Ads
 ·   ·  33 recipes
  •  ·  5 friends
  • I

    9 followers

தேங்காய் சட்னி வகைகள்

தேங்காய் சட்னிக்கு தாளிக்கும் போது கடலை எண்ணெயில் (மற்ற எண்ணெய்கள் கூடாது) அரை டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் முழு உளுந்து, இரண்டு குண்டு மிளகாய், ஒரு ஈர்க்கு கருவேப்பிலை தாளித்துக் கொட்டினால் சட்னி மணக்கும். 

அதேபோல் தேங்காய் சட்னி அரைக்கும் போது பச்சைமிளகாயுடன் சிறு துண்டு இஞ்சியும், இரண்டு பல் பூண்டும் சேர்த்துக் கொண்டால் மணம் கூடுவதோடு வாயு தொல்லை இருக்காது.

இதே தேங்காய் சட்னியை கொஞ்சம் மாற்றம் செய்து அரைத்தால் அதன் சுவை வேறு மாதிரி சூப்பராக இருக்கும். பத்து சாம்பார் வெங்காயம், ஐந்து பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி, இரண்டு பல் பூண்டு, ஒரு கொத்து கருவேப்பிலை இவற்றை ஒரு டீஸ்பூன் எண்ணெயில் லேசாக வதக்கி தேங்காய், பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து தாளிக்க இரண்டு இட்லி கூடுதலாக உள்ளே போவது உறுதி. ,

இன்னொரு முறையில் தேங்காய் சட்னியில் நிறைய வெங்காயம், ஒரு கைப்பிடி கருவேப்பிலை, ஆறு காய்ந்த மிளகாய், கொஞ்சம் மல்லித்தழை, ஒரு துண்டு இஞ்சி, நான்கு பல் பூண்டு, விரல் நீள புளி முதலியவற்றை வதக்கி தேங்காய் பொட்டுக்கடலையுடன் சேர்த்து அரைக்க இன்னொரு சுவையில் சட்னி அசத்தும்,

இரண்டு கை பொட்டுக்கடலையுடன், பத்து பல் பூண்டு,  ஆறு காய்ந்த மிளகாய், அரை விரல் நீளம்  இஞ்சி, கல் உப்பு சேர்த்து கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்து நீர்க்க கரைத்து தாளிக்க ரோட்டுக்கடை சட்னி ரெடி.

ஒரு பெரிய வெங்காயம் நறுக்கியது, ஐந்திலிருந்து ஏழு காய்ந்த மிளகாய், துளியூண்டு புளி, ஒரு கை பொட்டுக்கடலை, கொஞ்சம் நாட்டுச் சர்க்கரை, தேவையான உப்பு சேர்த்து பச்சையாக அரைத்து எடுத்து தாளிக்க இதன் சுவையும், மணமும் வேறுபடும்.

ஒரு கை புதினா, ஒரு கை கொத்துமல்லி தழை,  ஒரு கை கருவேப்பிலை, இரண்டு துண்டு இஞ்சி, ஒரு மூடி தேங்காய், ஒரு டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை, எட்டு காய்ந்த மிளகாய், தேவையான உப்பு சேர்த்து அரைத்து தாளிக்க மணக்க மணக்க வித்தியாசமான தேங்காய் சட்னி தயார்.

  • 670
  • More
Reviews (0)
Login or Join to comment.
Ads
Latest Recipes (Gallery View)
1-12
Ads