Scan Mobiles-Apps

Scan to Download Google AppDownload Android AppScan to Download Apple App

Quote of the Day

ஒருவர் கற்பிக்கும்போது, இருவர் கற்றுக்கொள்கிறார்கள். - ராபர்ட் ஹெய்ன்லைன்

Sign up


By signing up, you agree to the Terms of Service and Privacy Policy.
Added a news  
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் படி, 2024ஆம் ஆண்டின் நான்கு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான 1371 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என தெரியவந்துள்ளதுமுறையான அனுமதியின்றி வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்தல், சரியான வேலை உத்தரவு இல்லாமல் வெளிநாட்டு வேலைகளை வழங்குவதற்காக பணம் வசூலித்தல், சுற்றுலா விசா மூலம் வெளிநாட்டு வேலைகளுக்கு மக்களை வழிநடத்துதல் போன்ற புகார்கள் பணியகத்திற்கு கிடைத்துள்ளன.பணியகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 495 முறைப்பாடுகளுக்கு இக்காலப்பகுதியில் தீர்வு காணப்பட்டுள்ளதுடன், 680 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகளுக்காக மோசடி செய்பவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வதற்கும் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.​​வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பில் 28 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதுடன், பணியகத்தின் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி நடத்தப்பட்டு, முறையான பணி உத்தரவைப் பெறாமல் வெளிநாட்டு வேலைக்கு ஆட்சேர்ப்பு செய்த 8 முகவர் நிலையங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • 144
Added a news  
மனித உரிமை அமைப்புகள், புலம்பெயர்தல் ஆதரவு அமைப்புகள், சட்டத்துறை என பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தும், ருவாண்டா பாதுகாப்பான நாடு அல்ல என ருவாண்டாவில் வாழ்பவர்களே கூறியபின்னரும் கூட புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்துவதில் உறுதியாக இருக்கிறார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனேக்.இந்நிலையில், வடக்கு பிரான்சிலுள்ள Dunkirk நகரில் முகாமிட்டுள்ள, புலம்பெயர்வோர், ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர்கள், தாம் பிரித்தானியாவில் கால்வைத்ததும், பிரித்தானிய அதிகாரிகள் தங்களைப் பிடித்து ருவாண்டாவுக்கு நாடு கடத்திவிடக்கூடும் என்பது தங்களுக்குத் தெரியும் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்துவதில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உறுதி என்பதில் எவ்வித மாறுப்பட்ட கருத்தும் கிடையாது.பிரித்தானியாவுக்கு புலம்பெயரவேண்டுமென்ற எண்ணத்தில் இருப்பவர்கள், அங்கு சென்றால், தங்களைப் பிடித்து ஆப்பிரிக்காவுக்கு அனுப்பிவிடுவார்கள் என்ற பயத்தை உருவாக்கவே, பிரித்தானிய பிரதமர் ரிஷியும், அவரது உள்துறைச் செய்லரான ஜேம்ஸ் கிளெவர்லியும் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
  • 147
Added a news  
