Latest Cinema
- ·
- · sivam
இவரது இயற்பெயர் நாகூர் பாபு.இவரது தாய்மொழி தெலுங்கு.பிறப்பால் இஸ்லாமியர்.இவருக்கு மனோ என்ற பெயரைச் சூட்டியவர் இளையராசா.இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள விஜயவாடாவில் பிறந்தவர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பதினாறு மொழிகளில் 22000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். கர்நாடக இசை பயின்றவர்.இவரது படமொன்றிற்கு இசையமைக்க வந்த இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இவருடைய பின்னணியை அறிந்து தன்னுடைய இசைக் குழுவில் துணை புரிய சென்னைக்கு அழைத்துக்கொண்டார். அவரிடம் இரண்டரை ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். 1985-ஆம் ஆண்டு கற்பூர தீபம் என்ற படத்தில் கங்கை அமரன் இசையமைப்பில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலாவுடன் இணைந்து பாடும் ஓர் வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கன்னடத் திரை
- ·
- · sivam
🌹புகழேணியில் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தபோது, வாலி திருமணம் செய்து கொண்டார். இது காதல் திருமணம்; ரகசியத் திருமணமும் கூடதிரைப்பட கவிஞராக உயர்ந்த பிறகும், வாலிக்கு நாடக ஆசை விடவில்லை. "லவ் லெட்டர்'' என்ற நாடகத்தை எழுதினார். ஏவி.எம்.ராஜன், ஜாவர் சீதாராமன், `காக்கா' ராதாகிருஷ்ணன் ஆகியோர் இதில் நடிக்க இருந்தனர்.🌹நாடக ஒத்திகை, அடிக்கடி வாலியின் வீட்டில் நடந்தது.இந்த நாடகத்தில் கதாநாயகியாக நடிக்க, திலகம் என்ற பெண்ணை வாலி ஒப்பந்தம் செய்திருந்தார். இவர், வழுவூர் ராமையா பிள்ளையிடம் பரதம் பயின்றவர். நடிகைகள் பத்மினி, ஈ.வி.சரோஜா ஆகியோருடன் சேர்ந்து நடனம் ஆடியவர். எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் "குயில்'' நாடகத்தில் கதாநாயகியாக நடித்தவர்.🌹திலகத்தை மணந்து கொள்ள வாலி விரும்பினார். ஆனால் காதல் ஏற்படவில்லை.இதுபற்றி
- ·
- · sivam
கங்கனா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான்கு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில், தனது முதுகுப் பகுதியில் மட்டும் ஒரு பர்ஃப்யூம் பாட்டிலை வைத்து போஸ் கொடுத்துள்ளார். அந்த பாட்டிலின் பெயரான "Crave Me" என்பதையே கேப்ஷனாகவும் பதிவு செய்திருக்கிறார். இதன் மூலம் இது முழுக்க முழுக்க ஒரு பிராண்ட் புரோமோஷன் என்பது தெளிவாகியுள்ளது.பொதுவாக பிராண்ட் புரோமோஷன் என்றாலே, தயாரிப்பை கையில் வைத்தோ அல்லது பயன்படுத்துவதுபோலவோ பிரபலங்கள் புகைப்படம் வெளியிடுவது வழக்கம். ஆனால், கங்கனா சர்மா தேர்வு செய்திருக்கும் இந்த கான்செப்ட் இதுவரை இந்திய அளவில் பெரிதாக யாரும் முயற்சிக்காத ஒன்றாகவே சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, சமீப காலமாக பிராண்ட் புரோமோஷன், கிளாமர் புகைப
- ·
- · sivam
காமெடி நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கி, இன்று கதையின் நாயகனாக வெற்றிகரமாக வலம் வரும் சூரி, அடுத்ததாக 'மண்டாடி' படத்தில் நடித்து வருகிறார். கடலோர மக்களின் வாழ்க்கையையும், படகு பந்தயத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம் செப்டம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் ரசிகர்களின் செயல்பாடு குறித்து சூரி பேசியிருப்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. அதாவது, தனது முந்தைய படமான மாமன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சில ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்ட சம்பவத்தை குறிப்பிட்ட சூரி, "அது எனக்கு சந்தோஷம் கொடுக்கவில்லை. உண்மையை சொல்லணும்னா, வெட்கமாகத்தான் இருந்தது" என்று வெளிப்படையாக கூறினார்.மேலும், "சாப்பாடு கிடைக்காமல் கஷ்டப்பட்டு வளர்ந்தவன் நா
- ·
- · sivam
