- · 5 friends
-
I
"அண்ணன் பொண்டாட்டி அரைப் பொண்டாட்டி; தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டி" பழமொழியின் விளக்கம்
அரை பொண்டாட்டியா? அப்போ படுக்கையை பகிர்ந்து கொள்வதை குறிப்பிட்டு இந்த பழமொழியை உருவாக்கியுள்ளார்கள் என நினைத்து விடாதீர்கள். 'அண்ணன் பொண்டாட்டி அரை பொண்டாட்டியாம்; தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டியாம்' எனும் பழமொழிக்கு பின்னர் பெரும் கதையே உள்ளது. இந்த பழமொழி மட்டுமல்ல உலகில் உள்ள எல்லா பழமொழிக்கு பின்னரும் பெரும் விளக்கவுரை உண்டு.
முன்னரெல்லாம் கூட்டு குடும்பம் தான். ஒரே வீட்டில் மாமனார், மாமியார், பாட்டி, தாத்தா, பெரிய மருமகள், சின்ன மருமகள், பத்து பதினைந்து குழந்தைகள் என குடும்பமே குட்டி திருவிழா போல இருக்கும். மாமியார் தான் வீட்டின் எல்லா பொறுப்பையும் பார்த்துக்கொள்வார். முதல் மருமகள் வந்ததும் அந்த பொறுப்பு எல்லாம் மருமகளிடம் சென்றுவிடும். குழந்தைகள், பெரியவர்கள், வீட்டு நிர்வாகம் என எப்போதுமே முதல் மருமகள் ஏதாவது வேலையாகத்தான் (பிசியாக தான்) இருப்பார்.
பெரியவர்களுக்கு சாப்பாடு போட்டு, நண்டு, சிண்டையெல்லாம் தூங்க வைத்துவிட்டு, பாத்திர பண்டங்களை துலக்கி, அப்படிஇப்படியென இந்த வேலை எல்லாம் முடித்துவிட்டு கணவருடன் தூங்க செல்ல அரை ராத்திரிக்கு மேல் ஆகிவிடும். அதாவது பன்னிரண்டு மணிக்கு மேல் ஆகிவிடுமாம். இப்படி அரை ராத்திரி ஆகிவிடுவதால் அண்ணனுக்கு அரை பொண்டாட்டியாம். அதுவே தம்பி பொண்டாட்டி, இளைய மருமகளுக்கு அந்த அளவிற்கு வேலை பளு இருக்காது என்பதால் விரைவாக தூங்க போய்விடுவார். அதனால்தான், 'தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டியாம்'.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·