அனுமதி பெற்று இயங்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தைத் தவிர வேறு எந்த தரப்பினரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பணம் பெறுவதற்கு அதிகாரம் இல்லை என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், அநுராதபுரத்தை அண்மித்த விஹாரை ஒன்றின் விஹாராதிபதி தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று தருவதாக கூறி பணம் பெற்ற சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.இதனடிப்படையில், முறைப்பாட்டுடன் தொடர்புடைய தரப்பினரை கைது செய்யுமாறு புலனாய்வு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது என்றார்.அதுமட்டுமன்றி, இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் ஆட்கடத்தல்காரர்களை கைது செய்ய சட்டத்தை அமுல்படுத்துமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வு பிரிவுக்கும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.மேலும், இவ்வாறான மோசடிகளை தடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்வதோடு, விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உயர் நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • 154
Added a news  
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனுக்கு சம்பளத்துடன் கூடிய மூன்று மாத கால விடுமுறை வழங்க நாடாளுமன்றம் இன்று (25) அனுமதி வழங்கியது.எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த யோசனையை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இந்த தீர்மானத்தை ஆதரித்தார். 91 வயதாகும் ஆர் சம்பந்தன் தற்போது சுகயீனமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • 158
Added a news  
உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் இலங்கையின் பதுளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த இரத்தினக் கல்லில் அறுகோண இரு பிரமிடு வடிவம் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி இதன் பெறுமதி சுமார் 802 கிலோ எடைகொண்ட இந்த இரத்தினக்கல்லின் பெறுமதி 15,000 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த மாதிரியானது இயற்கையான ஒளி ஊடுருவக்கூடிய நீல நிற கொருண்டம் என்ற படிகங்களைக் கொண்டுள்ளது.கொருண்டம் என்பது மிக முக்கியமான இரத்தினகல் வகைகளில் ஒன்றாகும். உலக வளங்களில் கொருண்டம் குடும்பத்தின் மிகப்பெரிய நீல கொருண்டம் இதுவாகும்.அதேவேளை பல இரத்தினங்கள் மற்றும் கொருண்டம் இனங்களின் படிகங்கள் பல்வேறு இரத்தினங்கள் உற்பத்தி செய்யும் நாடுகளில் காணப்படுகின்றன.அதேவேளை கடந்த 2021 ஆம் ஆண்டில் ஆசியாவின் ராணி” என அழைக்கப்பட்ட சுமார் 310 கிலோ எடை இரத்தினம் கல் ஒன்று இரத்தின புரியில் கண்டுபிடிக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய இயற்கையான கொருண்டம் நீல சபையர் அது என கூறப்பட்ட நிலையில் தற்போது 802 கிலோ எடை இரத்தினக்கல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • 160
Added a post  
சாணக்கியர் பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணர் என்று உலகம் முழுவதும் அறியப்பட்டவர். சாணக்கியர் அவருடைய வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் கொள்கைகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாணக்கிய நீதியில் நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை நடத்துவது பற்றிய முக்கியமான தகவல்களைப் பெறுவீர்கள்.Chanakya Niti Qualities of a Intelligent Person in Tamilசாணக்கியருக்கு அரசியல் மற்றும் இராஜதந்திரம் பற்றிய நல்ல புரிதல் இருந்தது. இது தவிர வேறு பல துறைகளிலும் அவருக்கு ஆழ்ந்த அறிவு இருந்தது. சாணக்கியர் பொருளாதாரத்தில் நிபுணராக இருந்தார். எனவே அவர் கௌடில்யர் என்றும் அழைக்கப்படுகிறார். சாணக்கியரின் அறிவுரைகளை ஒருவர் தன் வாழ்வில் இணைத்துக் கொண்டால், அவர் மகிழ்ச்சியான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை நடத்த முடியும்.