பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் அர்ச்சனாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கம் விதமாக நிக்சன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் 10-வது வாரத்தை எட்டி இருக்கிறது.
முதலில் 18 போட்டியாளர்கள்.. பின்னர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக 5 போட்டியாளர்கள் என பங்கேற்றனர்.
தற்போது வரை 12 பேர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் இந்த வார தொடக்கத்தில் இருந்து அர்ச்சனாவுக்கும், நிக்சனுக்கும் மோதல் போக்கு நிலவுகிறது.
முதலில் சமைக்கும்போது அர்ச்சனா அருகில் நின்றால் கவனக்குறைவு ஏற்படுவதாகவும் அவரை சமையலறை பக்கம் வர வேண்டாம் என்று நிக்சன் கூறுகிறார். இந்த வாக்குவாதம் மோதலில் முடிந்தது.
அடுத்து கல்லூரி டாஸ்க் ஆசிரியர்களாக வந்த அர்ச்சனாவும் நிக்சன்-னும் மாறி மாறி கருத்துக்களை தெரிவித்ததால் இருவரும் இடையே மோதல் வெடித்தது. இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் சக பிக் பாஸ் போட்டியாளர் வினிதா பற்றி உருவ கேலி செய்த சம்பவத்தை நினைவூட்டி அர்ச்சனா பேசினார். இதனால் கடுமையாக கோபமடைந்த நிக்சன் அர்ச்சனாவை ஒருமையில் பேசி திட்டுகிறார். உச்சகட்டமாக கொலை மிரட்டல் மற்றும் பாலியல் மிரட்டல் விடுக்கும் விதமாக சொரிவிடுவேன் டி.. உள்ளிட்ட வார்த்தைகளை பயன்படுத்தி பேசியிருக்கிறார்.
என்ன செய்யப் போகிறார்? நிக்சன் தொடர்வாரா?
- 567