- · 5 friends
-
I
தமிழ்நாடு என பெயர் காரணமாக இருந்தவர் யார் தெரியுமா?
தமிழ்நாடு என்ற வார்த்தையை உச்சரிக்கும் போதெல்லாம் யாரும், சங்கரலிங்கனார் எனப்படும் கண்டன் சங்கரலிங்கத்தை மறந்து விடக் கூடாது. இதை நம்முடைய சந்ததியினருக்கும் தாய்ப்பாலோடு புகட்டி வளர்க்க வேண்டும்.
. அப்படி என்னதான் செய்தார் சங்கரலிங்கம் ?
பிள்ளைகள்,
தங்கள் பள்ளியில் இதைப் பாடமாக படித்து தெரிந்து கொண்டிருக்கலாம், தெரிந்து கொள்ளாமலும் இருக்கலாம்...
.
சங்கரலிங்கம் யார்? அண்ணா யார்?
ம.பொ.சி. யார் ?
மொழி, மாநில உரிமைகளில் இவர்களின் பங்களிப்பு எவ்விதம் அமைந்திருந்தது, சொல்லிக் கொடுப்பது
நம் கடமையும் கூட.
தமிழ்நாடு பெயர் கேட்டு மனு
எந்தவொரு அரசியல் பின்னணியோ,
அரசியல் கட்சியில் பொறுப்பிலோ இல்லாதிருந்தவர், விருதுநகர் மாவட்டத்தின் மண்மலைமேடு கிராமத்தைச் சேர்ந்த சங்கரலிங்கம்.
அதே வேளையில் வசதியான பின்புலம் கொண்டிருந்தவர். எத்தனை காலம்தான்
என் தாய்த்தமிழ் பேசும் மாநிலத்தை
மெட்றாஸ் ஸ்டேட் என்று சொல்லிக் கொண்டிருப்பீர்கள், இனியும் அது முடியாது என்று வெளிப்படையாய் கொதித்தவர்.
பல மனுக்களை மாநிலத்தில்
ஆண்டுகொண்டிருந்த காங்கிரஸ் அரசுக்கும், மத்திய அரசுக்கும் கொடுத்துக் கொடுத்து சோர்ந்து போனார் சங்கரலிங்கம்.
உண்ணாநிலை முடிவு
அந்தவேளையில்தான் டெல்லியின் செங்கோட்டையே நடுங்கும் விதமாக, அகிம்சா முறையில் சாகும் வரை அல்லது கோரிக்கை நிறைவேறும் வரை தண்ணீர் கூட அருந்த மாட்டேன் என்று கூறி உண்ணா நிலை என்ற ஆயுதத்தை கையிலெடுத்தார். ஆனால்,
ஆட்சியாளர்கள் அதைக் கண்டு அச்சப்பட வில்லை. சங்கரலிங்கமும் தன் போராட்டத்தை கை விடவில்லை.
ஒரு நாள், இருநாள் அல்ல, தொடர்ந்து
75 நாட்கள்
உண்ணா நிலையிலேயே இருந்து தன்னுடைய கோரிக்கை நிறைவேறாமலே மூச்சை நிறுத்திக் கொள்ளும் நிலைக்கு,
அவர் உடல்நிலை போய் விட்டது.
உயிர்நீத்தார், சங்கரலிங்கம்
அக்டோபர் 10, 1956-
வீட்டின் முன்பாக உண்ணாநிலையில் இருந்த சங்கரலிங்கம் மயங்கிக் கீழே சாய்ந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு போய் காப்பாற்றி விடும் முயற்சியில் பலர் தீவிரம் காட்டினர்.
.
அவர்களின் முயற்சியை மதிப்பது போல அடுத்த இரண்டு நாட்கள் வரை மட்டுமே உயிரோடு இருந்த சங்கரலிங்கம் 13-ந்தேதி இதயத்துடிப்பை நிறுத்திக் கொண்டார்.
தனியாக மொழிவழி மாகாணம்,
அரசியல் தலைவர்கள் தங்களின் ஆடம்பர செலவினங்களை குறைக்க வேண்டும், இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கை கொண்டு வரவேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை முன் வைத்துதான் சங்கரலிங்கத்தின் உண்ணாநிலை பயணம் இருந்தது...
ஆனால்,
அதில் தமிழ்நாடு என்ற ஒரு கோரிக்கைப் பயணம் மட்டும் வெற்றிப் பயணமானது,
ஆனால், அதைப் பார்க்கத்தான் அவர் இல்லை.
சமாதானம் செய்த அண்ணா
சங்கரலிங்கத்தின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகப் போய்க் கொண்டிருப்பதைக் கண்டு அவர் வீட்டுக்கே காமராஜர்,
அண்ணா,
ஜீவா,
ம.பொ.சி. என்று பல தலைவர்கள் போய் பேசிப் பார்த்தும் சங்கரலிங்கம் மசியவில்லை.
என்னிடம் பேச்சு வார்த்தை நடத்தும் நேரம்,
மத்திய மாநில அரசுகளிடம் பேசிப் பாருங்கள் என்பது போலத்தான் அவர்களை பார்த்தார்.
.
சங்கரலிங்கம் தமிழுக்காக,
தமிழ்நாடு என்ற பெயருக்காக உண்ணா நிலையைக் கையிலெடுக்க, ம.பொ.சி.யின்
தமிழரசுக் கழகம் நடத்திய தொடர் போராட்டங்களே உத்வேகத்தை கொடுத்தன.
தோல்வியும், வெற்றியும்
1962--_ மார்ச்ச்சில் நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு பெயர் கோரும் தனி மசோதாவே கொண்டு வரப்பட்டும் அதை தோல்வியடையச் செய்தனர்.
.
1964- ஜனவரியில் மெட்றாஸ் மாநில சட்டமன்றத்திலும் தமிழ்நாடு பெயர் கோரும் தீர்மானம் தள்ளுபடியானது.
.
பெரும் முயற்சிக்குப் பின்னர்
23.11.1968-ல் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம் செய்யப் பட்டது.
ஜனவரி 14
1968-ல்
தமிழ்நாடு
என்ற பெயர் முழுமை பெற்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அண்ணாவின் பண்பு
... அண்ணா, உங்களுக்கு இப்போதுள்ள உடல் சூழ்நிலையில் ஓய்வு அவசியம்.
மெட்றாஸ் ஸ்டேட்டுக்கு தமிழ்நாடு என்று உங்கள் ஆட்சிகாலத்தில் தான் பெயர் சூட்டப் பெற்றது, இதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம். தயவு செய்து ஓய்வெடுங்கள், இப்போது இதில் பங்கேற்க வேண்டாம்... என்று தொண்டர்கள் மட்டுமல்ல, சிகிச்சை அளித்த மருத்துவர்களும் மன்றாடிக் கேட்டுக் கொண்டனர்.
ஆனால், அந்த பொன்னான தருணத்தை இழக்க விரும்பாத அண்ணா,
தமிழ்நாடு என்ற பெயர் சூட்டு விழாவில் பங்கேற்றார்,
ஒரு தமிழனாக..
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·