுகிறாய். அந்த மனம் தான் அனைத்திற்கும் அடிப்படையே. நான் என்ற எண்ணம் வரும் போது அத்தனை துயரங்களும் உன்னை சூழ்ந்து கொண்டு விடும். இந்த உலகம் எனதல்ல. இந்த உடல் எனதல்ல. எனக்கு அளிக்கப்பட்டது. இந்த உயிர் எனதல்ல. எனக்கு கொடுக்கப்பட்டது என்று உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும். இதே மனநிலையுடன் நீ இந்த நாட்டை நீயே ஆட்சி செய்' என்று கூறி விடைபெற்றார் ஞானி.ஐம்புலன்களையும் இடைவிடாமல் நெறிப்படுத்துபவன் மனம் ஒருமித்தவன் ஆகிறான். அவனிடம் சலனங்கள் ஏற்படுவதில்லை .
ஒரு டாக்டர் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று ஒரு விளம்பரம் செய்தார்!அதாவது தன்னிடம் வரும் நோயாளிகள் 500₹ ஃபீஸ் கொடுக்க வேண்டும், அப்படி டாக்டர் அவர்களின் வியாதியை குணப்படுத்த வில்லை என்றால் டாக்டர் அவர்களுக்கு 1000₹ தந்துவிடுவதாக விளம்பரம் செய்தார்.விளம்பரத்தை பார்த்த ஒருவர் டாக்டரை ஏமாற்றி எப்படியாவது 1000₹ ஆட்டய போடனும்என்று நினைப்பில் அவரை சந்தித்தார்!டாக்டர் அவரிடம் என்ன பிரச்சினை உங்களுக்கு என்று கேட்க அதற்கு அவர் டாக்டர் எனக்கு நாக்கில் சுத்தமாக ருசி இல்லை என்று சொல்ல ! டாக்டரும் எல்லா சோதனை செய்து பார்த்து விட்டு இவர் தம்மிடம் ஏமாற்றுகிறார் என்று தெரிந்து கொண்டு! அவரின் நர்சை கூப்பிட்டார்!நர்ஸ் அந்த அலமாரியில் 11 ஆம் நம்பர் பாட்டிலை எடுத்து இவர் நாக்கில் இரண்டு சொட்டு விடுங்கள் என்று சொல்ல ! நர்சும் அதே மாதிரி ரெண்டு சொட்டு விட! வந்தவர் டாக்டர் என்ன பெட்ரோல் போய் நாக்கில் விடரீங்க என்று சொல்ல !பார்த்தீர்களா உங்களுக்கு நாக்கில் சுவை வந்து விட்டது!நர்ஸ் இவரிடம் 500₹ ஃபீஸ் வாங்கிட்டு அனுப்புங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.என்னடா இப்படி ஆகி விட்டதே என்று சரி அடுத்த வாரம் பார்ப்போம் என்று ஒரு வாரம் கழித்து டாக்டரை போய் பார்த்தார். டாக்டர் வர வர எனக்கு நியாபக சக்தி சுத்தமா போய் விட்டது! எப்படியாவது குண படுத்துங்க! என்று சொல்ல டாக்டரும் எல்லா சோதனைகளும் செய்து விட்டு நர்சிடம் , அந்த அலமாரியில் 11ஆம் நம்பர் பாட்டில் எடுத்து வா என்று சொன்னது தான் போதும்!வந்தவர் ஐயோ டாக்டர் அலமாரியில் இருக்கும் 11 ஆம் நம்பர் பாட்டில் பெட்ரோல் ஆச்சே! என்று சொல்ல !பார்த்தீர்களா உங்களுக்கு நியாபக சக்தி வந்து விட்டது, போன வாரம் பார்த்தீர்கள் இப்பவும் உங்கள் நினைவில் இருக்கு பாருங்க! 500₹ கொடுத்து விட்டு செல்லுங்கள் என்று டாக்டர் சொன்னார்.இப்படியே ஒரு வாரம் ஓடியது சரி இன்னைக்கு டாக்டர் கிட்ட எப்படியாவது 1000₹ வாங்கிவிடனும் என்று முடிவு செய்தார்.இப்போ டாக்டரை சந்தித்து தனக்கு கண் பார்வை சரியாக தெரியவில்லை என்று சொல்ல டாக்டரும் அவரை நன்றாக சோதித்துவிட்டு உங்களுக்கு வந்து இருக்கும் வியாதியை என்னால் குண படுத்த முடியவில்லை நான் தோற்று விட்டேன்! இந்தாங்க 1000₹ என்று நோட்டை நீட்டினார்!பணத்தை !பணத்தை பார்த்தவுடன் நம்ம ஆளுக்கு ஒரே கோபம் என்ன டாக்டர் என்னை ஏமாற்ற பார்க்கிறீர்கள் 1000₹ தருகிறீர்கள் என்று சொல்லி விட்டு வெறும் 100₹ கொடுக்கிறீர்கள் என்று சொல்ல!டாக்டர் சிரித்து கொண்டே சொன்னாராம் பார்த்தீர்களா இப்பொழுது உங்களுக்கு கண் நன்றாக தெரிகிறது.நர்ஸ் இவர் கிட்ட 500₹ வாங்கிட்டு அனுப்புங்க என்றாராம்.
