Feed Item
Added a news 

தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தள்ளாடும் பாலம் ஒன்றைக் கடக்க வேண்டியுள்ளதாகக் கூறினாலும், நாட்டிலுள்ள 220 இலட்ச மக்களையும் தள்ளாடும் பாலத்தின் கீழே தள்ளிவிட்டுவிட்டு, ராஜபக்சர்களும், அவர்களின் நெருங்கிய நண்பர்களுமே தள்ளாடும் பாலத்தை தற்போது கடந்து விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

தற்போதைய ஜனாதிபதி ஒரு நகைச்சுவையாளர் என்றும் தற்போதைய அரசாங்கம் சதிகார அரசாங்கம் எனவும் கூறிய எதிர்க்கட்சி தலைவர், மக்களுக்கு எதிராகச் செயற்பட்ட அனைவரும் வரலாற்று நெடுகிழும் மோசமான விளைவுகளுக்கு முகங்கொடுக்கவே நேரிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

புத்தல பிரதேசத்தில் இன்று (28) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்.

  • 237