சாணக்கியர் ஒரு மனிதருக்கு இருக்க வேண்டிய சில குணங்களைப் பற்றி பேசியுள்ளார். இந்த குணங்களைக் கொண்ட ஒரு நபர் எப்போதும் புத்திசாலி என்று அழைக்கப்படுகிறார். ஒரு அறிவாளி எல்லா இடங்களிலும் மதிக்கப்படுகிறார். அவர்களின் வார்த்தைகளை சமுதாயம் கேட்டு பின்பற்றுகிறது. சாணக்கிய நீதியின் படி ஒருவரை புத்திசாலியாக்கும் குணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.நெருக்கடியான சூழ்நிலையில் அமைதியாக இருப்பதுவாழ்க்கையின் இக்கட்டான நேரங்களிலும் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்பவர் சமூகத்தால் புத்திசாலி என்று அழைக்கப்படுகிறார் என்று சாணக்கியர் கூறுகிறார். ஏனென்றால், நெருக்கடியான நேரங்களில் அவசர முடிவுகள் உங்களை சிக்கலில் மாட்டிவிடும். எனவே ஒரு நெருக்கடி ஏற்படும் போது, ​​உங்கள் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்யாதீர்கள்.உங்களை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள் மற்றும் சிக்கலைத் தவிர்க்கவும். நெருக்கடிகள் ஏற்படும் போது தயங்காமல், உங்கள் சொந்த பலம் மற்றும் பலவீனங்களை ஆராய்ந்து உங்கள் நெருக்கடிகளை சமாளிக்கவும்.தவறு செய்யாமல் இருப்பவர்கள்சாணக்கியரின் கொள்கையின்படி, ஒரு நபர் எப்போதும் தவறுகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். நற்செயல்களைச் செய்து, தவறான செயல்களில் இருந்து விலகி இருப்பவர் மக்களால ஞானி என்று அழைக்கப்படுகிறார். எனவே ஒரு நபர் எப்போதும் தவறு மற்றும் சர்ச்சைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். சாணக்கியர் கூறுகிறார், தனது புத்தியை சரியாகப் பயன்படுத்தி வெற்றி பெறத் தெரிந்தவர், சர்ச்சைகளில் இருந்து விலகி இருப்பவரை ஞானி என்று அழைக்கலாம் என்று சாணக்கியர் கூறுகிறார்.எதிர்கால திட்டங்களை ரகசியமாக வைத்திருப்பவர்சாணக்கியர், தனது எதிர்காலத் திட்டங்களை ரகசியமாக வைத்திருப்பவர் சிறந்த புத்திசாலி என்று கூறுகிறார். ஏனென்றால் வேலை முடிவதற்குள் தனது திட்டங்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவது அவர்களின் வேலையை சீர்குலைக்க வாய்ப்புள்ளது. சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபர் தனது திட்டங்களை எப்போதும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும்.இலக்கில் கவனம் செலுத்துவதுஎப்பொழுதும் தனது இலக்கை அடைவதற்காக உழைத்து, எந்தத் தடைகளையும் அச்சமின்றிச் சமாளிக்கும் திறன் கொண்டவர்தான் அறிவாளி என்கிறார் சாணக்கியர். நேரத்தையோ, சூழ்நிலையையோ நினைத்து தயங்காத ஒருவர் தனது இலக்கை அடைய அதிக நேரம் எடுப்பதில்லை.தடைகளை கடக்கும் திறன்எல்லா தடைகளையும் கடக்கும் திறன் ஒரு நபரை அறிவாளியாக மாற்றுகிறது. சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபர் தனது பணிகளை முடிப்பதில் எந்த தடைகளுக்கும் பயப்படாமல் தொடர்ந்து தனது இலக்கை நோக்கி நகந்தால் அவர் புத்திசாலி என்று அழைக்கப்படுகிறார். அப்படிப்பட்டவருக்கு லட்சுமி தேவியின் அருள் எப்போதும் இருக்கும்.
  • 159
Added a post  
இன்று நான் கேட்ட ஒரு பழைய பாடல்...என்னை ரொம்பவே சிந்திக்க வைத்தது ..!“இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை..” எத்தனையோ ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கும் "திருவிளையாடல்" படப் பாடல்தான் இது ..!ஆனால் இன்று ஏனோ.... இந்தப் பாடலின் ஒரு சில வரிகள், என்னை அறியாமலேயே , மீண்டும் மீண்டும் உள்ளத்தின் உள்ளே ஓடி வந்து உட்கார்ந்து கொண்டு... அர்த்தம் தெரிந்து கொள்ள என்னை அழைத்தன..!சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ - மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?”