Feed Item
Added a news 

ஆசியாவிற்கான போவோ மன்றத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று உரையாற்றியிருந்தார்.

அவரது உரையில், ஆசியாவிற்கான இந்த ஆண்டின் போவோ மன்றத்தின் ஆரம்ப மாநாட்டில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆரம்பத்தில், நாடுகளை ஒன்றிணைப்பதற்கு இரண்டு தசாப்த கால சிறப்பான பணிகளை நிறைவுசெய்திருக்கும் போவோ மன்றத்தை வாழ்த்த விரும்புகிறேன்.

ஆசியாவிற்கான போவோ மன்றத்தில் சீன மக்கள் குடியரசு ஆற்றிய முக்கிய பங்கை அங்கீகரிப்பதற்கும் இந்த வாய்ப்பை நான் பயன்படுத்துகிறேன். பல நூற்றாண்டு கால வளமான வரலாற்றின் ஊடாக, இலங்கையும் சீனாவும் பரஸ்பர மரியாதை, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு வலுவான மூலோபாய ஒத்துழைப்பு கூட்டாண்மையைப் பகிர்ந்து கொள்கின்றன. இலங்கைக்கு நலன் பயக்கும் பல முக்கிய துறைகளில், இலங்கைக்கு மேன்மைதங்கிய ஷி ஜின்பிங் அவர்களும் சீன அரசாங்கமும் அளித்த ஆதரவை நான் பாராட்டுகிறேன்.

இலங்கை ஒரு தெளிவான மற்றும் துடிப்பான வெளியுறவுக் கொள்கையை பேணிவருகிறது, இது அனைத்து நட்பு நாடுகளுடனும், குறிப்பாக, அதன் ஆசிய அண்டை நாடுகளுடனும் சமமான மற்றும் அணிசேரா கொள்கையின் அடிப்படையில் மேம்பட்ட ஒத்துழைப்பை வேண்டி நிற்கிறது. இந்த கோட்பாடுகள் எங்கள் ‘சுபீட்சத்தின் நோக்கு’ அபிவிருத்தி கொள்கை சட்டகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

எனவே உலகளாவிய நிர்வாகத்தையும் சர்வதேச ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருளை நான் பாராட்டுகிறேன். சர்வதேச உறவுகளுக்கு மிகவும் சமமான மற்றும் கௌரவமான அடித்தளத்தை நோக்கி நாம் பாடுபடுவது அவசியமாகும்.

தற்போதுள்ள உலகளாவிய கட்டமைப்புகள் மற்றும் ஆட்சிப் பொறிமுறைகள் எப்போதும் மாறிவரும் உலகளாவிய தேவைகளை பூர்த்தி செய்யத் தவறிவிட்டன, இதன் விளைவாக உலகெங்கிலும் உள்ள மக்கள் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள், உலகப் பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பை பொருட்படுத்தாமல், எண்ணற்ற விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் ஆளுகை கட்டமைப்புகளைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. ஆனால் அவர்களுக்கு உலகளாவிய விதிகளை உருவாக்கும் செயல்முறையை அணுக முடியாதிருப்பதை நாங்கள் அறிவோம். இது ஒரு வருந்தத்தக்க சூழ்நிலை.

எனது கருத்துக்களை நிறைவுக்குக் கொண்டு வரும் வகையில், போவோ மன்றத்தின் ஒரு ஸ்தாபக உறுப்பு நாடு என்ற வகையில் இம்மன்றத்தின் வழிகாட்டும் கொள்கைகளுக்கும் அதன் நோக்கத்திற்கும் இலங்கையின் அர்ப்பணிப்பை நான் உறுதிப்படுத்துகிறேன்.

போவோ வருடாந்த மாநாடு 2021 இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கு இடையிலும் உலகின் ஏனைய பகுதிகளுக்கும் உலகளவில் சவாலான இத்தருணத்தில் ஒரு பயனுள்ள பங்களிப்பை வழங்கும் என்று நான் நம்புகிறேன் என்றார்.

  • 475