- · 5 friends
-
I
சிறந்த பக்தி - ஆன்மீக கதை
அன்று ஏகாதசி கூட்டம் அலை மோதியது ஆனால் மூலஸ்தானத்தில் விட்டலனின் சாநித்யத்தை காணவில்லை.
எங்கே போனான் விட்டலன் தான் போகும் இடத்தை எங்களுக்குக் கூட தெரிவிக்காமல் சென்றிருக்கிறானே!
பாண்டுரங்கா, ஒரு வேளை எங்களுடன் விளையாடிப் பார்க்கிறாயா? அப்படியானால் அந்த விளையாட்டில் நாங்களும் பங்குபெறத்தயார். விட்டலா, உன்னைக் கண்டுபிடிக்காமல் விடமாட்டோம் என நாமதேவரும் ஞானேஸ்வரரும் தேடத்தொடங்கினார்கள். விட்டலன் சென்ற பாதையில் அவர்கள் சரியாகவே பின்தொடர்ந்தனர். எல்லாம் விட்டலனின் அருள்.
இதோ நமக்கு மிகவும் அறிமுகமான விட்டலனின் துளசிமாலை வாசம். அந்த வாசனையையே அடையாளமாகக் கொண்டு, இருவரும் விட்டலன் சென்று கொண்டிருந்த பகுதியை மெல்ல மெல்ல அடைந்துகொண்டிருந்தனர்.
அதே சமயம் அன்று தம் வாழ்நாளின் பொன் நாள் என்பதை அறிந்திராத ஸாவ்தாமாலி நந்தவனத்தில் பூக்களைக் கொய்து கொண்டிருந்தார். அவர் உதடுகளோடு அபங்கங்களைத் தொடுத்து வெகு இயல்பாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. அப்போது சற்று தூரத்தில் வேகமான காலடி ஒலி கேட்டது. அந்த ஒலி மேலும் அதிகமானது. இப்படி ஓட்டமும் நடையுமாக வருவது யார்? உற்றுப் பார்த்த ஸாவ்தாமாலி ஒரு கணம் உறைந்து விட்டார்.
தம்மை நோக்கி ஓடி வந்து கொண்டிருப்பது தம் மனத்தில் இடைவிடாது பூஜிக்கும் பாண்டுரங்கன் அல்லவா? பரவச உச்சத்தை அடைந்தார். விட்டலனின் பாதங்களில் விழுந்தார். அவனது இரு பாதங்களிலும் தம் தலையைப் பதித்தார். என்ன ஒரு சுகானுபவம்!
பண்டரிபுரக் கருவறையில் பக்தர்களுக்கு அனுமதிக்கப்படும் மிகப்பெரும் பாக்கியமும் தலைசாய்த்து எடுக்கும் அனுபவம்...
பிற பக்தர்கள் பதிப்பது மூலச்சிலையின் பாதங்களில் என்றால், ஸாவ்தாமாலிக்கு, விட்டலனின் உயிர்ப்புள்ள வடிவத்தின் பாதங்களை நேரடியாகவே பற்றிககொள்ளும் பெரும் பேறு...
ஸாவ்தா, உன் வழிபாட்டுக்கெல்லாம் இப்போது நேரமில்லை எனக்கு உடனடியாக உன் உதவி தேவை என்றான் விட்டலன்.
இறைவனுக்கு எதற்கு என் உதவி என்றெல்லாம் ஸாவ்தா மாலி யோசிக்கவில்லை. பக்தியின் உச்சக்கட்ட சிறப்பே அதுதானே. தர்க்கங்கள் மறைந்துவிட, நம்பிக்கை கோலோச்சும் தருணங்கள். கட்டளையிடுங்கள் என்றார் ஸாவ்தா மாலி.
இரண்டு திருடர்கள் என்னைத் துரத்திக் கொண்டு வருகிறார்கள், எங்காவது ஒளிந்து கொள்ள இடம் வேண்டும் என்றார் விட்டலன்.
“தம் மூன்று அடிகளால் பிரபஞ்சத்தையே அளந்த திருமாலின் வடிவம், ஒளிய இடம் கேட்ட விந்தையை அன்று உலகம் கண்டது.”
ஏதாவது பெரிய மரத்துக்குப் பின்னால் விட்டலனை மறைத்து நிற்கச் சொல்லலாமா? அல்லது சற்றுத் தள்ளி நிற்கும் தம் குடிசையில் ஒளிந்துகொள்ளச் சொல்லலாமா? ஒருவேளை கிணற்றுக்குள் உள்ள படிகள் விட்டலனுக்கு அதிகப் பாதுகாப்பு அளிக்குமா?'
ஸாவ்தா மாலியின் சிந்தனைக்கு விட்டலனின் வாசகம் கடிவாளம் போட்டது. இங்கெல்லாம் மறைந்து கொண்டால் அவர்கள் இருவரும் கண்டுபிடித்துவிடுவார்கள்' என்றார் பதற்றத்துடன்.
ஆம், கிட்டத்தட்ட கண்டுபிடித்துவிட்டார்கள்.
தெய்விக துளசி மாலையின் வாசம் வலுவடைந்துகொண்டே வந்தது. ஆக விட்டலனை நெருங்கிவிட்டோம். நாமதேவரும் ஞானேஸ்வரரும் உற்சாகம் பொங்க யாம் உனைத் தொடர்ந்து சிக்கெனப்பிடித்தோம். எங்கு எழுந்தருளுவது இனியே!' என்பதுபோன்ற உவகையுடன் ஸாவ்தா மாலியின் நந்தவனத்துக்குள் நுழைந்தனர்.