*பாடலின் இடையில் வரும் வரிகள் இவை ...!.இத்தனை வருடங்களாக இந்த பாடல் வரிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமே.... அது என்ன சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை..?நண்பர்கள் சிலரிடம் கேட்டுப் பார்த்தேன்....“ அது வந்து.... அதாவது.... சிவனின் திருவிளையாடல்களில் அதுவும் ஒன்று.... அதற்கு மேல்.... .... முழுசா தெரியலியே..!”.சரி...பாடலை எழுதியவர் யார் என்று பார்த்தேன்.. கண்ணதாசன்...! சும்மா எழுத மாட்டார் கண்ணதாசன்..! அவர் ஒரு வரி எழுதினால் .. அதற்குள்ளே ஓராயிரம் அர்த்தங்கள் ஒளிந்திருக்கும்..!.கூகிளில் , அங்கும் இங்கும் தேடி ஓடி... சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையைப் பிடித்தேன்.... அது இதுதான்...!.அந்தக் காலத்தில் காவிரிபூம்பட்டினத்தை சேர்ந்த வணிகன் ஒருவன். அவன் பெயர் அரதன குப்தன் மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு , மதுரையிலேயே வாழ்ந்து வந்தானாம்.காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த , அவன் தங்கைக்கும் , தங்கையின் கணவருக்கும் தங்கள் மகள் ரத்னாவளியையும் அரதன குப்தனுக்கே மணம் முடித்து விட மனதுக்குள் ஆசை.எதிர்பாராமல் ஒரு நாள் , அரதன குப்தனின் தங்கையும் , அவள் கணவரும் இறந்துவிட்டதாக காவிரிபூம்பட்டினத்திலிருந்து தகவல் வர ....உடனே புறப்பட்ட அரதன குப்தன், காவிரிபூம்பட்டினம் சென்று தங்கையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு விட்டு , திரும்பும்போது தாய் தகப்பனை இழந்து நின்ற ரத்னாவளியையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டான் .... வரும் வழியில் திரும்புறம்பயம் என்ற இடத்திலே... ஒரு புன்னைவனம் ..அதில் ஒரு வன்னிமரம் ..அருகில் ஒரு சிவலிங்கம்.. சற்றுத் தள்ளி ஒரு கிணறு...கட்டுசோறை பிரித்து சாப்பிட்டு விட்டு .... அங்கேயே தங்கி விட்டார்கள் இருவரும்..!காலையில் கண் விழித்த ரத்னாவளி பதறிப் போனாள்... கதறி அழுதாள் ...காரணம்...? அசைவற்றுக் கிடந்தான் அரதன குப்தன்... நள்ளிரவில் நல்ல பாம்பு வந்து கடித்திருக்கிறது....!தற்செயலாக அந்த வழியாக வருகிறார் திருஞானசம்பந்தர் .... நடந்ததை அறிந்து அவர் , ஈசனிடம் முறையிட... உயிரோடு எழுந்தான் அரதன குப்தன்... சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் ரத்னாவளியிடம் கேட்டுப் புரிந்து கொண்டாராம் சம்பந்தர்.... அப்புறம் சொன்னாராம் : “ஈசனுக்கு முன்பாகவே இந்தப் பெண்ணுக்கு ஒரு தாலியைக் கட்டி , இவளை உன் மனைவியாகவே ஊருக்கு அழைத்துக் கொண்டு போ..” மறு பேச்சுப் பேசாமல் மணம் செய்து கொண்டான் அரதன குப்தன்.. இந்த கல்யாணத்திற்கு சாட்சிகள் ... அங்கே இருந்த ஒரு வன்னிமரமும், கிணறும் , சிவலிங்கமும்தான் ...! இருவரும் மதுரை வந்து சேர்ந்தார்கள்..... கணவனோடு இன்னொரு பெண்ணைக் கண்டு கோபம் கொண்ட முதல் மனைவி , கொதித்துப் போனாளாம்... ரத்னாவளி நடந்த விஷயங்களை , உள்ளது உள்ளபடியே சொல்ல... அதை கொஞ்சமும் நம்பவில்லையாம் முதல் மனைவி..! வழக்கு சபைக்கு வந்தது... திருமணம் நடந்ததற்கு சாட்சி என்ன என்று எல்லோரும் கேட்டார்கள்... “மனிதர்கள் யாரும் இல்லை. சிவலிங்கமும், வன்னிமரமும், கிணறும்தான் சாட்சி..” என்று கூறினாள் ரத்னாவளி... முதல் மனைவி கேலியாக கேட்டாளாம் இப்படி ஒரு கேள்வி : .. “ஓஹோ...அந்த சிவலிங்கம் இங்கே வந்து சாட்சி சொல்லுமா?” கூடி இருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்களாம்.... கூனிக்குறுகிப் போன ரத்னாவளி , கைகூப்பி அழுதாள் ...தொழுதாள்....!