இலங்கையின் முன்னாள் ஆட்சியாளர்களான ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்த குற்றவாளிகள் இறுதியாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களிற்காக பொறுப்புக் கூறச்செய்யப்படும் ஒரு நாளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என கனடாவின் பிராம்டன் மேயர் பேட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார்.நீதிக்காகவும் நினைவுகூரலிற்காகவும், ஒற்றுமையுடன் ஒன்றாக நிற்பதற்கும் எங்களை அர்ப்பணிப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை கௌரவிப்போம். இன்றும் எப்போதும் என்றும் பிராரம்டன் மேயர் பேட்ரிக் பிரவுன் குறிப்பிட்டுள்ளார் .
நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் கணவனை பார்த்து பேசிவிட்டு திரும்பிய மனைவி கடும் கோபத்துடன் சிறை அதிகாரிகள் இருந்த அறைக்கு சென்றாள்.'என்னுடைய கணவர் இருக்கும் சிறைக்கு அதிகாரி யார்?'வார்த்தைகளில் அனல் தெறிக்க கேட்டாள்.ஓய்வு பெறுவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே இருந்த வயதில் மூத்த அந்த அதிகாரி பதில் சொன்னார்,'நான் தான்..! என்ன விஷயம்?'அடுத்த நொடி அவள் பத்திரகாளியாய் மாறி ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்தாள்,'என்ன விஷயமா? இது சிறைச்சாலையா அல்லது சித்திரவதை கூடமா? என்னுடைய புருஷனை இப்படி கணக்கு வழக்கு இல்லாமல் கொடுமைப்படுத்திக்கிட்டு இருக்கீங்க?இதை நான் சும்மா விடமாட்டேன். மனித உரிமைகள் ஆணையத்திற்கு எடுத்துச் சென்று உங்கள் அனைவரின் வேலையையும் காலி செய்து வீட்டிற்கு அனுப்பி வைப்பேன்'அந்த அதிகாரி குழப்பமாய் கேட்டார்,'ஏம்மா இவ்வளவு கோபப்படுற? அப்படி என்ன தப்பு நடந்து போச்சு?''என்ன தப்பு நடந்து போச்சா..? என் புருஷனுக்கு இவ்வளவு கடுமையான வேலையை கொடுத்து செய்யச் சொன்னா அவர் சீக்கிரம் செத்துப் போயிட மாட்டாரா?'அதிகாரிக்கு மேலும் மேலும் குழப்பம் அதிகரித்தது. பதற்றமாய் பேசினார்,'நாங்க எங்கம்மா உன் வீட்டுக்காரனுக்கு வேலை கொடுத்தோம்? வேளாவேளைக்கு நல்லா மூக்கு முட்ட தின்னுட்டு செல்லுல படுத்து உறங்கிக்கிட்டு தானே இருக்கான்'அதிகாரியின் பதில் அவளை காண்டாக்கியது. பற்களை நறநறவன கடித்துக் கொண்டு சொன்னாள்,'மனுஷத் தன்மையில்லாமல் பேசுறதுல போலீஸ்காரங்களை மிஞ்ச ஆளே கிடையாதுன்னு என் வீட்டுக்காரர் அடிக்கடி சொல்லுவாரு. அது சரியாத்தான் இருக்கு.வெறும் ஒரு அடி இரும்பு கம்பியை மட்டும் கையில கொடுத்து ஜெயிலுக்கு அடியிலிருந்து ஜெயிலுக்கு வெளியே இருக்கிற ரோடு வரைக்கும் இம்மி கூட சத்தம் வராமல் சுரங்க பாதை தோண்ட சொல்லி இருக்கீங்க.மூணு மாசமா மனுஷன் படாத பாடுபட்டு தோண்டினதுல அவர் கையெல்லாம் சிவந்து புண்ணாகிப் போய் இருக்கு. பாதி தூரம் தான் தோண்டி இருக்காராம். இன்னும் மீது தூரம் தோண்டி வேண்டி இருக்குன்னு ரொம்ப சலிப்பா சொன்னாரு.தோண்டுறதுக்கு அவருக்கு துணையா கூட ரெண்டு பேரை அனுப்பினா நீங்க என்ன குறைஞ்சா போயிருவீங்க?'சிறைக்குள் இருந்து நடந்தவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த அவளின் கணவன் மெல்ல மயக்கத்திற்கு தாவிக் கொண்டிருந்தான்.
