Feed Item
Added a news 

ஒமைக்ரான் தொற்று பரவிய நிலையில், தென்ஆப்பிரிக்காவுடனான விமான போக்குவரத்துக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. இந்தநிலையில், ஜெனீவாவில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் ஜிப்ரியசஸ் பேசுகையில் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தடுப்பூசி போடுவதில் நாடுகளிடையே ஏற்றத்தாழ்வு நிலவும்போது, கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைய வாய்ப்புள்ளது என்று பலதடவை கூறியுள்ளோம். இதை யாரும் தடுக்கவோ, கணிக்கவோ முடியாது. அதுதான் ஒமைக்ரானாக வந்துள்ளது.

ஒமைக்ரான் வைரசை விரைவாக கண்டுபிடித்ததற்கு தென்ஆப்பிரிக்காவுக்கும், போட்ஸ்வானாவுக்கும் நன்றி. ஆனால், சில நாடுகள் தென்ஆப்பிரிக்காவுடனான நேரடி விமான போக்குவரத்தை நிறுத்தியது எனக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என்றும் அவர் பேசினார்.

  • 532