முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை இயற்கை எய்தினார்.

 • Light Candle
 • More
Memories
  Added a post 
  இன்றைய ராசி பலன் –  மார்ச் 2, 2024 தமிழ் வருடம் சோபகிருது, மாசி மாதம் 19 ஆம் திகதி மேஷம்Aries விலகி சென்றவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையாட்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். கால்நடை சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். மனதில் நேர்மறை எண்ணங்களுடன் செயல்படவும். அலுவலகத்தில் அலைச்சல் மேம்படும். அமைதி வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்ரிஷபம்Taurusதிறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். தொழில்நுட்ப கருவிகள் மீது ஆர்வம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் உண்டாகும். மனதளவில் இருந்துவந்த தடுமாற்றங்கள் விலகும். போட்டி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நேர்மை வெளிப்படும் நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்மிதுனம்Geminiதனவரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். நெருக்கமானவர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வீடு, மனை விற்பனையில் லாபம் உண்டாகும். எதிர்பாலின மக்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். உத்தியோகப் பணிகளில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சைகடகம்Cancerமனதில் நினைத்த காரியம் நிறைவேறும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். வெளி உணவுகளை தவிர்க்கவும். தியானம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். கலைப் பணிகளில் ஒருவிதமான ஈடுபாடு உண்டாகும். பரிவு வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் :  3அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்சிம்மம்Leoபெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும். தள்ளிப்போன சில காரியங்கள் கைகூடிவரும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும்.  அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். சேமிப்பு தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புகழ் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பச்சைகன்னிVirgoசெயல்பாடுகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் ஏற்படும். அரசு சார்ந்த காரியங்கள் கைகூடிவரும். சந்தை நிலவரங்களை அறிந்து முதலீடுகளை மேற்கொள்ளவும். பெரியோர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். ஜெயம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் :  4அதிர்ஷ்ட நிறம் : ஆகாயநீலம்துலாம்Libraமனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் பொறுமை வேண்டும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் மதிப்பு மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். துன்பம் மறையும் நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்விருச்சிகம்Scorpio எதிலும் பதற்றமின்றி செயல்படவும். மனதளவில் சிறு சிறு சஞ்சலங்கள் ஏற்படும். உடன் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் மறைமுகமான சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்களிடத்தில் பொறுமையை கையாளவும். சூழ்நிலை அறிந்து கருத்துகளை வெளிப்படுத்தவும். ஓய்வு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் :  6அதிர்ஷ்ட நிறம் : பச்சை தனுசுSagittariusநினைத்த பணிகளில் காலதாமதம் உண்டாகும். சகோதரர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் சில மாற்றமான சூழல்கள் உண்டாகும். பக்தி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் மகரம்Capricornகுடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பொன், பொருட்சேர்க்கை உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கலை துறைகளில் திறமைகள் வெளிப்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கைத்தொழிலில் மேன்மை உண்டாகும். சலனம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் :  8அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்கும்பம்Aquariusசமூக நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் புரிதல் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். கவனம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளம் ரோஸ்மீனம்Piscesநண்பர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். முயற்சிக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். மனதளவில் தெளிவு ஏற்படும். சேமிப்பு தொடர்பான ஆலோசனை கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவதில் பொறுமை வேண்டும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். தேடல் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் :  7அதிர்ஷ்ட நிறம் : நீலம் இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 43
  Added a post 
  சோபகிருது வருடம் மாசி மாதம் 19 ஆம் தேதி சனிக்கிழமை 02.03.2024.  சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று அதிகாலை 04.22 வரை சஷ்டி. பின்னர் சப்தமி. இன்று காலை 11.14 வரை விசாகம். பின்னர் அனுஷம்.  ரேவதி அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். கிழமைராகு காலம்எமகண்டம்குளிகைசனிகாலை 9 to 10:30 AMமதியம் 1:30 to 3 PMகாலை 6 to 7:30 AM 
