Feed Item
Added a news 

கிளிநொச்சி அக்கராயன் ஆற்றின் துப்பரவுப் பணிகள் அடுத்த  வாரமளவில் ஆரம்பிக்கப்பட்டு அதன் வேலைகள் ஒரு மாத காலத்துக்குள் நிறைவுறுத்தப்படும் என கிளிநொச்சி மாவட்ட பிரதி  நீர்ப்பாசன பொறியியலாளர் ராஜகோபு தெரிவித்துள்ளர்.கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய நீர்ப்பாசனகுளங்களில் ஒன்றாகக் காணப்படுகின்ற அக்கராயன் குளம் வான் பாயும் போது ஏற்படுகின்ற வெள்ளப் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில் அக்கராயன் ஆற்றில் காணப்படுகின்ற பற்றைகளை அகற்றுகின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ளது.

 அதாவது ஆறுகளைப் பாதுகாப்போம்‘ என்ற அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் கிளிநொச்சி அக்கராயன் ஆற்றைப் புனரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இந்தத் திட்டத்துக்காக சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதனை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான 4,113,105.00 ரூபாவை வழங்க திறைசேரி அனுமதி பெறப்பட்டிருப்பதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜெயசிங்க ஊடாக அன்மையில் மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரனுக்கு தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்ததுஅதற்கமைய குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்குரிய கேள்வி கோரல்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான வேலைகள் அடுத்த வாரமளவில் ஆரம்பிக்கப்பட்டு அதன் வேலைகள் ஒரு மாத காலத்துக்குள் நிறைவுறுத்தப்படும் என கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் ராஜகோபு தெரிவித்துள்ளர்.

அக்கராயன்குளம் வான்பாயும்போது வழிந்தோடும் நீர் பெருக்கெடுத்து ஒவ்வொரு வருடமும் பெருமளவு வயல்நிலங்கள் அழிவடைவதைத் தடுக்கும் வகையில், வழிந்தோடும் நீர் பாயும் அக்கராயன் ஆற்றைப் புனரமைப்பதற்காக இந்தத் திட்டம் தீட்டப்பட்டதாக மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர் ராஜகோபு மேலும் தெரிவித்துள்ளதுடன் . இந்தத் திட்டத்தை நிறைவேற்றினால், எதிர்வரும் காலங்களில் அக்கராயன்குளம் பெருக்கெடுக்கும்போது பயிர்ச்செய்கை நிலங்கள் வெள்ளப் பாதிப்புக்கு உட்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

  • 517