Feed Item
Added a post 

இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 9, 2023

 

தமிழ் வருடம் சோபகிருது, கார்த்திகை மாதம் 23 ஆம் திகதி

 image_transcoder.php?o=bx_froala_image&h=4681&dpx=1&t=1702102354

மேஷம்

Aries

 

புதிய நபர்களின் அறிமுகத்தால் சில மாற்றங்கள் ஏற்படும். சுபகாரிய செயல்களில் விவேகத்துடன் செயல்படவும். பயனற்ற விவாதங்களைக் குறைத்துக் கொள்ளவும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். செயல்பாடு மற்றும் சிந்தனைகளில் மாற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். சலனம் குறையும் நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

image_transcoder.php?o=bx_froala_image&h=4682&dpx=1&t=1702102355

ரிஷபம்

Taurus

தாய்மாமன் இடத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்வீர்கள். எதிர்பாராத சில வரவுகளால் சேமிப்பு மேம்படும். எதிர்ப்புகளைச் சாமர்த்தியமாக வெற்றி கொள்வீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பம் குறையும். எதிர் பாலின மக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

image_transcoder.php?o=bx_froala_image&h=4683&dpx=1&t=1702102356

மிதுனம்

Gemini

கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரப் பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும். கலை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

image_transcoder.php?o=bx_froala_image&h=4684&dpx=1&t=1702102357

கடகம்

Cancer

பயணம் சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். இனம்புரியாத தேடல் பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தடைகள் குறையும் நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

image_transcoder.php?o=bx_froala_image&h=4685&dpx=1&t=1702102357

சிம்மம்

Leo

விடாப்பிடியாகச் செயல்பட்டு சில வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். சகோதரர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உத்தியோகப் பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரப் பணிகளில் லாபம் மேம்படும். குழந்தைகளின் செயல்பாடுகளால் மகிழ்ச்சியான மாற்றம் உண்டாகும். புதிய முயற்சிகளின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

image_transcoder.php?o=bx_froala_image&h=4687&dpx=1&t=1702102358

கன்னி

Virgo

புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். கமிஷன் தொடர்பான வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை பற்றிய சிந்தனைகள் ஏற்படும். தொழில் போட்டிகளில் சிந்தித்து முடிவு எடுக்கவும். சாந்தம் வேண்டிய நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

image_transcoder.php?o=bx_froala_image&h=4686&dpx=1&t=1702102358

துலாம்

Libra

பயனற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் பொறுப்புகளும், பணிகளும் அதிகரிக்கும். சில பிரச்சனைகளுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. உடனிருப்பவர்களின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். ஆரோக்கியம் சார்ந்த விரயம் உண்டாகும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. விரயம் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

image_transcoder.php?o=bx_froala_image&h=4689&dpx=1&t=1702102358

விருச்சிகம்

Scorpio

 

வழக்கு தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் அமையும். கலைப் பொருட்களால் விரயம் ஏற்படும். வியாபாரப் பணிகளில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும். ஆடம்பரமான செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். கற்பனை சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குழப்பம் விலகும் நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

image_transcoder.php?o=bx_froala_image&h=4688&dpx=1&t=1702102358

தனுசு

Sagittarius

மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கித் தெளிவு பிறக்கும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். கலை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். அலுவலகப் பணிகளில் சக ஊழியர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இணையம் சார்ந்த பணிகளில் வருமானம் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.

 

திர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

image_transcoder.php?o=bx_froala_image&h=4691&dpx=1&t=1702102358

மகரம்

Capricorn

வியாபாரப் பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எண்ணிய காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். இன்பம் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

image_transcoder.php?o=bx_froala_image&h=4690&dpx=1&t=1702102358

கும்பம்

Aquarius

அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொன் நகைகளில் கவனம் வேண்டும். வெளிவட்டாரங்களில் இருந்துவந்த சங்கடங்கள் குறையும். விவேகம் வேண்டிய நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

image_transcoder.php?o=bx_froala_image&h=4692&dpx=1&t=1702102358

மீனம்

Pisces

ஆரோக்கியத்தில் சோர்வும், ஒருவிதமான மந்தத்தன்மையும் உண்டாகும். நண்பர்களிடம் தேவையில்லாத கருத்துகளைத் தவிர்க்கவும். வர்த்தக முதலீடுகளில் ஆலோசனைகளைப் பெறவும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். வாக்குறுதிகள் அளிக்கும் போது விவேகத்துடன் செயல்படவும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். கனிவு வேண்டிய நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

 

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

  • 377