சினிமா செய்திகள்
எம். ஆர். ராதாவின் மனசு..
நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் ஒரு நாள் தன்னோட ஒப்பனையாளர் கஜபதியை அழைத்து கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்து இளங்கோவனைத் தெரியுமா என்று கேட்டார்நல்லா தெ
நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் ஒரு நாள் தன்னோட ஒப்பனையாளர் கஜபதியை அழைத்து கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்து இளங்கோவனைத் தெரியுமா என்று கேட்டார்நல்லா தெ
நடிகர் ரஞ்சித்தின் முன்னாள் மனைவி கூறிய உண்மை
90 ஆம் காலக்கட்டங்களில் பிரபல நடிகர் ரஞ்சித். இவர் இயக்கிய கவுண்டம்பாளையம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகர் ரஞ்சித் 1999
ஷாலின் ஷோயா கட்டிய கனவு வீடு
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ஷாலின் ஷோயா. சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர் ஒரு சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். மலையாள
தாயின் மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்ட நடிகர்
கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் சரோஜா சஞ்சீவ் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரின் இறுதிச்
மூன்றாவது திருமணம் செய்ய போகும் நடிகர்
இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரரான நடிகர் பாலா  தமிழில் அன்பு என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் சுமாராக ஓடிய போதும், இந்த படத்தில் வரும்
அமெரிக்காவில் ஷார்ட் உடையில் நடிகை அஞ்சலி
தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பாப்புலர் நடிகை அஞ்சலி. அவருக்கு ஏராளம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.தற்போது நியூயார்க்கில் இருக்கும் அஞ்சலி ஷார்ட் உடைய
கங்குவா படம் பற்றிய அப்டேட்
நடிகர் சூர்யா நடித்துள்ள படங்களில் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் படமாக உள்ளது கங்குவா.சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த பட
கனிகாவிற்கு வளையல் அணியும் விழா
கடந்த சில நாட்களுக்கு முன் சினேகன்-கனிகா இருவரும் கர்ப்பமாக இருப்பதாக சந்தோஷ செய்தி வெளியிட்டார்கள். இந்த நிலையில் கனிகாவின் 5வது மாத நிகழ்ச்சி அழகாக
9 நாள் முடிவில் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தின் மொத்த வசூல்
தனக்கு கிடைத்த வாய்ப்பை வேட்டையன் என்ற படத்தை இயக்கி தனது திறமையை வெளிக்காட்டி இருக்கிறார் ஞானவேல்.இப்படத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரி
நடிகை ரம்யா கிருஷ்ணன் விவகாரத்து செய்கிறாரா?
தமிழில் 1983ம் ஆண்டு வெளியான வெள்ளை மனசு என்கிற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.ஐட்டம் டான்ஸ், அம்மன் வேடம், போல்டான கதாபாத
எஸ்.எஸ் சந்திரன் வேண்டாம்; கவுண்டமணியை போடுங்க - நடிகர் ராமராஜன்
கரகாட்டக்காரனில் கண்டிஷன் போட்டு ஜெயித்த ராமராஜன்கரகாட்டக்கரன் படத்தில் கவுண்டமணி இல்லை என்றால் நான் படத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று ராமராஜன்
Ads
 ·   ·  1653 news
  •  ·  0 friends
  • 1 followers

இலங்கையில் மிகப் பெரிய புவிநடுக்கம் ஏற்பட வாய்ப்பு - புவியியற்துறை விரிவுரையாளர் பிரதீபராஜா எச்சரிக்கை

இலங்கையின் அனைத்துப் பகுதிகளும் மிகப் பெரிய புவிநடுக்கத்திற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளன என்பது நிஜம் என யாழ்.பல்கலைக்கழக புவியியற்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.

நேற்றையதினம் (18) இரவு சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டதை தொடர்ந்து நில அதிர்வு தொடர்பாக நாகமுத்து பிரதீபராஜா தனது முகப்புத்தக பதிவில் விளக்கியுள்ளார்

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்

இலங்கையின் நிலப்பகுதிகளிலும், இலங்கையை அண்மித்த கடல் பகுதிகளிலும் கடந்த 05 ஆண்டுகளில் 29 நில அதிர்வுகள் அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவை புவி நடுக்க பதிவு கருவியில் குறைந்த அளவுத் திட்டத்தில் ( ரிக்டர்) இருந்தாலும் கூட, இவை நாம் ஒரு மிகப்பெரிய புவி நடுக்க வாய்ப்பைக் கொண்டிருக்கின்றோம் என்பதனை வெளிப்படுத்துகின்றன.

பூமி பெரியதும் சிறியதுமான பல கவசத்தகடுகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை இந்தோ - அவுஸ்திரேலியா கவசத்தகட்டின் வட மேற்கு பிராந்தியத்தில் அமைந்துள்ளது.

இலங்கையில் அண்மையில் அதிகமாக நிகழும் புவி நடுக்க அதிர்வுகள் இலங்கையின் கீழான கவசத்தகடுகளில் (சிறிய தகடுகள் நிறைய உண்டு) சிறிய அளவிலான மாற்றங்கள்( விலகல், ஒருங்கல் , அமிழ்தல்) ஏற்படுவதை வெளிப்படுத்தியுள்ளன.  

இந்த மாற்றங்கள் பெரிதாக அமையும் சந்தர்ப்பத்தில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய புவிநடுக்கங்கள் இலங்கையில் தோன்றலாம்.

உலகில் முன்னெதிர்வு கூற முடியாத மிகப்பெரும் உயிரழிவுகளை ஏற்படுத்தக்கூடிய இயற்கை அனர்த்தங்களில் புவி நடுக்கம் முதன்மையானது. ஆனால் சிறப்பான விழிப்புணர்வுடன் இருந்தால் ஓரளவு பாதிப்புக்களை குறைக்கலாம்.

இலங்கையில் புவிநடுக்கத்தினை பதிவு செய்யும் புவி நடுக்க பதிவு கருவிகள் கண்டி-பள்ளேகலவிலும், அனுராதபுரம்- மிகிந்தலையிலும், மட்டக்களப்பிலும் மாத்தறையிலும் உள்ளன. வவுனியாவில் ஏற்பட்ட நில அதிர்வு மிகிந்தலையில் உள்ள புவி நடுக்க பதிவு கருவியில் பதிவாகியிருக்கும்.  எனினும் உத்தியோகபூர்வ அறிவித்தல் இதுவரை வெளியாகவில்லை.

எவ்வாறாயினும் இலங்கையின் அனைத்துப் பகுதிகளும் மிகப் பெரிய புவிநடுக்கத்திற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளன என்பது நிஜம் என மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

00

  • 466
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads