Feed Item
·
Added article

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து செய்வதாக நேற்று அறிவித்தனர். இதனையடுத்து இந்திய திரையுலகமே அதிர்ச்சியடைந்தது. இருவருக்கும் ஏன் விவாகரத்து என்பது குறித்து பலரும் பல விஷயங்களை யூகங்களாக சொல்லிவருகின்றனர். இருந்தாலும் ரஹ்மான் வீட்டில் இப்படி ஒரு புயலா என்ற அதிர்ச்சி ரசிகர்களிடம் இருக்கத்தான் செய்கிறது.

ரஹ்மான் கடந்த 1995ஆம் ஆண்டு சாய்ரா பானுவை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு கதிஜா, ரஹிமா என்ற இரண்டு மகள்களும், அமீன் என்ற மகனும் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 29 வருடங்கள் ரஹ்மானும், சாய்ராவும் இணைந்து வாழ்ந்துவந்த சூழலில் திடீரென நேற்று இரவு சாய்ரா பானு ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், 'ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிவதாக’ தெரிவித்திருந்தார். அது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சூழலில்; சாய்ரா அறிக்கை வெளியிட்ட சிறிது நேரத்தில் ரஹ்மானும் அந்த விவாகரத்தை உறுதி செய்தார்.

  • 447