- · 5 friends
-
I

மீசையை எடுத்து விட்ட தேவர்
தேவர் அவர்கள் புகைபடம் நீங்கள் பார்த்திருப்பீர்கள், ஓன்று கம்பீரமா மீசைவச்சியிருக்ற மாதிரியும் மற்றது மீசையில்லாமல் முடிநிறைய வளர்த்து சாந்தமாயிருக்ற புகைபடம் ஒன்று. மீசைதானே ஆண்களுக்கு அழகு அதை ஏன் தேவர் எடுத்தாரென்று உங்களுக்குத் தெரியுமா?
திருவிதாங்கூர் ராஜா தேவரை அவரது அரசபையில் சொற்பொழிவாற்ற அழைக்கிறார்.சிருவயதிலிருந்தே தேவருக்கு பேச்சாற்றல் ஊற்றுபோல் அமைந்திருந்தது.பேச்சு,நடணம், பாட்டெல்லாம் கத்துக்கொடுத்தால் மட்டும் வராது,உள்ளுக்குள் ஒரு ஊற்றிருந்தால் மட்டுமே அமையும்!ஒருமுறை சாயல்குடியில் விவேகானந்தர் விழா ஒன்று நடத்துகிறார்கள், அதில் பேசவேண்டிய கிருஷ்ணசாமி பாரதி அவர்கள் மதுரையிலிருந்து வரணும், அவர் வரல, உடனே விழா அமைப்பாளர்கள் தேவரை பேச அழைக்கிறார்கள்.
மேடையேறிய தேவர் மடைதிறந்த வெள்ளம் போல் விவேகானந்தரை பற்றி பேசினார். பேசி நேரம் சிலநிமிடங்கள் அல்ல மூன்றுமணி நேரம்! பெரிய பேச்சாளர்களே டக்கென்று பேச அழைத்தால் தடுமாறிவிடுவார்கள சபையில்! இதையெல்லாம் கேள்வியுற்றே திருவிதாங்கூர் மகராஜா அவர் சபையில் சொற்பொழிவாற்ற தேவரவர்களை அழைத்திருந்தார்.
முதல்நாள் சொற்பொழிவாற்றியபின் தேவரை சமஸ்தான இளவரசி சந்திக்கவிரும்பி அழைத்தார், தேவரும் பாரட்ட அழைப்பார் என்றெண்ணி சென்றார்.எடுத்தவுடன் இளவரசி கேட்டார் உங்களுக்கு திருமணம் ஆயிற்றா என்று,இல்லையென்று தேவர் கூற, உங்களைத் திருமணம் செய்ய ஆசைபடுகிறேன் என்றார், திகைத்த தேவர் ஏனென்று வினவ, உங்கள் கம்பீரமும் பேச்சும் உங்கள் கம்பீரமான மீசையும் எனக்கு ரோம்ப பிடித்திருக்கிறது என்றார்.
சிரித்துக்கொண்டே பதிலொன்றும் கூறாமல் சென்ற தேவர், மறுநாள் சொற்பொழிவில் மீசையின்றி சொற்பொழிவாற்றினார்.எல்லோரும் ஏன் மீசையை எடுத்தீர்களென்று வினவ ஒரு இளம்பெண்ணின் மனதில் இந்த மீசை சஞ்சலத்தையேற்படுத்தியதால் அந்த அழகு எனக்குத் தேவையில்லை ஆன்மீகமே எனக்குத்தேவையென கம்பீரமாக பதில் கூறினார், இது கதையல்ல.... வரலாறு!

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·