நடிகர் விமலுக்கு எதிராக தொடரப்பட்ட ரூ.4.5 கோடி செக் மோசடி வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அதே நேரத்தில், மேல்முறையீடு செய்ய சட்டப்படி அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், தண்டனையை நிறைவேற்றுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ·
- · sivam
கோலிவுட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் கொண்ட நடிகர்களில் விஜய்யும் ஒருவர். அவரின் கடைசி படம் ஜனநாயகன். இதனாலேயே, அறிவிப்பு வர்றதுக்கு முன்னாடியே படத்துக்கு பயங்கர ஹைப்ப்பு ஏறிடுச்சு. அப்போதிலிருந்து படம் ரிலீஸ் ஆகும் இந்த நாள் வரை, ஒரு பெரிய ஸ்டார் படத்துக்குரிய எல்லா பரபரப்பும் இந்த புராஜெக்ட்டை சுத்தி இருந்துட்டே இருந்துச்சு. தமிழ்நாட்டின் மிகப்பெரிய பண்டிகையான பொங்கலுக்கு ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம், சென்சார் பிரச்சினைகளால் ஆறு மாசத்துக்கும் மேல தள்ளிப்போச்சு. இப்போ எல்லா தடைகளையும் தாண்டி, படம் நாளைக்கு தியேட்டர்களுக்கு வருது. இவ்வளவு தாமதம் ரசிகர்களின் ஆர்வத்தை குறைச்சிருக்கா? இல்லவே இல்லைன்னு அட்வான்ஸ் புக்கிங் ரிப்போர்ட் சொல்லுது.சினிமா டிராக்கர்கள் சொல்ற கணக்குப்படி, தமிழ்நாட்டில் மட்
- ·
- · sivam
தமிழ் சினிமாவுல இப்போ வேற லெவல் கூட்டணி ஒன்னு செட் ஆகியிருக்கு! உலக நாயகன்கள்ல ஒருவரான இயக்குநர் மணிரத்னம் இயக்கத்துல, நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் கியூட்டான நடிப்பால எல்லாரையும் கவர்ந்த சாய் பல்லவி இணையப் போறாங்க.இந்த தரமான சம்பவத்துக்கான படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரத்துல படுஜோரா தொடங்க இருக்கு. அதுமட்டுமில்லாம, மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்குற இந்த படத்துக்கு நம்ம இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தான் மியூசிக்.ஏற்கனவே ‘செக்கச்சிவந்த வானம்’ படத்துல மணிரத்னம், விஜய் சேதுபதி காம்போ எப்படி பட்ட ஹிட்னு நமக்கு தெரியும், இப்போ அது கூட சாய் பல்லவி வேற சேர்ந்துருக்கதால எதிர்பார்ப்பு இப்போவே ஹைய் ஆப்ல இருக்கு.அதுவும் மணிரத்னம் மேஜிக், ரஹ்மானோட மியூசிக்னு வந்தா தி
- ·
- · sivam
மனித மனதிற்குள் புதைந்து கிடக்கும் ஆழமான ஏக்கங்களையும், வெளிப்படுத்தாத ஆசைகளையும் மையமாக வைத்து ஒரு அழகான ஃபீல்-குட் திரைப்படத்தை இயக்கியுள்ளார் வர்ஷா வாசுதேவ். பாபுஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் அபிஜித் பாபுஜி தயாரித்துள்ள இத்திரைப்படம், வரும் ஜூன் 19 ஆம் தேதி ஏஜிஎஸ் சினிமாஸ் விநியோகத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமாகத் திரைக்கு வருகிறது.புனித நகரமான காசியின் பின்னணியில், எதிர்பாராத சூழலில் இணையும் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் உணர்வுப்பூர்வமான பயணமே இப்படத்தின் முக்கியக் கதைக்களமாகும். இதில் முதன்முறையாக முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் பிரபல மலையாள நடிகர் இந்திரன்ஸ் மற்றும் மூத்த நடிகை மதுபாலா இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் அபர்ணா பாலமுரளி, தம்பி ராமையா, காளி வெங்கட், ஜாபர்
- ·
- · sivam
அர்ஜுன் தாஸ், அன்னா பென் முதன்மை பாத்திரங்களில் நடித்த படம் ‘கான் சிட்டி’. இதில் யோகிபாபு, வடிவுக்கரசி, குழந்தை நட்சத்திரம் அகிலன் உள்பட பலர் நடித்துள்ளனர்.பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். இப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் படக்குழுவின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தில் பணியாற்றியவர்கள் பங்கேற்றனர்.நடிகை வடிவுக்கரசி பேசும்போது, “நான் இன்று உங்கள் முன் நிற்பதே மறுபிறவி கிடைத்ததுபோல. எனக்கு மறுவாழ்வு கிடைக்க உதவியவர்கள், ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீப்ரியா, சுஹாசினி, மணி ரத்னம், கார்த்திக், சூர்யா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஏ.
