Feed Item
Added a post 

மனித தலையும் பாம்பு உடலும் கூடியவன் ராகு எனவும், பாம்பு தலையும் மனித உடலும் கூடியவன் கேது எனவும் அழைக்கப்படுகின்றனர். இருவருக்கும் உயிர் ஒன்றுதான். இருவரும் நேர் எதிர்திசையில் நட்சத்திர மண்டலத்தில் சஞ்சரிக்கின்றனர். ராகு மற்றும் கேதுவிற்கு என்ன பிடிக்கும் எந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரும் என்று தெரிந்துக் கொள்வவோம்.

ராகு

அதிதேவதை : பத்ரகாளியம்மன் 

தானியம் : உளுந்து 

நவரத்தினம் : கோமேதகம் 

வஸ்திரம் : நீலம் 

புஷ்பம் : மந்தாரை 

சமித்து : அருகு 

கிழமை : ஞாயிறு 

ராசியில் தங்கும் காலம் : 18 மாதம் 

திசை : தென்மேற்கு 

தலம் : திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, இரட்டைத்திருப்பதி 

உடல் - மனித தலை, பாம்பு உடல் 

கிழமை - சனிக்கிழமை 

நட்சத்திரம் - திருவாதிரை, சுவாதி, சதயம் 

நட்பு கிரகம் - புதன், சுக்ரன், சனி 

மலர் - மந்தாரை சமித்து - அருகு 

ரத்தினம் - கோமேதகம் 

அதிதேவதை - பத்திரகாளி, துர்க்கை 

உச்ச வீடு - விருச்சிகம் 

நீச்ச வீடு - ரிஷபம் 

காரக அம்சம் - யோகம் 

தான்யம் - உளுந்து 

உலோகம் - கருங்கல் 

வாகனம் - ஆடு 

மனைவி - கிம்ஹிசை 

உரிய திசை - தென்மேற்கு 

சுவை - புளிப்பு 

காலம் - ராகு காலம்

கேது

அதிதேவதை : சித்ரகுப்தர் 

தானியம் : கொள்ளு 

நவரத்தினம் : வைடூர்யம் 

வஸ்திரம் : பலவண்ணம் 

புஷ்பம் : செவ்வல்லி 

சமித்து : தர்ப்பை 

கிழமை : ஞாயிறு 

தங்கும் காலம் : 18மாதம் 

திசை : வடமேற்கு 

தலம் : கீழப்பெரும்பள்ளம், காளஹஸ்தி, இரட்டைத்திருப்பதி 

ராகு பகவான், 18 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு ராசியில் தங்குவார். 12 ராசிகளையும் சுற்றிவர பதினெட்டு ஆண்டுகள் ஆகின்றன. கேது பகவான் 12 ராசிகளையும் சுற்றி வர 18 ஆண்டுகள் ஆகின்றன. ராகு கேது பெயர்ச்சி வரும் அக்டோபர் இறுதியில் நிகழ உள்ளது. இந்த கிரகப்பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. சிலருக்கு வீடு தேடி அதிர்ஷ்டம் வரப்போகிறது. நிழல் கிரகமான ராகு மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும் கேது துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடையப்போகின்றன. 

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சிலர் வீடு கட்டும் முயற்சிகளில் இறங்குவர். கேது பகவான் 6 ம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி ஆவதால் கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து லாபத்தை அடைவீர்கள். 

ரிஷபம்: லாப ராகு பண வரவை அதிகரிப்பார். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். கணவன் மனைவிக்குள் பிரியம் அதிகரிக்கும். . கேது பகவான் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டுக்கு வந்து அமர்கிறார். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். 

கன்னி: ராகு பகவான் உங்கள் ராசிக்கு 7ஆம் வீட்டில் வந்து அமர போகிறார். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மன கசப்புகள் விலகி மகிழ்ச்சியான நிலை ஏற்படும். கேது பகவான் ஜென்ம ராசியில் வந்து அமர போகிறார். ஆன்மீக சுற்றுலா செல்ல நேரிடும். புண்ணிய காரியங்களில் உங்களை ஈடுபடுத்தி கொள்வீர்கள். 

விருச்சிகம்: ராகு பகவான் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் அமர போகிறார். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி அன்யோனியம் பெருகும். வேலையில் ஒரு சிலருக்கு இட மாறுதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. கேது பகவான் உங்கள் ராசிக்கு 11ஆம் வீட்டில் வந்து அமர போகிறார். திடீர் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். 

மகரம்: முயற்சி ஸ்தானமான மூன்றாவது வீட்டிற்கு ராகு பகவான் வந்து அமர்வதால் எதிலும் வெற்றி உண்டாகும். வருமானம் அதிகரிப்பதால் கடன்கள் தீரும். வங்கியில் அடகு வைத்து நகைகளை திருப்புவீர்கள். கேது பகவான் பாக்ய ஸ்தானத்திற்கு வரப்போவதால் வேலையில் புரமோசன் கிடைக்கும். பெண்கள் புதிதாக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் பலமடங்கு பெருகும். 

மீனம்: ராகு இனி உங்கள் ஜென்ம ராசியில் வந்து அமர்வதால் கஷ்டங்கள் விலகி இனிதான நற்பலன்களை அனுபவிக்க போகிறீர்கள். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெறுவீர்கள். பண வரவு அதிகரிக்கும் . குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். ராகு கேது பெயர்ச்சியால் திருமண யோகம் கைகூடி வரும். 

  • 387