கண்களில் கண்ணீர் வடிய கதறினாளாம் ரத்னாவளி.... “ஈசனே...இது என்ன சோதனை..? இப்போது எனக்காக இங்கு சாட்சி சொல்ல வருவது யார்..? சொல் இறைவா..சொல்....?”ரத்னாவளி பெரும் குரல் எடுத்து கதறி அழ ...அந்த அழுகையை நிறுத்தியது அங்கே கேட்ட ஒரு குரல் : "நாங்கள் சாட்சி.."குரல் வந்த திசையில் கூட்டத்தினர் அனைவரும் திரும்பிப் பார்க்க.... ஈசன் அங்கே எழுந்தருளி நின்றாராம்..!“ ஆம்...இவர்கள் திருமணம் நடந்தது உண்மைதான்... ரத்னாவளி கல்யாணத்துக்கு சாட்சியாக ,கல்யாணம் நடந்த இடமான திரும்புறம்பயத்தில் இருந்த வன்னிமரமும், கிணறும், லிங்கமும் , இன்று முதல் ,இந்த மதுரை கோவிலில், என் சந்நிதிக்கு ஈசான்ய மூலையில் ‌சாட்சியாக இருக்கும்..” என்று சொல்லி மறைந்தாராம் ஈஸ்வரன்...! பார்த்தவர் அனைவரும் பரவசப்பட்டுப் போனார்களாம்..!இப்போதும் , மதுரையில் சுவாமி சன்னதிக்கு வெளி பிரகாரத்தில் சிவன் சன்னதி மூலையில்... வன்னி மரம் , கிணறு, சிவலிங்கம் ஆகியவை இருக்கிறதாம்....!நீங்கள் பார்த்திருக்கிறீர்களா...?ஏற்கனவே மதுரை கோவிலுக்கு அடிக்கடி நான் போயிருக்கிறேன் ... ஆனால் அப்போது இந்தக் கதை தெரியாததால் கவனிக்கவில்லை..!இனி போகும்போது தேடிப் போய்ப் பார்க்க வேண்டும்..! கும்பகோணத்திலிருந்து சாட்சி சொல்ல மதுரை சென்றதால் “சாட்சி நாதர்” என்றும் “ஸ்ரீ சாட்சிநாதசுவாமி” என்ற பெயர் கிடைத்ததாம் திரும்புறம்பயம் கோவில் சிவனுக்கு...!கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தூரத்தில் இந்த திரும்புறம்பயம் ஸ்ரீ சாட்சிநாதசுவாமி கோவில் இருக்கிறதாம்..![ “பொன்னியின் செல்வன்” நாவலில் திரும்புறம்பயம் பள்ளிப்படைக்கோவில் பற்றி எழுதி இருக்கிறாராம் கல்கி..]கதையைப் படித்து முடித்த நான் , கண்ணதாசனை எண்ணி எண்ணி வியந்து போனேன் ...!“சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ..?” ....கண்ணதாசன் எழுதிய இந்த ஒரு வரிக்குப் பின்னால் , இவ்வளவு பெரிய கதை இருக்கிறதே..! இந்தக் கதையை முழுவதும் படிக்காமல் , கண்டிப்பாக கண்ணதாசனால் அந்த ஒரு வரியை எழுதி இருக்க முடியாது..!சரி.... ஒரு பாடலுக்கே இப்படி என்றால் .... அவர் எழுதிய ஆயிரக்கணக்கான பாடல்களில் எத்தனை எத்தனை அர்த்தங்கள் இருக்கும்..?அவற்றை தெரிந்து கொள்ள ,எத்தனை ஆயிரக்கணக்கான கதைகளை....நூல்களை..புராணங்களை...இதிகாசங்களை அவர் படித்திருக்க வேண்டும் ..?
  • 280
Added article  
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். இவருக்கு 15 வயதில் கவின்யா என்ற ஒரு மகளும் இருக்கிறார். இந்த நிலையில் மணப்பெண் நவீனா வின் மகள் கவின்யா தன் அம்மாவின் திருமணம் பற்றி கூறும்போது, "எங்க அம்மா ரொம்ப நாள் கழித்து சந்தோஷமா இருக்காங்க.. இதே போல் Life Full -ஆ சந்தோசமா இருக்கணும். அவர் எனக்கு ஒரு நல்ல அப்பாவாகவும், என் அம்மாவுக்கு ஒரு நல்ல கணவராக இருப்பாருன்னு நினைக்கிறேன்..” என்று கூறினார்.தொடர்ந்து பேசிய மணப்பெண் நவீனா விராத் என்னிடம் காட்டிய அன்பு போல் வேறு யாரிடம் என்னிடம் இந்தளவு அன்பு காட்டியதில்லை. எனக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்திருக்கிறது. என் வாழ்க்கையை நான் சரியாக வாழவில்லை. எனக்கு இப்போ அதுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று கூறினார். விராட் கூறும்போது நவீனா என் வாழ்க்கை துணையாக வருவதற்கு நான் புண்ணியம் பண்ணிருக்கேன் என்று கூறினார்.
  • 264
  • 307
நியாயமான கேள்விதான்.....ஆனால்... பதில் சொல்ல தெரியலை...
  • 295
அனைத்து கணவன்மார்களும் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியமானது பாடம்.
