·   ·  1432 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

முதுமையை தள்ளிப் போட உதவக்கூடிய சில உணவுப் பொருட்கள்

35 வயதிற்கு மேல் சென்ற பிறகு உனக்கு வயதாகி விட்டது என்று கூறினால் கோபம் வரும். பலரும் தங்களுடைய வயதை முடிந்த அளவிற்கு குறைத்துக் காட்ட வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். இதற்காக செயற்கையான முறைகளை பின்பற்றாமல் இயற்கையிலேயே நம்முடைய உடலை முதுமை அடையாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் கண்டிப்பாக முதுமை என்ற ஒன்று இருக்கத்தான் செய்யும். அது எப்பொழுது வருகிறது என்பதுதான் முக்கியமான விஷயம். பலருக்கு இளம் வயதிலேயே முதுமை தோற்றம் என்பது ஏற்பட்டுவிடும். இன்னும் சிலருக்கோ வயதான பிறகும் அவர்கள் இளமையாக தோற்றம் அளிப்பார்கள். இதற்கு அவர்களின் மரபணுக்களே காரணம்.

முதுமை அடைந்தவர்களுக்கு மரபணுக்களில் மாற்றம் ஏற்பட்டு இருக்கும். இந்த மரபணுக்கள் பழுதடைவதற்கு முக்கியமான காரணமாக திகழ்வது நம்முடைய உணவு பழக்க வழக்கமும், சுற்றுச்சூழலும் தான். இதை சரி செய்தாலே நம்முடைய இளமையை நம்மால் தக்க வைத்துக் கொள்ள முடியும். முதுமையை தள்ளிப்போட்டு இளமையை தக்க வைப்பதற்கு சில உணவுப் பொருட்களை நாம் அன்றாடம் நம்முடைய உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பொதுவாகவே இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பழங்களையும், காய்கறிகளையும், கீரை வகைகளையும் அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. இதோடு எண்ணெயில் பொறிக்கக்கூடிய பொருட்களை சாப்பிடக்கூடாது. வெள்ளை சர்க்கரையை அதிகமாக சேர்க்கக் கூடாது, உப்பை அதிகமாக சேர்க்கக் கூடாது, பதப்படுத்தப்பட்ட பொருட்களை சேர்க்கக்கூடாது என்று முதுமையை வரவழைக்கக்கூடிய பொருட்களின் பட்டியல் நீண்டு கொண்டு செல்லும்.

அதே சமயம் முதுமையை தாமதப்படுத்தக்கூடிய உணவுப் பொருட்களும் இருக்கின்றன. அதை நாம் உண்ணும் பொழுது நம்முடைய மரபணு ரீதியான மாற்றங்கள் சரியாகி முதுமை சில நாட்களுக்கு தள்ளி போகும். இதில் முதலிடம் பிடிக்கக் கூடியது மாதுளம் பழம். மாதுளம் பழத்தில் இருக்கக்கூடிய ஆன்ட்டி ஆக்சைடுகள் நம்முடைய மரபணுக்களில் பழுதுகள் ஏற்பட்டு இருப்பின் அந்த பழுதை சரி செய்து இளமையை தக்க வைக்க உதவுகிறது.

அடுத்ததாக பப்பாளி, பப்பாளியில் பெப்பின் என்னும் ஆன்டிஆக்சைடு இருக்கிறது. இது கொலாஜன் உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. வைட்டமின் ஏ, சி, இ போன்ற சத்துக்கள் இதில் அதிக அளவு இருக்கின்றன. கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும் பொழுது தான் வயதான தோற்றம் என்பது குறையும். மூன்றாவதாக கிரீன் டீ, கிரீன் டீயில் இருக்கக்கூடிய ஆன்ட்டி ஆக்சைடு அணுக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. கொலாஜினை பாதுகாப்பதற்கும் அதனால் வயதாவதை தாமதப்படுத்தவும் உதவுகிறது.

நான்காவதாக நாவல் பழம். இதில் இருக்கும் விட்டமின் சி நம் முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள், பருக்கள், சுருக்கம் போன்றவற்றை நீக்கி இளமையை தக்க வைக்க உதவுகிறது. அடுத்ததாக நாம் பார்க்கக் கூடியது ஆலிவ் ஆயில். இதில் இருக்கக்கூடிய ஆன்டி-ஆக்சைடுகள் மரபணுவை மாற்றி அமைக்கும் தன்மை உடையதாக திகழ்வதால் நம்முடைய மரபணுக்களில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அதை சரி செய்து இளமையை தக்க வைக்க உதவும்.

ஆறாவதாக திராட்சை, இதில் சிவப்பு திராட்சை, கருப்பு திராட்சை என்று இருக்கிறது. இரண்டையும் நாம் சாப்பிடலாம். இதில் அதிக அளவு நமக்கு பலன் தரக்கூடியது கருப்பு திராட்சியே. கருப்பு திராட்சையை நாம் சாப்பிடுவதன் மூலம் அதில் இருக்கக்கூடிய ஆன்டிஆக்சைடுகள் நம்முடைய உடலில் இருக்கக்கூடிய பழுதடைந்த அணுக்களை நீக்கக்கூடியதாக திகழ்கிறது. கடைசியாக டார்க் சாக்லேட். இதில் கொக்கோ பவுடர் அதிகளவில் இருக்கிறது. இந்த கொக்கோ பவுடர் நம்முடைய தோலை பாதுகாக்க உதவுகிறது.

ரத்த ஓட்டத்தை சீராக்கவும், நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. இதோடு மட்டுமல்லாமல் சூரிய ஒளி கதிர்களில் இருந்து வரக்கூடிய புற ஊதா கதிர்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளிலிருந்து நம்முடைய சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. மேற்சொன்ன இந்த உணவுப் பொருட்களை நம்முடைய உணவில் அன்றாடம் நாம் எடுத்துக் கொள்வதன் மூலம் முதுமையை தள்ளிப் போட முடியும்.  

  • 1578
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய