Feed Item
Added article 

நிஜ வாழ்க்கையில் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தில் பாக்ஸராக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு கச்சிதமாக பொருந்தினார்.

இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் பான் இந்தியன் லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

ஓ மை கடவுளே படத்தில் இவரது செல்ல பெயரான நூடுல்ஸ் மண்ட என்பது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள். அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

ரித்திகா சிங் மீது ரசிகர்களுக்கு ஒரு செல்ல குற்றச்சாட்டு இருக்கிறது. அதாவது இவர் எப்போதும் கவர்ச்சியை காட்டாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று. அதை மறுப்பது போல இப்பொழுது வேற லெவலில் புகைப்படம் வெளியிட்டு வருகிறார்.

  • 671