Feed Item
Added a post 

அமைதியான இடத்தில் வாழ வேண்டும் என நாம் அனைவரும் சிந்திப்பதுண்டு. அப்படி ஒரு அமைதியான அறை அமெரிக்காவின் வாஷிங்டனின் ரெட்மாண்ட் வளாகத்தில் உள்ள மைக்ரோசாப்ட் தலைமையகத்தில் அமைந்துள்ளது.


எவ்வளவு அமைதி என கேட்கிறீர்களா? இந்த அறைக்குள் உங்கள் ரத்த ஓட்டத்தை கூட கேட்கும் அளவுக்கு அமைதி நிலவுவதாக கூறப்படுகிறது. இது 2015-ம் ஆண்டு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் உலகின் அமைதியான இடம் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.


அனிகோயிக் சேம்பர் என்று அழைக்கப்படும் இந்த அறையில் ஒரு சிறிய ஒலி கூட கேட்கப்படுவதில்லை. இதற்காக 6 திடமான சுவர்களுக்குள் கட்டப்பட்டுள்ள இந்த அறையின் ஒவ்வொரு சுவரும் ஒரு அடி வரை தடிமனாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்த அறையின் ஒலி மைனஸ் 20.3 டெசிபல்களாக அளவிடப்பட்டுள்ளது.


நீங்கள் இங்கே உட்கார்ந்திருந்தால், உங்கள் இதயத் துடிப்பைக் கூட தெளிவாக கேட்கலாம். ஆனால் இந்த அறையில் 45 நிமிடங்களுக்கு மேல் யாரும் இருந்ததில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • 129
Comments
Info