ஒரு குடிகாரனுக்கு முன்னால் 10 நிமிடம் உட்காருங்கள் - வாழ்க்கை மிகவும் எளிதானது என்று உங்களுக்குத் தோன்றும்.ஒரு துறவிக்கு முன்னால் 10 நிமிடம் உட்காருங்கள் - உங்களிடம் உள்ள எல்லாவற்றையும் தானமாக கொடுக்கத் தோன்றும்.ஒரு தலைவனுக்கு முன்னால் 10 நிமிடம் உட்காருங்கள் - உங்கள் படிப்பெல்லாம் பயனற்றது என்று தோன்றும்.ஒரு ஆயுள் காப்பீட்டு முகவருக்கு முன்னால் 10 நிமிடம் உட்காருங்கள் - செத்துப்போவது நல்லது என்று தோன்றும்.வியாபாரிகளுக்கு முன்னால் 10 நிமிடம் உட்காருங்கள் - உங்கள் வருமானம் மிகவும் குறைவு என்று உங்களுக்குத் தோன்றும்.விஞ்ஞானிகளுக்கு முன்னால் 10 நிமிடம் உட்காருங்கள் - உங்கள் அறியாமையின் தீவிரத்தை நீங்கள் உணர்வீர்கள்.நல்ல ஆசிரியர்களுக்கு முன்னால் 10 நிமிடம் உட்காருங்கள் - நீங்கள் மீண்டும் மாணவனாக ஆசைப்படுவீர்கள்.ஒரு விவசாயி அல்லது தொழிலாளிக்கு முன்னால் 10 நிமிடம் உட்காருங்கள் - நீங்கள் போதிய அளவு கடினமாக உழைக்கவில்லை என்று உங்களுக்குத் தோன்றும்.ஒரு சிப்பாய்க்கு முன்னால் 10 நிமிடம் உட்காருங்கள் - உங்கள் சொந்த சேவைகளும் தியாகங்களும் அற்பமானவை என்று உங்களுக்குத் தோன்றும்.ஒரு நல்ல நண்பனுக்கு முன்னால் 10 நிமிடம் உட்காருங்கள் - உங்கள் வாழ்க்கை சொர்க்கம் என்று உங்களுக்குத் தோன்றும்!
குத்துச் சண்டை வீரர் ஒருவர் இருந்தார். அந்தப் பகுதியில் அவரை வெல்ல யாருமே இல்லை. சில குத்துக்களிலேயே எதிரியை வீழ்த்திவிடும் வலிமை அவருக்கு இருந்தது. தோல்வி என்பதையே அறியாமல் வாழ்ந்து வந்தார்.இப்போதெல்லாம் அவருடன் போட்டியிட யாருமே முன்வருவதில்லை.. அவருடைய எதிரிகள் எவ்வளவோ விதங்களில் முயற்சி செய்தும் கூட அவரை வீழ்த்த முடியவில்லை.. நல்ல உடற்பயிற்சி , சத்தான உணவு , தேவையான அளவு உறக்கம் என்று தன்னுடைய உடலை நன்றாகப் பேணி வந்ததால், எதிரிகள் அவரை வீழ்த்த வேறு ஏதாவது வகையில் திட்டம் வகுக்க ஒன்று கூடினார்கள். பல விதமான ஆலோசனைகளை அவர்கள் கூடிப் பேசினார்கள். ஏதாவது செய்து அவரைக் கொன்றுவிட்டாலும் அவர் வீரர்களுக்கெல்லாம் முன்மாதிரி என்று பேசப்பட்டு அழியாத புகழைப் பெற்று விடுவார். எனவே அந்த யோசனை கைவிடப்பட்டது.குடிப்பழக்கம் போன்ற கெட்ட பழக்கங்களை அவருக்கு அறிமுகப்படுத்தலாம் என்று முயற்சி செய்து அயல் நாட்டு போதை வஸ்துக்களை அவருக்குப் பரிசளிக்க முயன்ற போது அவர்களுக்கு முன்பாகவே அவர் அதை உடைத்து நொறுக்கி அவர்களை அவமானப்படுத்தி அனுப்பினார்.உருப்படியாக எந்த ஒரு யோசனையும் கிடைக்காத நிலையில் அவர்களுக்குள் ஒரு முடிவெடுத்தார்கள். எதையாவது செய்து அவரைப் போட்டியில் வீழ்த்த வேண்டும். அவரை வீழ்த்துபவருக்கு 10லட்சம் பரிசு கொடுப்பதாக வாக்களித்தார்கள்..பெரிய தொகைதான்,......... இருந்தாலும் அவரை வீழ்த்த இதைவிட அதிகமாக செலவு செய்யவும் அவர்கள் தயாராக இருந்தார்கள். இந்தச் செய்தி காட்டுத்தீ போலப் பரவியது. இது புதிதாய் சண்டைப் பயிற்சி செய்து வரும் ஒரு இளைஞனின் காதிலும் விழுந்தது. 