சீக்கிரமாக எனக்கு ஓர் இடத்தைக்காட்டு' என்று அவசரப்படுத்தினார் விட்டலன்.
சட்டென அந்த எண்ணம் தோன்றியது ஸாவ்தா மாலிக்கு... எப்போதும் என் இதயத்தில் நிறைந்திருப்பது விட்டலன் தானே, அந்த வீட்டிலேயே அவனை மறைத்துவைத்தால் என்ன?' சட்டென அருகில் இருந்த கத்தியை எடுத்து தன் மார்புப் பகுதியைக் கிழித்தார். உள்ளே மறைந்துகொள்ளுங்கள்' என்றார்.
பக்தனின் இதயத்தில் குடிகொள்ள பரந்தாமனுக்குக் கசக்குமா என்ன? மறைந்து கொண்டான். தூரத்தில் ஞானேஸ்வரரும் நாம தேவரும் விழிகளால் விட்டலனைத் தேடியபடியே விரைந்து நெருங்கிக் கொண்டிருந்தனர்.
தம் இதயப் பகுதியில் பெருகிக்கொண்டிருக்கும் ரத்தத்தையே அடையாளமாகக் கொண்டு விட்டலனின் மறைவிடத்தை இவர்கள் கண்டுபிடித்தால்?' இப்படி யோசித்த ஸாவ்தாமாலி ஒரு பெரிய கம்பளத்தை எடுத்து, தம் உடலின் மேல் பகுதியைப் போர்த்திக்கொண்டார்.
விட்டலனைத் துரத்திவரும் இந்த திருடர்களை என்ன செய்யலாம்? கோபத்துடன் அந்த இருவரையும் பார்த்தார் ஸாவ்தாமாலி குழப்பம் ஏற்பட்டது.
இவர்களா திருடர்கள்? ஞானஒளி வீசுகிறதே இவர்களிடம் குழம்பினார்...
நாமதேவருக்கும் குழப்பம் ஏற்பட்டது, உங்களுக்குப் புரிகிறதா? என்று ஞானேஸ்வரரைக் கேட்டார், அவருக்கும் அதே உணர்வுதான்.
இந்தப் பரந்த நந்தவனத்தில் ஒரு தோட்டக்காரனைத் தவிர வேறு யாரும் புலப்படவில்லை. ஆனால் அதேசமயம் அந்த தோட்டக்காரனைத் தாண்டிச் சென்றால் துளசி மாலையின் வாசனை குறைகிறதே. அப்படியானால் விட்டலன் இங்கு தான் இருக்கிறான்... ஆனால் குறிப்பாக எங்கு இருக்கிறான்?
விபரம் புரியாமல் திகைத்து நின்றனர்.
இருவரும் எதிரே நின்ற தோட்டக்காரர் போர்த்தியிருந்த கம்பளியையும் மீறி உதிரம், வெளியே கசிந்தது.
அப்போது நாமதேவர் இந்த தோட்டகாரன் நம் விட்டலனை ஏதோ செய்து விட்டான் என அவரை தாக்க முயற்சிக்க உடனே ஞானேஸ்வரர் அவரை சமாதானம் செய்ய..
பிறகு ‘விட்டலா’ ‘விட்டலா' இருவரின் தொண்டையிலிருந்தும் பெரும் ஓலம் கிளம்பியது... விட்டலன் வெளிப்பட்டான்.
ஸாவ்தாமாலியின் உடல் காயம், நீங்கி பழைய நிலையை அடைந்தது.
என்ன நடந்தது என்பதை அறிந்தவுடன் பின் தொடர்ந்த' மகான்கள் இருவரும் பிரமித்தனர்.
ஆனந்த கண்ணீரால் அவர்கள் கரங்கள் இரண்டும் குவிந்தன.
ஸாவ்தா மாலியும் வந்தவர்கள் யாரென அறிந்ததும் பெரும் மகிழ்ச்சியுடன் அவர்களின் பாதங்களில் விழுந்தார்.
செயற்கரிய செயலைப் புரிந்த ஸாவ்தா, உனக்குத் தேவையான வரம் என்ன?'' எனக் கேட்டான் விட்டலன்.
தமக்கு எது தேவை என்பது ஸாவ்தாமாலிக்குத் தெளிவாகவே தெரிந்திருந்தது. எத்தனை பிறவி எடுத்தாலும் உங்களை மறவாத நிலை வேண்டும்' என்றார்.
அந்த வரம் தயக்கமின்றி அளிக்கப்பட்டது.
இன்றும் பாகவத வரிசையில் ஸாவ்ந்த மாலீ மிக முக்கியமானவர் இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த நாமதேவரும் ஞானேஸ்வரரும் உடல் புல்லரிக்க நெக்குருகி நின்றனர்.
சரி வாருங்கள் வகுளாபுரி செல்வோம்... அங்கே எனது மற்றொரு பக்தன் கூர்மதாசன் இருக்கிறான் அவனுக்கு நாம் அனைவரும் சென்று தரிசனம் தரலாம் எனக்காகக் அவன் காத்துக்கொண்டிருக்கிறான்' என்றான் விட்டலன்.
நால்வருமாகப் புறப்பட்டனர் அங்கே கூர்ம தாசர் கலங்கியபடி ஊர்ந்து கொண்டிருந்தார் அவருக்கு அங்கேயே அப்போதே தரிசனம் கிட்டியது பிறகு கூர்ம தாசரின் வேண்டுகோளின் படி அங்கேயே ஒரு சுயம்புவாக பகவான் இன்றளவும் காட்சி தருகிறான் அந்தஊர் குர்மியா என அழைக்கபடுகிறது.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·