Category:
Created:
Updated:
I
இரண்டாவது உலகப் பெரும்போர் நடந்து கொண்டிருந்த போது அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட், இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில். ரஷ்ய சர்வாதிகாரி ஸ்டாலின் ஆகிய மூவரும் ஒரு முறை சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தனர்.
சர்ச்சில் சொன்னார்: நேற்றிரவு என் கனவில் கடவுள் வந்தார். ஐரோப்பியா முழுவதற்கும் உன்னைப் பிரதமர் ஆக்குகிறேன் என்று.
ரூஸ்வெல்ட் சொன்னார்: இவ்வளவுதானே! நேற்று என் கனவிலும் கடவுள் வந்தார். உலகத்திற்கே உன்னை ஜனாதிபதி ஆக்குகிறேன் என்று எனக்கு சத்தியமே செய்து கொடுத்தார்.
இறுதியாக ஸ்டாலின் சொன்னார்: "நான் உங்கள் கனவில் வந்தது உண்மைதான். ஆனால் அப்படி உறுதிமொழி எதுவும் தர வில்லையே."