உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வட்டார மட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 40 சதவீதத்தினரின் பெயர்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், உறுப்பினர்களின் எண்ணிக்கையை வர்த்தமானி மூலம் வெளியிட வேண்டியிருப்பதால், தொடர்புடைய வேட்பாளர்களின் பெயர்களை உடனடியாக அனுப்புமாறு அந்தப் பிரிவினரிடம் கோரிக்கை விடுப்பதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் மன்றங்களின் பதவிக்காலம் ஆரம்பமாகிறது எனவும்
அதற்கு முன்னர் உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானி மூலம் வெளியிடும் பொறுப்பு என்னிடம் உள்ளது எனவும் அதற்கு உங்களின் பெயர்கள் கிடைப்பது மிகவும் முக்கியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பெயர்களைப் பெற்று வர்த்தமானி செய்த பின்னரே, 50% குறைவாக வெற்றி பெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கு தலைவர் அல்லது பிரதி தலைவர் நியமனம் செய்ய மாகாண ஆணையாளர்களுக்கு ஆரம்பகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானி செய்யப்பட்டு ஒரு வாரத்திற்குள் மாகாண ஆணையாளர்கள் இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.
000
- 126