Feed Item
Added a post 

இலங்கையில் ஆண் கைதிகளைப் போல் தனியார் நிறுவனங்களில் பணியுரியும் வாய்ப்பு பெண் கைதிகளுக்கு இதுவரையில் கிடைக்கவில்லை என சிறைச்சாலைப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, "தண்டனை விதிக்கப்பட்ட 208 பெண் கைதிகள் மட்டுமே இருப்பதாகவும், அவர்களின் உழைப்பைப் பயன்படுத்த இதுவரை எந்த நிறுவனமும் முன்வரவில்லை" எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

"இந்தப் பெண் கைதிகளை வேலைக்கு அமர்த்தத் தயாராக இருக்கும் நிறுவனங்கள் இருந்தால், அவர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள்" எனவும் சிறைச்சாலைப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர்;

''பெண் கைதிகளுக்கு பயிற்சி திட்டத்தின் ஒரு பகுதியாக தையல் மற்றும் நெசவு தொடர்பான பயிற்சி வழங்கப்படுகிறது. அத்துடன், அவர்களுக்கு சிறிய உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

ஆண் கைதிகளுக்கு சில தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பை வழங்கியுள்ளன. அதற்காக அவர்களுக்கு நாளொன்றுக்கு 1024 ரூபா சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

எனினும், பெண் கைதிகளுக்கு அவ்வாறு வாய்ப்பு கிட்டுவதில்லை'' என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறைச்சாலைகளின் புள்ளிவிவர அறிக்கையின்படி 2022 ஆம் ஆண்டு 134,098 ஆண் கைதிகளும், 4483 பெண் கைதிகளும் இருந்தனர்.

2021 ஆம் ஆண்டு 74,105 ஆண் கைதிகளும், 2868 பெண் கைதிகளும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

  • 373