- · 5 friends
-
I
பிச்சை பாத்திரம் (குட்டிக்கதை)
ஒரு மன்னன் தன் யானை மேல் நகரை சுற்றி பார்த்து கொண்டு இருந்தான் !
அப்பொழுது ஒரு பிச்சைக்காரன் வழியில் வர!
மன்னன் கோபத்தில்! பிச்சைக்காரன் பார்த்து கோபமாக ஒரு மன்னன் வரும் வழியில் ஒரு பிச்சைக்காரன் நீ நிற்க என்ன தைரியம் என்றான்,
அதற்கு அந்த பிச்சைக்காரன் நீ மன்னன் தானே எனக்கு பிச்சை போட்டு விட்டு போ! நான் உனக்கு வழி விடுகிறேன் என்று சொல்ல....
இவ்வளவுதானா இதோ என்று! யானையில் இருந்து இறங்கி அவன் கையில் இருந்த பண முடியை அவன் பிச்சை பாத்திரத்தில் போட்டான்!
என்ன ஆச்சரியம் அது அப்படியே விழுங்கியது.
மன்னனுக்கு ஒரே ஆச்சரியம் வீரர்களை அனுப்பி அரண்மனையில் இருந்து பொன்னும் பொருளும் எடுத்து வந்து பிச்சை பாத்திரத்தில் போட்டான்!
எவ்வளவு போட்டாலும் அது விழுங்கி கொண்டே இருந்தது......
அப்படியே மன்னனின் கஜானா முழுதும் காலியானது!
இப்பொழுது மன்னன் பிச்சைக்காரனிடம் ஐயா ! என்னை விட்டு விடுங்கள்! என்று யாசகம் கேட்க!
இப்ப பிச்சைக்காரன் சொன்னான் மன்னா இப்பொழுது சொல் யார் பிச்சைக்காரன்!
பிச்சைக்காரனிடம் யாசகம் கேட்கும் மன்னன் என்று சொல்ல!
மன்னன் தவறை உணர்ந்தவனாய் ஐயா ஒரு சின்ன சந்தேகம் அந்த பிச்சை பாத்திரத்தின் சிறப்பு என்ன என்று கேட்க அதற்கு அவன் சிரித்து கொண்டே சொன்னான்.....
அது ஒரு பேராசை கொண்ட பேரரசரின் மண்டை ஓட்டில் செய்த பிச்சை பாத்திரம் என்றான்.
-சுகி சிவம்
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·