- · 5 friends
-
I
சைதாப்பேட்டை வடைகறி
சென்னையில் மிகவும் பிரபலமான உணவாகத் திகழ்வது வடகறி. சென்னையில் வடகறியைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு பேமஸ்ஸான உணவு வடகறி.
கடலைப்பருப்பு - அரைக் கிலோ.
ஏலக்காய் - 5.
கிராம்பு - 5.
பட்டை, லவங்கம் - 25 கிராம்.
சோம்பு - 50 கிராம்.
மஞ்சள்தூள் - 10 கிராம்.
தனியாத்தூள் - 50 கிராம்.
மிளகாய்ப்பொடி - 50 கிராம்.
உப்பு - தேவையான அளவு.
பெரிய வெங்காயம் - 300 கிராம்.
தக்காளி - 200 கிராம்.
புதினா - இரண்டு கைப்பிடி.
கடலெண்ணெய் - தேவையான அளவு.
இஞ்சி - 50 கிராம்.
பூண்டு - 100 கிராம்.
பச்சை மிளகாய் - 50 கிராம்.
கடலைப்பருப்பை அரை நாள் ஊற வைத்து, வடைக்கு அரைப்பதுபோல் கெட்டியாக அரைக்கவும். அடி கனமான வடைச் சட்டியில் கடலெண்ணெய் ஊற்றி, கடலைப்பருப்பு விழுதை தட்டியது போல பொரித்து எடுங்கள். அரை வேக்காட்டு பதமாக இருக்க வேண்டும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மைய அரைக்கவும். ஏலக்காய், கிராம்பு, பட்டை, லவங்கம், சோம்பு ஆகியவற்றை பொடித்து வைக்கவும்.
தனியாக கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய தக்காளி, வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி, அதில் இஞ்சி - பூண்டு விழுது, பட்டை - சோம்பு பொடி கலவையைச் சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சூடானதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க விடுங்கள். நன்றாகக் கொதித்ததும் பொரித்து வைத்துள்ள கடலைப்பருப்பு வடையைச் சேர்த்து, சுண்டக் காய்ச்சுங்கள். இறுதியாக புதினா இலையைத் தூவி, இறக்குங்கள். பட்டை, கிராம்பு, சீரகத்தை சரியான பதத்தில் சரியான அளவில் போட வேண்டும்.
வடகறி தயார்.....