- ·
- · sivam
ராகவன் மற்றும் விஜயபாஸ்கர் முதன்மைக் கதா பாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘தட்டுவண்டி’.இதில் திலீபன், மேரி பென்சி குளோரியா, தங்க துரை என பலர் நடித்துள்ளனர். இப்படத்தை, ‘பில்டர் கோல்டு’ திரைப்படத்தை இயக்கிய விஜயபாஸ்கர் இயக்கியுள்ளார்.சர்வைவல் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது. தற்போது பாடல் பதிவு, பின்னணி இசைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- ·
- · sivam
பாலிவுட்டின் 'பிக் பி' என அழைக்கப்படும் 83 வயதான அமிதாப் பச்சன், தனது பிளாக்கில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில், மருத்துவமனையில் சர்ஜரி, ஐசியுவில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் கவனிப்பு, பிறகு வீட்டுக்குத் திரும்புவது என தன் அனுபவத்தை விவரித்துள்ளார். வாழ்க்கையின் மிகக் கடினமான கட்டங்களில் இதுவும் ஒன்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.உடல் வலியைத் தாண்டி, மனரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் இந்த நேரம் மிகவும் சவாலானது என்றும் அவர் கூறியுள்ளார். "ஒருநாள் நீங்கள் எல்லாரும் கொண்டாடும் சாம்பியனாக இருப்பீர்கள். அடுத்த நாளே தோல்வி உங்கள் முன் நிற்கும். அந்த நேரத்தில் சிலர் தைரியமாகப் போராடுவார்கள். இன்னும் சிலரோ சூழ்நிலையிடம் சரணடைந்துவிடுவார்கள். ஆனால், தைரியத்தை இழக்காதவர்கள்தான் உண்ம
- ·
- · sivam
தமிழ் திரை உலகில் ஒரே ஆண்டில் அப்பா, மகன் ஆகிய இருவருக்கும் ஜோடியாக நடித்தவர் நடிகை அம்பிகா. ஒரு நாள் அப்பாவுடன் ஜோடியாகவும் அடுத்த நாள் மகனுடன் ஜோடியாகவும் அவர் நடித்ததாக பேட்டியில் கூட தெரிவித்துள்ளார். அந்த அப்பா, மகன் நடிகர்கள் தான் சிவாஜி கணேசன் மற்றும் பிரபு என்பதும், இந்த இருவருக்கும் ஜோடியாக நடித்த நடிகை தான் அம்பிகா என்பதும் குறிப்பிடத்தக்கது.கேரளாவை சேர்ந்த அம்பிகா குழந்தை நட்சத்திரமாக மலையாள திரை உலகில் சில படங்கள் நடித்துள்ளார். மலையாளத்தில் ஹீரோயினியாகவும் பல முக்கிய படங்களில் நடித்துள்ளார்.ஆரம்ப காலத்தில் தமிழில் சில படங்கள் நடித்திருந்தாலும் பாக்யராஜ் நடித்து இயக்கிய ‘அந்த ஏழு நாட்கள்’ என்ற திரைப்படம் தான் அவருக்கு திருப்புமுனையை கொடுத்தது. அந்த படத்தின் வெற்றி காரணமாக அவருக்க
Featured Cinema