  • 301
  • 306
Added article  
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமாவிலும் சரி பொது வாழ்விலும் சரி எம்ஜிஆரால் பலனடைந்தவர்கள் எத்தனை எத்தனையோ பேர். உதவிக்கரம் நீட்டும் எவரும் வெறுங்கையோடு போனதில்லை. வாரி வழங்கும் கொடை வள்ளலாகவே வாழ்ந்திருக்கிறார் எம்ஜிஆர்.இந்த பழக்கங்கள் முக்கால் வாசி அவர் குருவாக ஏற்ற என்.எஸ்.கிருஷ்ணனிடம் இருந்தே வந்தது என்று சொல்லலாம். எம்ஜிஆரை முதன் முதலில் ஹீரோவாக அறிமுகப்படுத்திய பெருமை ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனர் சோமுவையே சேரும். அவரின் தயாரிப்பில் 1948 ஆம் ஆண்டு ஒரு பிரம்மாண்ட படைப்பு ஒன்று தயாரானது.அதுதான் அபிமன்யு திரைப்படம். இந்தப் படத்தில் அபிமன்யுவாக எஸ்.எம்.குமரேசன் என்ற நடிகர் நடித்திருந்தார். அவரின் மனைவியான வத்சலா கதாபாத்திரத்தில் யூ.ஆர்.ஜீவரத்தினம் நடித்திருந்தார். மேலும் அர்ஜூனன் கதாபாத்திரத்தில் எம்ஜிஆர் நடித்திருந்தார்.ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் ஒரு மிகப்பெரிய பொறுப்பில் இருந்தவர் டி.எஸ்.வெங்கடசாமி என்ற இளைஞராம். அவருக்கும் அபிமன்யு படத்தில் ஹீரோயினாக நடித்த யூ.ஆர்.ஜீவரத்தினத்திற்கும் இடையே காதல் மலர்ந்திருக்கிறது. இருவரும் யாருக்கும் தெரியாமல் பழனியில் போய் திருமணம் செய்து கொண்டார்களாம்.இந்த திருமணம் ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனர் சோமுவை மிகவும் பாதித்திருக்கிறது. மேலும் இதனால் படத்திற்கு ஏதாவது பின் விளைவுகள் ஏற்படுமா என்றும் பயந்திருக்கின்றனர். இருந்தாலும் யூ.ஆர். ஜீவரத்தினம் திருமணத்திற்கு பிறகும் அந்தப் படத்தில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார்.திருமணம் ஆனதில் இருந்து படப்பிடிப்பிற்கு ஜீவரத்தினத்தோடு அவரது காதல் கணவரான வெங்கடசாமியும் ஆஜராகி விடுவாராம். அபிமன்யூ படத்தில் ஜீவரத்தினத்திற்கும் படத்தின் ஹீரோவான குமரேசனுக்கும் ஏதாவது நெருக்கமான காட்சிகள் இருந்தால் இயக்குனர் கட் சொல்வதற்கு முன்பாகவே வெங்கடசாமி கட் கட் என சொல்லிவிடுவாராம். இதனாலேயே ஜீவரத்தினத்திற்கு படவாய்ப்புகள் குறைய தொடங்கியதாம்.
  • 314
  • 314
  • 316
  • 318
  • 319
Added a post  
யாழ்ப்பாணம் - கொக்குவில் புகையிரத நிலையம் தற்காலிகமாக சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.இது குறித்து மேலும் தெரியவருவதாவது - கொக்குவில் புகையிரத நிலையத்தில் கடமையாற்றிய நிலைய பொறுப்பதிகாரி இருபது லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரிவித்து கேப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பில் உடனடி நடவடிக்கையாக புகையிரத நிலையம் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளதுடன் நிலைய பொறுப்பதிகாரி தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.குறித்த புகையிரத நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் பிரயாணப் பயணச் சீட்டுக்களை பெற யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு செல்லவும் என்று அறிவிப்பொன்றும் கொக்குவில் புகையிரத நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.000
  • 345
Added a post  
கொழும்பு காலிமுகத்திடலிலுக்கு அருகில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ITC ரத்னதீப அதி சொகுசு நட்சத்திர ஹோட்டல் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்த திட்டத்திற்கு சுமார் 3,000 கோடி இந்திய ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இரண்டு கட்டிடங்களாக கட்டப்பட்டிருக்கும் இந்த ஹோட்டலில், முதல் கட்டிடம் 30 அடுக்கு ஹோட்டலாகவும், இரண்டாவது கட்டடம் 50 அடுக்குமாடி குடியிருப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தரையிலிருந்து சுமார் 100 மீட்டர் உயரத்தில் இந்த இரண்டு கட்டிடங்களையும் இணைக்கும் வகையில் 55 மீற்றர் நீளமான ஸ்கை ப்ரிட்ஜ் எனப்படும் வான் பாலமும் கட்டப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சம் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது000
  • 343
Added a post  
நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் அழைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார். ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று சபைக்கு அறிவித்துள்ளார். இன்று காலை 9.30 மணியளவில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானதை தொடர்ந்து சபாநாயகர் இந்த உத்தரவை சபைக்கு அறிவித்தார். பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12வது பிரிவின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 338
Added a post  
