Feed Item
Added a news 

மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் மொஹமட் முயிசூவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.தொலைபேசி அழைப்பின் ஊடாகவே மொஹமட் முயிசூவுக்கு, ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தனது வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.இலங்கை - மாலைதீவு மக்களின் மேம்பாட்டிற்காக, இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் இருதரப்பு உறவுகளை பலதரப்பு கூட்டுச் செயன்முறைகளாக பலப்படுத்திக்கொள்ளவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விருப்பம் தெரிவித்தார்.அதேபோல் கல்வி, சுகாதாரம்,பொருளாதாரம் மற்றும் முதலீட்டு துறைகளில் இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக்கொள்ளவது தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.மாலைதீவின் புதிய ஜனாதிபதியின் ஆட்சியில் சுபீட்சம் கிட்டும் என்ற எதிர்பார்ப்புடன், அந்நாட்டின் புதிய அரசாங்கத்துக்கும் மக்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • 322