  • 51
  Added article 
  பான் இந்தியா அளவில் படு பிசியான ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில், தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், கடந்த ஆண்டு இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில், ரன்பீர் கபூருக்கு ஜோடியாக இவர் நடித்திருந்த, 'அனிமல்' திரைப்படம்... ஏகப்பட்ட எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்த போதும், பாக்ஸ் ஆபிசில் ரூபாய் 900 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.அனிமல் படத்தின் வெற்றியை தொடர்ந்து, 2022-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர்... டூப்பர் வெற்றி பெற்ற,  புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும், 'புஷ்பா தி ரூல் படத்தில்' நடித்து வந்தார். அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை, இயக்குனர் சுகுமார் இயக்கி உள்ளார். இந்த படத்தில் நடித்ததற்காக 2022-ஆம், ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருது அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்டது.மேலும் தற்போது தமிழில் ரெயின்போ, இந்தியில் இரண்டு புதிய படங்கள், தெலுங்கில் தனுஷ் ஜோடியாக அவரது 51-ஆவது படம் என, ரெஸ்ட் இல்லாமல் நடித்து வரும் ராஷ்மிகா... அடிக்கடி விருது விழாக்கள் மற்றும் விதவிதமான போட்டோ ஷூட் போன்றவற்றை எடுத்து கொள்வதையும் வழக்கமாக வைத்துள்ளார்.டோக்கியோவில், நடைபெற உள்ள க்ரஞ்சி ரோல் அனிம் விருது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, ராஷ்மிகா மந்தனா நேற்று மும்பை விமான நிலையத்தில் இருந்து டோக்கியோவுக்கு புறப்பட்டார். டோக்கியோ வந்து இறங்கிய ரஷ்மிகாவை... ஜப்பான் நாட்டை சேர்ந்த அவரது ரசிகர்கள், புஷ்பா பட ஸ்ரீவள்ளியின் புகைப்படத்தோடு வரவேற்று தங்களின் அன்பை பொழிந்தனர். தற்போது இதுகுறித்த போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. க்ரஞ்சி ரோல் அனிம் விருது விழாவில், கலந்து கொள்ளும் இந்தியாவின் முதல் பிரபலம் ராஷ்மிகா என்பதும், இவரும் நாளை ஒரு விருதை வழங்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • 237
  Added a news 
  கொரிய மருத்துவர்கள் சங்கத்தின் அலுவலகங்கள் மீது தென் கொரிய பொலிஸார் இன்று முற்றுகைகளை நடத்தியுள்ளனர்.தென் கொரிய மருத்துவர்களின் வேலை நிறுத்தத்தால் வைத்தியசாலைகளில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் பொலிஸாரின் முற்றுகைகள் இடம்பெற்றுள்ளன.சுமார் 10,000 கனிஷ்ட மருத்துவர்கள் கடந்த வாரம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்படும் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக கனிஷ்ட மருத்துவர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.மருத்துவர்கள் நேற்று வியாழக்கிழமைக்கு (பெப் -29)முன்னர் பணிக்குத் திரும்ப வேண்டுமென தென் கொரிய அரசாங்கம் காலக்கெடு விதித்திருந்தது. பணிக்குத் திரும்பியவர்கள் தொடர்பான உத்தியோகபூர்வ தரவுகள் எதுவும் இல்லை என தென் கொரிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதேவேளை , பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்தும் பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றன்ர என யோன்ஹாப் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.மருத்துவர்களின் பணிப் பகிஷ்கரிப்பால் கடந்த வாரம் 15 பெரிய வைத்தியசாலைகளில் திட்டமிடப்பட்டிருந்த 50 சதவீதமான சத்திரசிகிச்சைகள் இரத்துச் செய்யப்பட்டதாக தென் கொரிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
  • 241
  Added a news 
  புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில் அரசியலமைப்பு பேரவைக்குத் தலைமை தாங்கிய சபாநாயகர் எடுத்த தீர்மானம் பிழை என்றாரல், அது தொடர்பில் நீதிமன்றம் செல்லலாம் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.மகரகம பன்னிபி்டிய பிரதேசத்தில் வியாழக்கிழமை (29) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.புதிய பொலிஸ்மா அதிபர் நியமனத்தின்போது சபாநாயகரின் தீர்மானம் தொடர்பாக பலரும் விமர்சித்து வருகின்றனர். ஆனால் அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அரசியலமைப்பு பேரவைக்கு 10 உறுப்பினர்கள் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்தபோதும் சிறிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி அதற்கு நியமிக்கப்பட வேண்டிய பிரதிநிதி இதுவரை பெயரிடப்படாமல் இருப்பதே இந்த பிரச்சினைக்குப் பிரதான காரணமாகும்.இந்த சிக்கல் காரணமாகச் சபாநாயகர் நடைமுறைப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகிறார். அதனால் சபாநாயகரின் தீர்மானத்தில் ஏதாவது சட்டச் சிக்கல் இருப்பதென நினைப்பதாக இருந்தால், அரசியலமைப்பில் சட்ட சிக்கல்களுக்கு பாெருள் கோடல் பெற்றுக்கொள்வதற்கு சிறந்த இடம் உயர்நீதிமன்றமாகும்.அத்துடன் அரசியலமைப்பு பேரவை எடுக்கும் தீர்மானங்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கும் இயலுமை நிறைவேற்று அதிகாரிக்கு இல்லை. எனவே அரசியலமைப்பு பேரவையில் சபாநாயகரின் தீர்மானம் பிழை என்றால் அது தொடர்பில் உயர் நீதிமன்றத்துக்கு செல்லலாம் என்றார்.
  • 242