- · 5 friends
-
I
ஆடி கடைசி வெள்ளி மஹாலக்ஷ்மி (வரலக்ஷ்மி பூஜை) - 16/08/2024
16/08/2024 ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை. கூடவே வரலக்ஷ்மி நோன்பும் சேர்ந்து வந்திருக்கிறது.
அஷ்டலஷ்மிகளின் ஐஸ்வர்யங்களையும் நாம் பெற வேண்டி செய்ய வேண்டிய எளிமையான ஒரு வழிபாட்டு முறை
அனைத்து சுமங்கலி பெண்களும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய விரதம் தான் இந்த வரலக்ஷ்மி விரதம்.
உங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று அம்பாளுக்கு விளக்கு போட்டு வழிபாடு செய்து பிரார்த்தனை வையுங்கள்.
வெற்றிலை பாக்கு, பூ பழம், இரண்டு கண்ணாடி வளையல் வைத்து யாராவது ஒரு சுமங்கலி பெண்ணுக்கு கொடுப்பது நல்லது.
கோவிலுக்கு சென்று அங்கு வரும் ஒரு சுமங்கலி பெண்களுக்கு உங்கள் கையால் இந்த தாம்பூலத்தை கொடுப்பது மிக சிறப்பான பலனை தரும்
வீட்டில் உள்ள ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயார் படத்திற்கும் பூஜை செய்யுங்கள்.
நெய் விளக்கு ஏற்றி, தீப தூபங்கள் ஏற்றி வைத்து விடுங்கள்.
மஹாலக்ஷ்மிக்கு உங்களால் முடிந்த இனிப்பு பிரசாதம் நெய்வேத்தியமாக வையுங்கள்.
ஒரு சிறிய தட்டில் பச்சை கற்பூரம் வைத்து, அதை மஹாலக்ஷ்மியின் பாதத்தில் வைத்து விடுங்கள்.
பிறகு உங்களுடைய வேண்டுதலை ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயாரிடம் வைக்கலாம்.
அனைத்து செல்வங்களும் வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வழிபாட்டை முடித்து, இறுதியாக கற்பூர ஆரத்தி காண்பித்து இந்த பச்சை கற்பூரத்தை அப்படியே எடுத்துக் கொண்டு போய் பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள்.
ஆடி மாதம் கடைசி வெள்ளி, மஹாலக்ஷ்மியை நினைத்து இந்த பூஜையை செய்து பச்சை கற்பூரத்தை பீரோவில் வைத்தால் வருமானம் பெருகும் என்பது நம்பிக்கை.
வரலக்ஷ்மி விரதத்தன்று சொல்ல வேண்டிய மஹாலக்ஷ்மி துதி
அம்மா என்றே அழைத்திடவே ஆதி லட்சுமியாக வந்தருளிடு வாளே!
மண்ணா ளும்உயர் நிலையும் தந்தே புகழினை ஈவாள்தன லட்சுமியே!
மன்னாவென் றழைத் திடவே வைகுந்த வாசனொடு வந்தருள்வாளே மகாலட்சுமியே!
விண்ணாளும் தேவரும் போற்றும் தாயே! திருமகளே யுனைத்துதிக் கின்றோமே!
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·