10 லட்சம் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டாலும் அந்த வீரரின் வலிமை தெரிந்திருந்ததால் போட்டிக்கு வர யாருமே முன்வரவில்லை. இந்த நிலையில் அந்தப் புதிய இளைஞன் , தான் போட்டிக்கு வருவதாக முன்வந்தான். பலரும் அவனை பயமுறுத்தி அவரிடம் மோத வேண்டாம் என்று அறிவுரை கூறினார்கள். அவனோ தன் முடிவில் உறுதியாக இருந்தான். வீரரும் அவனுடன் சண்டையிட சம்மதித்து விட்டார். போட்டியின் நாள் அறிவிக்கப் பட்டது.புதிய இளைஞன் தன்னுடைய நெருக்கமான நண்பர்களை வரவழைத்தான் . அவர்களிடம் தனக்காக உதவிச் செய்யும்படி சில விஷயங்களைக் கூறினான். அவன் எதற்காக அப்படிச் சொன்னான் என்று அவர்களுக்குப் புரியவில்லையென்றாலும் நண்பனின் வெற்றிக்காக எதையும் செய்யத் தயாராக இருந்ததால் அவன் சொன்னதை அப்படியே செய்தார்கள்.அதில் ஒருவன் , வீரரின் வீட்டுக்குப் பழங்களுடன் போய் அவர் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சொன்னான். அவரும் சந்தோஷமாக அவற்றைப் பெற்றுக் கொண்டு நன்றி சொன்னார். வந்தவன் திடீரென்று , "என்னய்யா ஆச்சு உங்களுக்கு ?பேசும் போதே இப்படி மூச்சு வாங்குதே. கல்லு மாதிரி இருந்தீங்களே.. உடம்பைப் பாத்துக்குங்க " என்று சொல்லிக் கிளம்பினான்."எனக்கு மூச்சு வாங்குதா ? நான் நல்லா தானே பேசுறேன் ? " . அவருக்குக் குழப்பம் வந்துவிட்டது.மறுநாள் அதிகாலை, அவர் வீதியில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திட்டப்படி இன்னொரு இளைஞன் அவருக்கு எதிர்ப்பட்டு வணங்கினான். " ஐயா , போட்டியில கலந்துக்கப் போறதா கேள்விப்பட்டேன் . நான் உங்க தீவிர ரசிகன். இப்பவும் நீங்கதான் ஜெயிக்கப் போறிங்க.அதுல சந்தேகமே இல்லை.ஆனாலும் முன்னால உங்க ஓட்டத்துல இருந்த வேகமும் , வலிமையும் இப்ப இல்லையே ? உடம்பு சரியில்லையா ? " என்று கேட்டுவிட்டு நகர்ந்தான்.'என்ன எல்லாரும் இப்படி கேக்குறாங்க?' இப்போது சிறிதாய் பயம் துளிர்விட்டது. போட்டி துவங்கும் நேரம் வந்தது. பலரும் வந்து அவருக்கு வாழ்த்து சொல்லி உற்சாகப் படுத்தினர். அவர் மேடையேறப் போகும் போது எதிராளியான இளைஞனின் நண்பனான மற்றொரு இளைஞன் கையில் பூங்கொத்துடன் வந்து அவரை வாழ்த்திக் கைகுலுக்கினான். "என்னய்யா , எப்பவும் உங்க பிடி இரும்பு மாதிரி இருக்கும் இப்ப ரொம்பவும் தளர்ந்து போச்சே என்னாச்சு உங்களுக்கு ? " என்று கேட்டுவிட்டு விடைபெற்றான் .அவ்வளவுதான் வீரர் முற்றிலுமாக சோர்ந்து போனார். போட்டி துவங்கியது . அவர் வேகமாய்த் தாக்குதலை ஆரம்பித்தாலும் இனம் புரியாத சோர்வு அவரை ஆட்கொண்டது. இளைஞனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பலவீனமாய் சரிந்தார்.எல்லாரும் ஓடி வந்து இளைஞனின் சாதனையையும் , வீரத்தையும் பாராட்டினார்கள் . அவனோ நன்றிப் புன்னகையோடு தன் நண்பர்களின் முகத்தை ஏறிட்டான்.பலருடைய வாழ்வில் , வந்துவிட்ட வியாதியைவிட , வந்துவிடுமோ என்று எண்ணி பயப்படுகிற வியாதியே பலரை கீழேதள்ளி வீழ்த்திவிடுகிறது.பலப்படுவோம் எண்ணங்களால் , நம்பிக்கைகளால்.. உடல் அளவில் பலவீனப்பட்டாலும் மனதளவில்மிருகபலத்தோடு இருப்போம்... பிறரின் வார்த்தைகளால் பயப்படவும் வேண்டாம்....
கணவனுக்கும் மனைவிக்கும் பயங்கர சண்டை.அப்புறம் நாள் முழுக்க ரெண்டு பேரும் பேசவே இல்லை..மனைவியால பொறுக்க முடியல..கணவன் கிட்ட வந்தாங்க..இப்படி பேசாம இருக்கிறது இனிமேலும் சரி இல்லை.ரெண்டு பேரும் விட்டுக் கொடுத்து ஆளுக்கொரு நல்ல காரியம் செஞ்சா சமாதானமாப் போயிடலாம்னாங்க.கணவன்:: நல்லது. என்ன செய்யலாம் சொல்லு.மனைவி:::நீங்க பெரிய மனசு பண்ணி செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேளுங்க..கணவன் - சரி நான் பெரிய மனசு பண்ணி நீ செஞ்ச தப்பை மன்னிச்சு விட்டுடறேன்..மனைவி - ~~!!!!!!!!!!!!!!
தமிழரசுக் கட்சியின் பதில் பொது செயலாளர் சுமந்திரன் தான். அவரே கட்சியின் இன்றைய கால அனைத்து செயற்பாடுகளுக்கும் கையொப்பமிடும் அதிகாரம் மிக்கவர். இதனை ஸ்ரீதரன் உணர்ந்து கொள்ளவேண்டும் என தமிழரசுக் கட்சியின் பிரதித் தலைவர் சிவிகே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளின் தவிசாளர் உப தவிசாளர் நியமன சர்ச்சை தொடர்பில் இன்றையதினம் (19.05.2025) விளக்கமளித்துள்ளார்.யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கூறிய அவர் மேலும் கூறுகையில் -தமிழரசுக் கட்சியின் செயலாளர் சுமந்திரன் தான். அவரே கட்சியின் இன்றைய கால அனைத்து செயற்பாடுகளுக்கும் கையொப்பமிடும் அதிகாரம் மிக்கவர்.கட்சியின் மத்திய செயற் குழுவுக்கு அதிகாரம் இருக்கின்றது.அதன் படி கட்சியில் வறிதாகும் பதவி நிலைகளுக்கு மத்திய செயற்குழு உறுப்பினர்களை நியமிக்கும். அதன்படியே இன்றைய பதவி நிலை நியமனங்கள் செய்யப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.இதை ஸ்ரீதரன் உணர்ந்துகொள்ள வேண்டும்இதனிடையே உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி அமைப்பு தொடர்பில் பல கட்சிகளுடன் பேசியிருக்கின்றோம். அதற்கு தேசியத்தை நேசிக்கும் கட்சிகள் ஓரணியில் நின்று தேசியக் கட்சிக்கு இடங்கொடுக்காத வகையில் ஆட்சி அதிகாரத்தை தமிழ் தரப்பினர் கையகப்படுத்தும் வகையில் அமைவதற்கு பங்களிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுகின்றேன்.நான் ஆட்சி செய்வது தொடர்பில் தமிழ் தரப்பிலுள்ள கட்சிகளுடன் பேசியுள்ளேன். அதன்படி இன்று எமது தேசியப் பரப்பில் இருக்கும் கட்சித் தலைவர்களுக்கும் குறிப்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட ஏனைய தரப்பினரது ஆதரவு கிடைக்கும் என்று நம்புகின்றேன். இதேவேளை ஏனையோர் கூறுவது போன்று எமது கட்சி எந்தவொரு ஒற்றுமை இணக்கபாட்டையும் குழப்பியது கிடையாது என்றும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.00