Feed Item
Added article 

தமிழ் திரையுலகில் 2009-ல் 'யோகி' படத்தில் துணை நடிகராக அறிமுகமாகி முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்த யோகிபாபு கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். தற்போது யோகிபாபு சினிமாவுக்கு வந்து 13 ஆண்டுகள் ஆனதையொட்டி நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்து உள்ளார். 

அவர் கூறும்போது, 'நான் நடித்த யோகி' படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆகிறது. என்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குனர் அமீர் மற்றும் சுப்பிரமணிய சிவாவுக்கு நன்றி. சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் சின்னத்திரையில் 6 ஆண்டுகள் எனக்கு துணையாக இருந்தவர்களுக்கும் நன்றி. சினிமாவில் என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்த திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தில் யோகிபாபு தற்போது நடித்து வருகிறார். அந்த படப்பிடிப்பில் யோகிபாபு 13 ஆண்டுகள் சினிமாவில் நீடிப்பதை கேக் வெட்டி கொண்டாடினார். 

  • 216