- · 5 friends
-
I
தக்காளி கடையல் இப்படி செய்தால் எவ்வளவு இட்லி செய்தாலும் காலியாகிவிடும்
இல்லத்தரசிகளுக்கு இந்த தக்காளி கடையல் ஒரு வரப்பிரசாதமாக அமையும். குக்கர் இருந்தால் போதும் இரண்டு விசிலில் சட்டுன்னு தயார் செய்துவிடலாம். இட்லி, தோசை, உப்புமா போன்றவற்றுக்கு தொட்டுக் கொள்ள சூப்பரான காம்பினேஷன் ஆக இருக்கக்கூடிய இந்த தக்காளி கடையல் செய்வது எப்படி என பார்க்கலாம்.
சின்ன வெங்காயம் சேர்த்து செய்யும் பொழுது இந்த கடையல் ரொம்பவே ருசியாக இருக்கும். முதலில் குக்கரை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்து வந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் தோலுரித்த பூண்டு பற்களை ஒன்றிரண்டாக நசுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.
ரெண்டு பச்சை மிளகாயை கீறி சேர்த்துக் கொள்ளுங்கள். இவை லேசாக வறுபட்டவுடன் தோல் உரித்து வைத்துள்ள வெங்காயத்தை அப்படியே சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தை நன்கு சிவக்க வதக்கி கொள்ள வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியவுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி துண்டுகளையும் சேர்த்து மசிய வதக்க வேண்டும்.
இவை மசிய வதங்கி வந்தவுடன் குழம்பு மிளகாய் தூள் அல்லது அதற்கு பதிலாக சாம்பார் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் காரத்திற்கு மிளகாய் தூள் சேர்த்து கலந்து விடுங்கள். இப்பொழுது தேவையான அளவிற்கு உப்பு போட்டு ஒருமுறை நன்கு கலந்து கொள்ளுங்கள். மசாலாவின் பச்சை வாசம் போக வதக்கியவுடன் உங்களுக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள்.
குழம்பு நன்கு கொதித்ததும் குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு எடுத்தால் போதும் மணக்க மணக்க தக்காளி கடையல் தயாராக இருக்கும். இதில் மேலும் சுவை கூட்ட மற்றும் திக்கான கிரேவியாக மாற்ற சிறிதளவு பச்சரிசி மாவை அரை கப் தண்ணீரில் கலந்து சேர்த்து ஒரு முறை நன்கு கொதிக்க விடுங்கள். பச்சரிசி மாவிற்கு பதிலாக பொட்டுக்கடலை மாவையும் சேர்க்கலாம். ஒரு கொதி வந்தவுடன் நறுக்கிய மல்லித்தழை மற்றும் கருவேப்பிலை இலைகளை தூவி இறக்கிவிடலாம் சூப்பரான கடையல் ரெடி.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·