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் நாடாளுமன்றத்தில் உத்தேச மின்சார சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமர்வின் போது அமைச்சர் இதனை சமர்ப்பித்துள்ளார்.இந்த முன்மொழிவு விரைவில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மின்சாரத் தொழிலுக்காக சீர்த்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்வதற்கும், தேசிய மின்சார மதியுரைப் பேரவையைத் ஸ்தாபிப்பதற்காக ஏற்பாடு செய்வதற்கும் இச்சட்டத்தின் நியதிகளின் படி 2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சாரத் தொழிலுக்கான ஒழுங்குப்படுத்துநராக இருப்பதற்கு ஏற்பாடு செய்வதற்குமான தீர்மானங்கள் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க, கம்பனிகள் சட்டத்தின் கீழான எந்தக் கூட்டிணைக்கப்பட்ட உருவகங்களிலும் மின்பிறப்பாக்கம், மின்கடத்துகை, மின்விநியோகிப்பு, மின்வியாபாரம், மின்வழங்குகை மற்றும் மின்பெறுகை சம்பந்தமான அனைத்த செயற்பாடுகளும் உரித்தாக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.அத்தோடு, அந்தக் கூட்டிணைக்கப்பட்ட உருவகங்களின் கூட்டிணைப்புக்கு ஏற்புடையற்பாலானவான சட்டவாக்க வழிமுறைகளை ஏற்பாடு செய்வதற்கும்,தொடர்புப்பட்ட செயற்பாடுகளுக்கும் ஏற்புடையற்பாலனவாக இருக்க வேண்டிய செயன்முறைகளைக் குறித்துரைப்பதற்கும், 1969 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க, இலங்கை மின்சாரச் சபைச் சட்டத்தையும், 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க, இலங்கை மின்சார சட்டத்தையும் நீக்குவதற்கும், அத்துடன் அவற்றோடு தொடர்புப்பட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான எல்லாக் கருமங்களுக்கும் ஏற்பாடு செய்வது சட்டமூலத்தின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.000] 
  • 327
Added a post  
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் நாடாளுமன்றத்தில் உத்தேச மின்சார சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமர்வின் போது அமைச்சர் இதனை சமர்ப்பித்துள்ளார்.இந்த முன்மொழிவு விரைவில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மின்சாரத் தொழிலுக்காக சீர்த்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்வதற்கும், தேசிய மின்சார மதியுரைப் பேரவையைத் ஸ்தாபிப்பதற்காக ஏற்பாடு செய்வதற்கும் இச்சட்டத்தின் நியதிகளின் படி 2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சாரத் தொழிலுக்கான ஒழுங்குப்படுத்துநராக இருப்பதற்கு ஏற்பாடு செய்வதற்குமான தீர்மானங்கள் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க, கம்பனிகள் சட்டத்தின் கீழான எந்தக் கூட்டிணைக்கப்பட்ட உருவகங்களிலும் மின்பிறப்பாக்கம், மின்கடத்துகை, மின்விநியோகிப்பு, மின்வியாபாரம், மின்வழங்குகை மற்றும் மின்பெறுகை சம்பந்தமான அனைத்த செயற்பாடுகளும் உரித்தாக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.அத்தோடு, அந்தக் கூட்டிணைக்கப்பட்ட உருவகங்களின் கூட்டிணைப்புக்கு ஏற்புடையற்பாலானவான சட்டவாக்க வழிமுறைகளை ஏற்பாடு செய்வதற்கும்,தொடர்புப்பட்ட செயற்பாடுகளுக்கும் ஏற்புடையற்பாலனவாக இருக்க வேண்டிய செயன்முறைகளைக் குறித்துரைப்பதற்கும், 1969 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க, இலங்கை மின்சாரச் சபைச் சட்டத்தையும், 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க, இலங்கை மின்சார சட்டத்தையும் நீக்குவதற்கும், அத்துடன் அவற்றோடு தொடர்புப்பட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான எல்லாக் கருமங்களுக்கும் ஏற்பாடு செய்வது சட்டமூலத்தின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.000] 
  • 329
Added a post  
இலங்கைக்கு ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றையதினம் வருகைதந்திருந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கான பயண நோக்கங்களை வெற்றிகரமாக நிறைவுசெய்து மீண்டும் ஈரான் சென்றுள்ளார்.ஈரானுக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் அவர் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளதுமுன்பதாக நேற்று உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்து வைப்பதற்காக அவர் இலங்கைக்கு வருகைதந்திருந்தார்..இதன்போது ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.ஜனாதிபதி செயலகத்தில் வைத்து குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நேற்றையதினம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் ஊடாக திரைப்படத் துறை, ஊடகம், சுற்றுலா, கூட்டுறவு, நூலகங்கள், கலாசாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.000
  • 351
Added a post  
எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் இம்மாதம் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதிமுதல் 15ஆம் திகதிவரை சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ளது. இதற்கமைய, இம்மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிமுதல் மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் உள்ளிட்டவை இடைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களை ஏற்பாடு செய்தல், அதனை நடத்துதல், கருத்தரங்குகளை நடத்துதல், மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் போன்றவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் மே மாத இறுதியில் வெளியிடப்படும் எனவும் பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது000
  • 356
Added a post  
இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 40ஆவது போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 04 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.போட்டியின், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து 224 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.அணி சார்பில், அதிகபடியாக ரிஷப் பண்ட் 88 ஓட்டங்களையும், அக்ஷர் படேல் 66 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.பந்துவீச்சில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சந்தீப் வாரியர் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.இந்தநிலையில், 225 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 220 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியமை குறிப்பிடத்தக்கது000
  • 356
Added a post  
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை மீண்டும் குறைப்பதற்கு சங்கம் என்ற ரீதியில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.பால் மாவின் விலை திருத்தம் தொடர்பில் உத்தியோகபூர்வ கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என அதன் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.கடந்த மாதம் பால் மா இறக்குமதியாளர்கள் 400 கிராமுக்கு 60 ரூபாவாலும், ஒரு கிலோகிராம் ஒன்றிற்கு 150 ரூபாவாலும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.அதன்படி, தற்போது பால் மா சந்தையில் பல்வேறு விலைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், பால் மாவின் விலையை குறைப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், இன்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் பால் மாவின் விலையை குறைப்பதாக நியூசிலாந்தில் இருந்து பால் மாவை இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்று நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.000
  • 354
Added a post  
தற்போதுள்ள தேசிய அடையாள அட்டையை விட சிறந்த அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.அதற்கான டெண்டர்கள் திறக்கப்பட்டு, தற்போதுள்ள தேசிய அடையாள அட்டையில் பார் குறியீடு நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய புதிய அடையாள அட்டை விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.நுவரெலியாவில் ஆட்பதிவு திணைக்களத்தின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இதேவேளை, தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள 340 இடங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.அரசாங்கத்திற்கு நிதிப் பிரச்சினைகள் இருப்பதாகவும், ஆனால் மக்களுக்கு சேவைகளை வழங்குவதற்காக நாடு முழுவதும் பல அலுவலகங்கள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 357
Added a post  
இலங்கையில் ஆண் கைதிகளைப் போல் தனியார் நிறுவனங்களில் பணியுரியும் வாய்ப்பு பெண் கைதிகளுக்கு இதுவரையில் கிடைக்கவில்லை என சிறைச்சாலைப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.இதன்படி, "தண்டனை விதிக்கப்பட்ட 208 பெண் கைதிகள் மட்டுமே இருப்பதாகவும், அவர்களின் உழைப்பைப் பயன்படுத்த இதுவரை எந்த நிறுவனமும் முன்வரவில்லை" எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்."இந்தப் பெண் கைதிகளை வேலைக்கு அமர்த்தத் தயாராக இருக்கும் நிறுவனங்கள் இருந்தால், அவர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள்" எனவும் சிறைச்சாலைப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர்;''பெண் கைதிகளுக்கு பயிற்சி திட்டத்தின் ஒரு பகுதியாக தையல் மற்றும் நெசவு தொடர்பான பயிற்சி வழங்கப்படுகிறது. அத்துடன், அவர்களுக்கு சிறிய உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.ஆண் கைதிகளுக்கு சில தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பை வழங்கியுள்ளன. அதற்காக அவர்களுக்கு நாளொன்றுக்கு 1024 ரூபா சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.எனினும், பெண் கைதிகளுக்கு அவ்வாறு வாய்ப்பு கிட்டுவதில்லை'' என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.சிறைச்சாலைகளின் புள்ளிவிவர அறிக்கையின்படி 2022 ஆம் ஆண்டு 134,098 ஆண் கைதிகளும், 4483 பெண் கைதிகளும் இருந்தனர்.2021 ஆம் ஆண்டு 74,105 ஆண் கைதிகளும், 2868 பெண் கைதிகளும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.000
  • 357