Feed Item
Added a news 

கடந்த காலங்களில் துவிச்சக்கர வண்டிகளை மக்கள் தங்களுடைய போக்குவரத்துகளுக்கு பயன்படுத்தி இருந்தாலும் நாளடைவில் அவற்றை கைவிட்டு பாவணையில் வைத்திருந்த துவிச்சக்கர வண்டிகள் பழுதடைந்த நிலையிலும் ஓரளவு நல்ல நிலையிலும் காணப்பட்ட போதும் அவை பழைய இரும்புக்காக விற்பனை செய்யப்பட்டன.இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது எரிபொருள் விலை ஏற்றம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அதிகளவானோர் துவிச்சக்கர வண்டி பயன்பாட்டுக்கு மாறியுள்ளனர்.இந்த நிலையில் புதிய துவிச்சக்கர வண்டி ஒன்றின் விலை 70 ஆயிரம் ரூபாவை தாண்டிய நிலையில் தற்போது கிளிநொச்சியில் பழைய இரும்புக்காக விற்பனை செய்யப்பட்ட துவிசக்கர வண்டிகளையும் துவிச் சக்கர வண்டி உதிரி பாகங்களையும் மக்கள் முன்டியடித்து கொள்வனவு செய்கின்ற நிலைமை காணப்படுகிறது.

  • 320