Feed Item
Added a news 

பொருளாதார குற்றவாளிகளாக உயர்நீதிமன்றினால் அறிவிக்கப்பட்ட தங்களின், குடியுரிமை தொடர்பான விடயம் நீதிமன்றுக்குச் சென்றால், அது குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்போம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


பெல்லன்வில ரஜமகா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வுகளை அடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், குடியுரிமைகயை பறிக்குமாறுக் கூறப்பட்டாலும் இதுவரை அவ்வாறனதொரு விடயம் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.


ஒருவேளை இறுதி முடிவுகள் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டாலோ அல்லது அவற்றையும் மீறி குடியுரிமை தொடர்பான விடயம் நீதிமன்றத்திற்குச் சென்றாலோ அங்கு நிச்சயம் போராடுவோம் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


  • 286
Comments
Info